Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
157 : 26

فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِیْنَ ۟ۙ

26.157. அவர்கள் அதனைக் கொன்றுவிட முடிவு செய்தார்கள். அவர்களில் மிகவும் துஷ்டன் அதனைக் கொன்றுவிட்டான். நிச்சயமாக வேதனை தங்கள் மீது சந்தேகம் இல்லாமல் உறுதியாக இறங்கப்போகிறது என்பதை அறிந்தவுடன் தாங்கள் செய்த செயலுக்காக வருத்தப்பட்டு நின்றார்கள். ஆனால் வேதனையைக் கண்ணால் காணும் போது வருத்தப்படுவது எந்தப் பயனையும் தராது. info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• توالي النعم مع الكفر استدراج للهلاك.
1. நிராகரிப்பில் இருக்கும் போது அருள்கள் கிடைப்பது அழிவிற்கு சிறிது சிறிதாக வழிவகுப்பதாகும். info

• التذكير بالنعم يُرتجى منه الإيمان والعودة إلى الله من العبد.
2. அருட்கொடைகளை நினைவூட்டுவதன் மூலம் அடியான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு அவன் பக்கம் திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. info

• المعاصي هي سبب الفساد في الأرض.
3. பாவங்கள் பூமியில் குழப்பம் ஏற்பட காரணமாக இருக்கின்றன. info