Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
62 : 11

قَالُوْا یٰصٰلِحُ قَدْ كُنْتَ فِیْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَاۤ اَتَنْهٰىنَاۤ اَنْ نَّعْبُدَ مَا یَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟

11.62. அவருடைய சமூகத்தார் அவரிடம் கூறினார்கள்: “ஸாலிஹே! உமது இந்த அழைப்பிற்கு முன்னால் எங்களிடையே உயர்ந்த அந்தஸ்தை நீர் பெற்றிருந்தீர். நீர் உபதேசம் செய்து, ஆலோசனை வழங்கும் அறிவாளியாக, வருவீர் என்றே நாங்கள் எதிர்பார்த்தோம். -ஸாலிஹே!- எங்கள் முன்னோர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்று நீர் அழைக்கும் விஷயத்தில் நீர் அல்லாஹ்வின் மீது பொய் கூறுவதாக உம்மைச் சந்தேகிக்கும் அளவுக்கு, நிச்சயமாக நாங்கள் சந்தேகத்தில் இருக்கின்றோம்.” info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• من وسائل المشركين في التنفير من الرسل الاتهام بخفة العقل والجنون.
1. நபிமார்களை விட்டும் வெறுப்பூட்டுவதற்கான இணைவைப்பாளர்களின் வழிமுறைகளில் ஒன்றே, புத்திக்கோளாறு, பைத்தியம் என்ற குற்றங்களைச் சுமத்துவதாகும். info

• ضعف المشركين في كيدهم وعدائهم، فهم خاضعون لله مقهورون تحت أمره وسلطانه.
2.தமது சூழ்ச்சியிலும் எதிர்ப்பிலும் இணைவைப்பாளர்களின் பலவீனம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் அவர்கள் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள், அவனது கட்டளைக்கும் அதிகாரத்திற்கும் கீழ் அடக்கப்பட்டுள்ளனர். info

• أدلة الربوبية من الخلق والإنشاء مقتضية لتوحيد الألوهية وترك ما سوى الله.
3. படைத்தல், உருவாக்குதல் ஆகிய தெய்வீகத் தன்மைக்கான ஆதாரங்கள், வணக்கத்தில் அல்லாஹ்வை மாத்திரமே ஏகத்துவப்படுத்தி அல்லாஹ்வைத் தவிரவுள்ளவர்களை விட்டுவிட வேண்டும் என்பதை வேண்டி நிற்பனவாகும். info