Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
11 : 64

مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ یَهْدِ قَلْبَهٗ ؕ— وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟

64.11. ஒருவருக்கு ஏதேனும் துன்பம் அவரிலோ, அவரது சொத்திலோ, பிள்ளைகளிலோ ஏற்பட்டால் அது அல்லாஹ் ஏற்படுத்திய விதியினாலாகும். யார் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய விதியின்மீதும் நம்பிக்கைகொண்டாரோ அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் அவரது உள்ளம் அல்லாஹ்வின் ஏவலுக்குக் கட்டுப்படுவதற்கும் அவனது விதியை பொருந்திக் கொள்வதற்கும் அவருக்கு வழிகாட்டுவான். அவன் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன். எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• مهمة الرسل التبليغ عن الله، وأما الهداية فهي بيد الله.
1. அல்லாஹ்வை பற்றி எடுத்துரைப்பதே தூதர்களின் பணியாகும். நேர்வழியளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வின் கைவசமே உள்ளது. info

• الإيمان بالقدر سبب للطمأنينة والهداية.
2. விதியை நம்புவது நிம்மதிக்கும் நேர்வழிக்கும் காரணமாக அமையும். info

• التكليف في حدود المقدور للمكلَّف.
3. (மனிதனுக்கு) இயன்ற அளவே பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது. info

• مضاعفة الثواب للمنفق في سبيل الله.
4. அல்லாஹ்வின் பாதையில் செலவளிப்பவனுக்கு நன்மை பன்மடங்காக வழங்கப்படல். info