Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߞߟߏߝߋ߲ ߠߎ߬   ߟߝߊߙߌ ߘߏ߫:
ثَمٰنِیَةَ اَزْوَاجٍ ۚ— مِنَ الضَّاْنِ اثْنَیْنِ وَمِنَ الْمَعْزِ اثْنَیْنِ ؕ— قُلْ ءٰٓالذَّكَرَیْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَیَیْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَیْهِ اَرْحَامُ الْاُنْثَیَیْنِ ؕ— نَبِّـُٔوْنِیْ بِعِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟ۙ
6.143. உங்களுக்காக அவன் எட்டு வகைகளை படைத்துள்ளான். அவற்றில் செம்மறியாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் வெள்ளாட்டு வகையில் ஆண், பெண் சோடியும் உள்ளன. தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “அவன் இரண்டு ஆண் இனங்களை - அவை ஆண் என்பதால் - தடைசெய்தானா?” அவர்கள் ‘ஆம்’ என்று கூறினால், “அவ்வாறெனில் ஏன் நீங்கள் பெண்ணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் என்பதால் அவற்றைத் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், ““அவ்வாறெனில் ஏன் நீங்கள் ஆணினத்தையும் தடைசெய்கிறீர்கள்? அல்லது பெண் இனங்களின் கருவில் உள்ளதை அவன் தடைசெய்து விட்டானா?” என்று கேட்பீராக. அவர்கள், ‘ஆம்’ என்று கூறினால், “பெண் இனங்களின் வயிற்றுள்ளதை ஆண் என்றும் பெண் என்றும் வேறுபடுத்தி அவற்றை ஏன் தடைசெய்கிறீர்கள்? இணைவைப்பாளர்களே! அல்லாஹ்வே இத்தடையை விதித்தான் என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் சரியான ஆதாரத்தை எனக்குக் கூறுங்கள்” என்று கேட்பீராக.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَمِنَ الْاِبِلِ اثْنَیْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَیْنِ ؕ— قُلْ ءٰٓالذَّكَرَیْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَیَیْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَیْهِ اَرْحَامُ الْاُنْثَیَیْنِ ؕ— اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ وَصّٰىكُمُ اللّٰهُ بِهٰذَا ۚ— فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا لِّیُضِلَّ النَّاسَ بِغَیْرِ عِلْمٍ ؕ— اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
6.144. எட்டு வகைகளில் மீதமுள்ளவை, ஒட்டக சோடிகளும், மாட்டில் இருவகைகளுமாகும். தூதரே! நீர் இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “ஆண் என்பதால் அல்லாஹ் அவற்றை தடைசெய்துள்ளானா? அல்லது பெண் என்பதால் தடைசெய்துள்ளானா? அல்லது கருவறையில் இருந்ததனாலா? அல்லது இணைவைப்பாளர்களே! உங்களின் வாதப்படி அல்லாஹ் இந்த கால்நடைகளைத் தடைசெய்யும்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா? நேரான பாதையைவிட்டும் மக்களை வழிகெடுப்பதற்காக ஆதாரமின்றி, அல்லாஹ் தடைசெய்யாததை அவன் தடைசெய்ததாகக் கூறி, அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுபவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டியதனால் அநியாயக்காரர்களுக்கு அவன் ஒருபோதும் நேர்வழிபெற உதவிபுரியமாட்டான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
قُلْ لَّاۤ اَجِدُ فِیْ مَاۤ اُوْحِیَ اِلَیَّ مُحَرَّمًا عَلٰی طَاعِمٍ یَّطْعَمُهٗۤ اِلَّاۤ اَنْ یَّكُوْنَ مَیْتَةً اَوْ دَمًا مَّسْفُوْحًا اَوْ لَحْمَ خِنْزِیْرٍ فَاِنَّهٗ رِجْسٌ اَوْ فِسْقًا اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ ۚ— فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ رَبَّكَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
6.145. தூதரே! நீர் கூறுவீராக: “அறுக்கப்படாமல் செத்தது, வழியும் இரத்தம், பன்றியின் இறைச்சி -ஏனெனில் அது அசுத்தமாகும் - சிலைகளுக்காகப் பலியிடப்பட்ட அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாதது ஆகியவற்றைத் தவிர வேறு எதனையும் இறைவன் எனக்கு வஹி அறிவித்தவற்றில் தடைசெய்யப்பட்டதாகக் காணவில்லை. யாரேனும் கடுமையான பசியினால் நிர்ப்பந்திக்கப்பட்டு - சுவையை நாடாமலும் அவசியமானதை விட அதிகமாகாமலும் - அவற்றை உண்டுவிட்டால் அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. தூதரே! உம் இறைவன் நிர்ப்பந்தத்தால் உண்டவர்களை மன்னிக்கக்கூடியவனாகவும் அவர்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَعَلَی الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِیْ ظُفُرٍ ۚ— وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَیْهِمْ شُحُوْمَهُمَاۤ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَاۤ اَوِ الْحَوَایَاۤ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍ ؕ— ذٰلِكَ جَزَیْنٰهُمْ بِبَغْیِهِمْ ۖؗ— وَاِنَّا لَصٰدِقُوْنَ ۟
6.146. யூதர்களுக்கு ஒட்டகம், தீக்கோழி போன்ற நகங்களுடைய பிராணிகள் அனைத்தையும் ஆடு, மாடு ஆகியவற்றின் கொழுப்புகளையும் அவற்றின் முதுகுகளிலோ குடல்களிலோ பித்தட்டு, விலா எழும்பு போன்ற எலும்புகளிலோ ஒட்டியுள்ள கொழுப்புகளைத் தவிர நாம் தடைசெய்தோம். அவர்கள் செய்த அக்கிரமத்தினால் நாம் இவற்றை அவர்கள் மீது தடைசெய்தோம். நாம் தெரிவிக்கும் ஒவ்வொன்றிலும் நிச்சயமாக நாம் உண்மையாளர்களே.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• في الآيات دليل على إثبات المناظرة في مسائل العلم، وإثبات القول بالنظر والقياس.
1. அறிவியல் பிரச்சினைகளில் விவாதம் செய்வது, ஒரு கருத்தை ஆய்வு மற்றும் ஒப்பீட்டின் மூலம் நிறுவுவது ஆகியவற்றுக்கான ஆதாரம் மேலே உள்ள வசனங்களில் உண்டு.

• الوحي وما يستنبط منه هو الطريق لمعرفة الحلال والحرام.
2. ஹலால் ஹராம் என்பவற்றை அறிவதற்குரிய ஒரே வழி இறை இறை அறிவிப்பும் அதன் மூலம் பெறப்படும் விளக்கங்களுமே.

• إن من الظلم أن يُقْدِم أحد على الإفتاء في الدين ما لم يكن قد غلب على ظنه أنه يفتي بالصواب الذي يرضي الله.
3. தான் கூறும் தீர்ப்பு அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் சரியான தீர்ப்புதான் என்ற உறுதி ஏற்படாமல் யாரும் தீர்ப்பு வழங்கத் துணிவது அநியாயமாகும்.

• من رحمة الله بعباده الإذن لهم في تناول المحرمات عند الاضطرار.
4. நிர்ப்பந்தமான சமயங்களில் தடைசெய்யப்பட்டவற்றை உண்பதை அல்லாஹ் அனுமதித்துள்ளான். இது அவன் தன் அடியார்கள் மீது பொழிந்த கருணையாகும்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߞߟߏߝߋ߲ ߠߎ߬
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲