Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
69 : 20

وَاَلْقِ مَا فِیْ یَمِیْنِكَ تَلْقَفْ مَا صَنَعُوْا ؕ— اِنَّمَا صَنَعُوْا كَیْدُ سٰحِرٍ ؕ— وَلَا یُفْلِحُ السَّاحِرُ حَیْثُ اَتٰی ۟

20.69. உம்முடைய வலது கையிலுள்ள கைத்தடியை எறிவீராக. அது பாம்பாக மாறி அவர்கள் உருவாக்கிய சூனியங்கள் அனைத்தையும் விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியது சூனியச் சூழ்ச்சியே. சூனியக்காரன் எங்கிருந்தாலும் தனது நோக்கத்தில் வெற்றிபெற மாட்டான். info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• لا يفوز ولا ينجو الساحر حيث أتى من الأرض أو حيث احتال، ولا يحصل مقصوده بالسحر خيرًا كان أو شرًّا.
1. சூனியக்காரன் பூமியில் எங்கிருந்தாலும் என்ன தந்திரம் செய்தாலும் அவனால் ஒருபோதும் வெற்றி பெறவோ தப்பவோ முடியாது. தனது நல்ல நோக்கத்தையோ தீய நோக்கத்தையோ சூனியத்தின் மூலம் அடைய முடியாது. info

• الإيمان يصنع المعجزات؛ فقد كان إيمان السحرة أرسخ من الجبال، فهان عليهم عذاب الدنيا، ولم يبالوا بتهديد فرعون.
2. இறை நம்பிக்கை அற்புதங்களை நிகழ்த்தும். சூனியக்காரர்களின் நம்பிக்கை மலையை விட உறுதியுடையதாகக் காணப்பட்டது. எனவேதான் உலக வேதனையை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. பிர்அவ்னின் அச்சுறுத்தலையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. info

• دأب الطغاة التهديد بالعذاب الشديد لأهل الحق والإمعان في ذلك للإذلال والإهانة.
3. சத்தியவாதிகளை அவமானப்படுத்தவும் இழிவுபடுத்தவும் கடுமையான வேதனையைக் கொண்டு அவர்களை அச்சுறுத்துவது, அதில் முழுமூச்சாக ஈடுபடுவது அநியாயக்காரர்களின் வழமையாகும். info