Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
62 : 56

وَلَقَدْ عَلِمْتُمُ النَّشْاَةَ الْاُوْلٰی فَلَوْلَا تَذَكَّرُوْنَ ۟

56.62. நாம் உங்களை முதன்முதலில் எவ்வாறு படைத்துள்ளோம் என்பதை நீங்கள் அறிந்தேயுள்ளீர்கள். எனவே நீங்கள் படிப்பினை பெற மாட்டீர்களா? உங்களை முதன்முதலில் படைத்ததற்கு ஆற்றலுடையவன் நீங்கள் மரணித்ததன் பின் மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்பவும் ஆற்றல் பெற்றவன் என்பதை அறிந்துகொள்ள மாட்டீர்களா? info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• دلالة الخلق الأول على سهولة البعث ظاهرة.
1. முதன் முதலில் படைத்திருப்பது மீண்டும் இலகுவாக உயிர்கொடுத்து எழுப்புவதற்கான வெளிப்படையான ஆதாரமாகும். info

• إنزال الماء وإنبات الأرض والنار التي ينتفع بها الناس نعم تقتضي من الناس شكرها لله، فالله قادر على سلبها متى شاء.
2. மழை பொழிய வைத்தல், பூமியிலிருந்து தாவரங்களை முளைப்பித்தல், மக்களுக்குப் பயனளிக்கும் நெருப்பை ஏற்படுத்துதல் ஆகிய அருட்கொடைகள் அல்லாஹ்வுக்கு மனிதர்கள் நன்றி செலுத்துவதை வேண்டி நிற்கிறது. அல்லாஹ் நாடும் போது அவற்றைப் பறிப்பதற்கும் ஆற்றலுடையவனாவான். info

• الاعتقاد بأن للكواكب أثرًا في نزول المطر كُفْرٌ، وهو من عادات الجاهلية.
3. மழை பொழிவதில் கோள்களுக்கும் பங்குண்டு என்ற நம்பிக்கை நிராகரிப்பாகும். அது அறியாமைக்கால வழமையாகும். info