Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
18 : 48

لَقَدْ رَضِیَ اللّٰهُ عَنِ الْمُؤْمِنِیْنَ اِذْ یُبَایِعُوْنَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِیْ قُلُوْبِهِمْ فَاَنْزَلَ السَّكِیْنَةَ عَلَیْهِمْ وَاَثَابَهُمْ فَتْحًا قَرِیْبًا ۟ۙ

48.18. ஹுதைபிய்யா உடன்படிகையின்போது மரத்திற்குக் கீழே உம்மிடம் உறுதிமொழி அளித்த நம்பிக்கையாளர்களைக் குறித்து அல்லாஹ் திருப்தியடைந்தான். அவர்களின் உள்ளங்களில் நம்பிக்கையும் உளத்தூய்மையும் உண்மையும் உள்ளது என்பதை அவன் அறிந்துகொண்டான். எனவேதான் அவர்களின் உள்ளங்களில் அமைதியை இறக்கினான். மக்காவில் நுழைவது அவர்களுக்குத் தவறியதற்குப் பகரமாக அல்லாஹ் அவர்களுக்கு கைபர் வெற்றி என்னும் நெருக்கமான ஒரு வெற்றியைக் கூலியாக வழங்கினான். info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• إخبار القرآن بمغيبات تحققت فيما بعد - مثل الفتوح الإسلامية - دليل قاطع على أن القرآن الكريم من عند الله.
1. -இஸ்லாமிய வெற்றிகள் போன்ற- பின்பு நடந்தேறிய முன்னறிவிப்புகளைக் குர்ஆன் தெரிவித்திருப்பது, நிச்சயமாக அல்குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள வேதம் என்பதற்கான திட்டவட்டமான சான்றாகும். info

• تقوم أحكام الشريعة على الرفق واليسر.
2. மார்க்கத்தின் சட்டங்கள் மென்மை மற்றும் இலகு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டவையாகும். info

• جزاء أهل بيعة الرضوان منه ما هو معجل، ومنه ما هو مدَّخر لهم في الآخرة.
3. பைஅத்துர் ரிள்வான் என்றும் உறுதிமொழியில் பங்கேற்றவர்களுக்கான கூலியில் சிலவை விரைவாகவும் சிலவை மறுமை நாளுக்காகவும் சேகரித்துவைக்கப்பட்டுள்ளது. info

• غلبة الحق وأهله على الباطل وأهله سُنَّة إلهية.
4. சத்தியமும் சத்தியவாதிகளும் அசத்தியத்தையும் அசத்தியவாதிகளையும் மிகைப்பது இறைநியதியாகும். info