Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
48 : 11

قِیْلَ یٰنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَیْكَ وَعَلٰۤی اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ ؕ— وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ یَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِیْمٌ ۟

11.48. அல்லாஹ் நூஹிடம் கூறினான்: “நூஹே! கப்பலிலிருந்து நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் உம்மீதும், உமக்குப் பிறகு உருவாகும் உம்முடன் கப்பலில் இருந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் மீதும் அல்லாஹ் பொழிந்த ஏராளமான அருட்கொடைகளைக் கொண்டும் பூமியில் இறங்குவீராக. அவர்களின் சந்ததிகளிலிருந்து நிராகரிப்பாளர்களும் தோன்றுவார்கள். நாம் இவ்வுலக வாழ்வில் அவர்களை அனுபவிக்கச் செய்வோம். அவர்கள் வாழ்வதற்குத் தேவையானவற்றை வழங்குவோம். பின்னர் மறுமை நாளில் வேதனை மிக்க தண்டனை நம்மிடமிருந்து அவர்களுக்கு கிடைக்கும். info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• لا يملك الأنبياء الشفاعة لمن كفر بالله حتى لو كانوا أبناءهم.
1. தங்களின் பிள்ளைகளாக இருந்தாலும், அல்லாஹ்வை நிராகரித்தவர்களுக்காக பரிந்துரை செய்யும் அதிகாரம் இறைத்தூதர்களுக்குக் கூட இல்லை. info

• عفة الداعية وتنزهه عما في أيدي الناس أقرب للقبول منه.
2. அழைப்பாளனின் பக்குவமும் மக்களிடமுள்ளவற்றை விட்டும் ஒதுங்கியிருப்பதும் அவரை மக்கள் ஏற்றுக்கொள்வதற்கு நெருக்கமானதாகும். info

• فضل الاستغفار والتوبة، وأنهما سبب إنزال المطر وزيادة الذرية والأموال.
3. பாவமன்னிப்புக் கோருதல் மற்றும் அல்லாஹ்வின்பால் மீளுதலின் சிறப்பு தெளிவாகிறது. அவை மழை பொழிவதற்கும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும்அதிகரிப்பு ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கின்றது. info