Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
46 : 34

قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ— اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَكَّرُوْا ۫— مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ— اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ لَّكُمْ بَیْنَ یَدَیْ عَذَابٍ شَدِیْدٍ ۟

34.46. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவுறுத்துகிறேன். அது நீங்கள் மனஇச்சையை விட்டுவிட்டு இருவர் இருவராகவோ தனித்தனியாகவோ உங்கள் தோழரின் நடத்தையைக் குறித்து, அவரது அறிவு, வாய்மை, நம்பகத் தன்மை ஆகியவற்றைக்குறித்து சிந்தனை செய்யுங்கள். திட்டமாக அவர் பைத்தியக்காரர் அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகிவிடும். நீங்கள் இணைவைப்பை விட்டும் திருந்தாவிட்டால் உங்களுக்கு முன்னால் இருக்கும் கடுமையான வேதனையைக் குறித்து உங்களை எச்சரிப்பவரே அவர். info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• التقليد الأعمى للآباء صارف عن الهداية.
1. முன்னோர்களை குருட்டுத்தனமாகப் பின்பற்றுவது நேர்வழியைவிட்டுத் திருப்பக்கூடியதாகும். info

• التفكُّر مع التجرد من الهوى وسيلة للوصول إلى القرار الصحيح، والفكر الصائب.
2.மனஇச்சையிலிருந்து நீங்கி சிந்தனை செய்வது சரியான தீர்மானம் மற்றும் சரியான சிந்தனைக்கான ஒரு வழியாகும். info

• الداعية إلى الله لا ينتظر الأجر من الناس، وإنما ينتظره من رب الناس.
3. அல்லாஹ்வின்பால் அழைக்கும் அழைப்பாளன் மக்களிடம் கூலியை எதிர்பார்க்கமாட்டான். நிச்சயமாக மனிதர்களின் இறைவனிடமே அதனை எதிர்பார்ப்பான். info