ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫

external-link copy
108 : 2

اَمْ تُرِیْدُوْنَ اَنْ تَسْـَٔلُوْا رَسُوْلَكُمْ كَمَا سُىِٕلَ مُوْسٰی مِنْ قَبْلُ ؕ— وَمَنْ یَّتَبَدَّلِ الْكُفْرَ بِالْاِیْمَانِ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟

2.108. அல்லாஹ்வின்மீது நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் உங்கள் தூதரிடம் இதற்கு முன்னர் மூசாவின் சமூகம் கேட்டதுபோன்று ஆட்சேபிக்கும் தொனியில் கேள்வி கேட்காதீர்கள். “அவர்கள் தங்கள் தூதரிடம் ‘அல்லாஹ்வை எங்களுக்கு வெளிப்படையாகக் காட்டு’ என்று கேட்டார்கள். (4:153) எவர் ஈமானை நிராகரிப்பாக மாற்றிக் கொண்டாரோ அவர் நேரான வழியை விட்டும் தவறிவிட்டார். info
التفاسير:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• أن الأمر كله لله، فيبدل ما يشاء من أحكامه وشرائعه، ويبقي ما يشاء منها، وكل ذلك بعلمه وحكمته.
1. அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வின் வசமே உள்ளது. அவன் தன்னுடைய மார்க்கத்தில் தான் விரும்பியவற்றை மாற்றுகிறான், தான் விரும்பியவற்றை நிலைத்திருக்கச் செய்கிறான். அனைத்தும் அவனுடைய அறிவு மற்றும் ஞானத்தின் பிரகாரமே நடக்கின்றன. info

• حَسَدُ كثيرٍ من أهل الكتاب هذه الأمة، لما خصَّها الله من الإيمان واتباع الرسول، حتى تمنوا رجوعها إلى الكفر كما كانت.
2. ஈமானைக் கொண்டும் தூதரைப் பின்பற்றுவதைக் கொண்டும் அல்லாஹ் இந்த சமூகத்தை சிறப்பித்த காரணத்தால், வேதக்காரர்களில் பெரும்பாலோர் இந்த சமூகத்தின் மீது பொறாமை கொண்டுள்ளனர். அதனால் இந்த முஸ்லிம் சமூகம் தங்களின் முந்தைய நிலையான நிராகரிப்புக்கே திரும்பிவிட வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தார்கள். info