Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
10 : 62

فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟

62.10. நீங்கள் ஜுமுஆ தொழுகையை நிறைவுசெய்துவிட்டால் ஹலாலாக சம்பாதிப்பை தேடி, உங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பூமியில் பரவிவிடுங்கள். அனுமதிக்கப்பட்ட சம்பாதிப்பு, இலாபத்தின் ஊடாக நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். நீங்கள் உங்களின் வாழ்வாரத் தேடலுக்கிடையிலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் வாழ்வாதார தேடல் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதை விட்டும் உங்களை மறக்கடிக்கச் செய்துவிடக்கூடாது. அதனால் நீங்கள் விரும்புவதைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றியடையலாம். info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• وجوب السعي إلى الجمعة بعد النداء وحرمة ما سواه من الدنيا إلا لعذر.
1. ஜுமுஆவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டவுடன் அதன்பால் விரைவது கட்டாயமாகும். தகுந்த காரணமின்றி உலக அலுவல் எதிலும் ஈடுபடுவது ஹராமாகும். info

• تخصيص سورة للمنافقين فيه تنبيه على خطورتهم وخفاء أمرهم.
2. நயவஞ்சகர்களைப்பற்றி மாத்திரம் குறிப்பிடுவதற்கு தனியொரு அத்தியாயத்தை அருளியிருப்பது அவர்களின் பாரதூரத்துக்கும் மறைவான தன்மைக்கும் சான்றாகும். info

• العبرة بصلاح الباطن لا بجمال الظاهر ولا حسن المنطق.
3. உள்ரங்கம் சீராகுவதே கவனத்தில் கொள்ளப்படுமே தவிர அழகான தோற்றமோ, நாவன்மையோ அல்ல. info