Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
63 : 11

قَالَ یٰقَوْمِ اَرَءَیْتُمْ اِنْ كُنْتُ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّیْ وَاٰتٰىنِیْ مِنْهُ رَحْمَةً فَمَنْ یَّنْصُرُنِیْ مِنَ اللّٰهِ اِنْ عَصَیْتُهٗ ۫— فَمَا تَزِیْدُوْنَنِیْ غَیْرَ تَخْسِیْرٍ ۟

11.63. ஸாலிஹ் தம் சமூகத்தாரிடம் மறுத்தவராக கூறினார்: “என் சமூகமே! நான் என் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஆதாரத்தின் மீதிருந்து, அவன் எனக்கு தூதுத்துவம் என்னும் அருளையும் வழங்கியிருக்க, அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டதை விட்டுவிட்டு அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னை யார்தான் காப்பாற்ற முடியும்? நீங்கள் எனக்கு வழிகேட்டையும் அவனது திருப்பொருத்தத்தை விட்டும் விலகிச் செல்வதையே அதிகரிக்கிறீர்கள். info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• عناد واستكبار المشركين حيث لم يؤمنوا بآية صالح عليه السلام وهي من أعظم الآيات.
1.ஸாலிஹ் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்று மிகப் பெரிய சான்றாகும். ஆயினும் பிடிவாதத்திலே நிலைத்து, பெருமையடித்து இருந்த இணைவைப்பாளர்கள் அந்த சான்றுகளை நம்பிக்கை கொள்ளவில்லை. info

• استحباب تبشير المؤمن بما هو خير له.
2. நம்பிக்கையாளனுக்கு நலவான ஒன்றை கொண்டு நற்செய்தி கூறுவது விரும்பத்தக்கது. info

• مشروعية السلام لمن دخل على غيره، ووجوب الرد.
3. மற்றவர்களிடம் நுழையும் போது சலாம் கூற வேண்டும். அதற்குப் பதிலளிப்பது கட்டாயமாகும். info

• وجوب إكرام الضيف.
4. விருந்தாளியை உபசரிப்பது கடமையாகும். info