Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
9 : 64

یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟

64.9. -தூதரே!- அல்லாஹ் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. அந்த நாளே நிராகரிப்பாளர்களின் நஷ்டமும் குறையும் வெளிப்படும் நாளாகும். நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நரகவாசிகளுக்குரிய தங்குமிடங்களைப் பெறுவார்கள். நரகவாசிகள் நரகத்தில் சுவனவாசிகளின் தங்குமிடங்களைப் பெறுவார்கள். யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிவாரோ அல்லாஹ் அவரது பாவங்களைப் போக்கி சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதில் இருந்து அவர்கள் வெளியேறமாட்டார்கள். அவற்றின் இன்பங்கள் என்றும் முடிவடையாததாகும். அவ்வாறு அவர்கள் பெறுவதே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும். info
التفاسير:
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• من قضاء الله انقسام الناس إلى أشقياء وسعداء.
1. மக்கள் நற்பாக்கியசாலிகள், துர்பாக்கியசாலிகள் என்னும் இரு பிரிவினராகக் காணப்படுவது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். info

• من الوسائل المعينة على العمل الصالح تذكر خسارة الناس يوم القيامة.
2. நல்லமல்கள் செய்வதற்கு வழிவகுக்கும் சாதனங்களில் உள்ளவையே மறுமையில் மனிதர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நினைவு கூர்வதாகும். info