Alkʋrãɑn wɑgellã mɑɑnɑ wã lebgre - Alkʋrãanã tafsɩɩrã sẽn kʋʋg koεεga, b sẽn lebg ne Tamu goamã.

external-link copy
5 : 65

ذٰلِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗۤ اِلَیْكُمْ ؕ— وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یُكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُعْظِمْ لَهٗۤ اَجْرًا ۟

65.5. -நம்பிக்கையாளர்களே!- மேற்கூறப்பட்ட விவாகரத்து, திரும்ப அழைத்துக்கொள்ளுதல் மற்றும் கால அளவுக்கான சட்டங்கள் நீங்கள் அவற்றின்படி செயல்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு அளித்த கட்டளைகளாகும். யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவர்கள் செய்த பாவங்களை அவன் போக்கி விடுவான். மறுமையில் அவர்களுக்குப் பெரும் கூலியை வழங்குவான். அது, அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதும் என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகளை பெறுவதுமாகும். info
التفاسير: |
Sẽn be Aayar-rãmbã yõod-rãmba seb-neg-kãngã pʋgẽ:
• خطاب النبي صلى الله عليه وسلم خطاب لأمته ما لم تثبت له الخصوصية.
1. தூதரை விளித்து உரையாடுவது, அவருக்கு மட்டுமே உரித்தானது என்பது உறுதியாகாதவரை அவரது சமூகத்தை விளித்து உரையாடப்பட்டதாகவே கருதப்படும். info

• وجوب السكنى والنفقة للمطلقة الرجعية.
2. திரும்ப அழைத்துக்கொள்ளத்தக்க விவாகரத்து வழங்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடமும் செலவீனமும் வழங்குவது கணவன்மீது கட்டாயக் கடமையாகும். info

• النَّدْب إلى الإشهاد حسمًا لمادة الخلاف.
3. முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக சாட்சிகளை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. info

• كثرة فوائد التقوى وعظمها.
4. இறையச்சத்தின் அதிக பயன்களும் மகிமைகளும். info