Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
7 : 58

اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— مَا یَكُوْنُ مِنْ نَّجْوٰی ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰی مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَیْنَ مَا كَانُوْا ۚ— ثُمَّ یُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا یَوْمَ الْقِیٰمَةِ ؕ— اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

58.7. -தூதரே!- நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான் என்பதையும் அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர் உரையாடினால் நான்காவதாக அவர்களுடன் தன் அறிவால் அல்லாஹ் இருக்கின்றான். ஐந்து பேர் உரையாடினால் ஆறாவதாக அவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். அதனைவிட குறைவாக இருந்தாலும் அல்லது கூடுதலாக இருந்தாலும் அவர்கள் எங்கிருந்த போதிலும் அவர்களுடன் தன் அறிவால் அல்லாஹ் இருக்கின்றான். அவர்கள் பேசும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. பின்னர் மறுமை நாளில் அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• مع أن الله عالٍ بذاته على خلقه؛ إلا أنه مطَّلع عليهم بعلمه لا يخفى عليه أي شيء.
1. நிச்சயமாக அல்லாஹ் தனது உள்ளமையின் மூலம் தனது படைப்பினங்களுக்கு மேல் இருந்தாலும் தனது அறிவின் மூலம் அவர்களைப் பார்த்துக்கொண்டுதான் உள்ளான். எதுவும் அவனுக்கு மறைவானதல்ல. info

• لما كان كثير من الخلق يأثمون بالتناجي أمر الله المؤمنين أن تكون نجواهم بالبر والتقوى.
2, மனிதர்களில் அதிகமானவர்கள் இரகசியம் பேசி தவறிழைப்பதனால் இறையச்சம், நல்லவற்றைக் கொண்டு இரகசியம் பேசுமாறு நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் ஏவியுள்ளான். info

• من آداب المجالس التوسيع فيها للآخرين.
3.மற்றவர்களுக்கு இடம்கொடுப்பதற்காக விசாலமாக அமர்வது சபை ஒழுக்கங்களில் உள்ளதாகும். info