Check out the new design

ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ * - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ


ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߓߌ߬ߟߊ߬ߟߌ   ߟߝߊߙߌ ߘߏ߫:
اَسْكِنُوْهُنَّ مِنْ حَیْثُ سَكَنْتُمْ مِّنْ وُّجْدِكُمْ وَلَا تُضَآرُّوْهُنَّ لِتُضَیِّقُوْا عَلَیْهِنَّ ؕ— وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوْا عَلَیْهِنَّ حَتّٰی یَضَعْنَ حَمْلَهُنَّ ۚ— فَاِنْ اَرْضَعْنَ لَكُمْ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّ ۚ— وَاْتَمِرُوْا بَیْنَكُمْ بِمَعْرُوْفٍ ۚ— وَاِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهٗۤ اُخْرٰی ۟ؕ
65.6. -கணவர்களே!- நீங்கள் வசிக்கும் வீட்டிலேயே உங்களின் வசதிக்கேற்றவாறு அவர்களையும் வசிக்கச் செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு இதைத்தான் விதித்துள்ளான். அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக அவர்களுக்குச் செய்யும் செலவீனங்களிலோ, வசிப்பிடத்திலோ தீங்கிழைத்து விடாதீர்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் கர்ப்பமாக இருந்தால் குழந்தை பெற்றெடுக்கும்வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள். அவர்கள் உங்களின் குழந்தைகளுக்குப் பாலூட்டினால் அதற்கான ஊதியத்தை வழங்கி விடுங்கள். ஊதியம் வழங்குவதில் நல்லமுறையில் நடந்துகொள்ளுங்கள். மனைவி விரும்பும் ஊதியத்தை கணவன் வழங்காமல் கஞ்சத்தனம் செய்தால், தான் விரும்பும் ஊதியத்தைப் பெற்றாலன்றி பாலூட்ட முடியாது என மனைவி கஞ்சத்தனம் செய்தால் தந்தை தன் குழந்தைக்குப் பாலூட்டக்கூடிய வேறு ஒரு பெண்ணை நியமித்துக் கொள்ளலாம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
لِیُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖ ؕ— وَمَنْ قُدِرَ عَلَیْهِ رِزْقُهٗ فَلْیُنْفِقْ مِمَّاۤ اٰتٰىهُ اللّٰهُ ؕ— لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَاۤ اٰتٰىهَا ؕ— سَیَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ یُّسْرًا ۟۠
65.7. வசதியுடையவர் தான் விவாகரத்துச் செய்த பெண்ணுக்கும், குழந்தைக்கும் தன் வசதிக்கேற்ப செலவு செய்யட்டும். யார் வசதிக்குறைவினால் நெருக்கடியை உணர்கிறாரோ அவர் அல்லாஹ் தமக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஒருவருக்கு எந்த அளவு வழங்கியிருக்கின்றானோ அந்த அளவே அவர் மீது கடமையாக்குகிறான். அவரால் தாங்க முடியாததை அவர்மீது கடமையாக்கமாட்டான். அவரது நெருக்கடி மற்றும் துன்பத்துக்குப் பிறகு விரைவில் அல்லாஹ் அவருக்கு வசதியையும் செல்வத்தையும் வழங்கலாம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِیْدًا وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا ۟
65.8. தம் இறைவன் மற்றும் அவனது தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்ட எத்தனையோ ஊர் மக்களை அவர்களின் தீய செயல்களுக்காக கடுமையான முறையில் கணக்கு வாங்கியுள்ளோம். இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களை மோசமாக தண்டித்தோம்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا ۟
65.9. தங்கள் தீய செயல்களின் விளைவை அவர்கள் அனுபவித்தார்கள். இறுதியில் அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இழப்பையே பெற்றார்கள்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِیْدًا ۙ— فَاتَّقُوا اللّٰهَ یٰۤاُولِی الْاَلْبَابِ— الَّذِیْنَ اٰمَنُوْا ۛۚ— قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَیْكُمْ ذِكْرًا ۟ۙ
65.10. அல்லாஹ் அவர்களுக்காக பலமான வேதனையை தயார்படுத்தி வைத்துள்ளான். - அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கைகொண்ட அறிவாளிகளே!- அவர்கள்மீது இறங்கிய வேதனை உங்கள்மீது இறங்காதிருக்கும் பொருட்டு அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் பாவங்களின் தீய விளைவை, நீங்கள் செய்த நன்மைகளால் ஏற்படும் பலன்களை உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு நினைவூட்டலை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
رَّسُوْلًا یَّتْلُوْا عَلَیْكُمْ اٰیٰتِ اللّٰهِ مُبَیِّنٰتٍ لِّیُخْرِجَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ۟
65.11. இந்த நினைவூட்டல் அவனிடமிருந்து வந்துள்ள தூதராகும். அவர் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய தூதரை உண்மைப்படுத்தி நற்செயல்களில் ஈடுபட்டவர்களை வழிகேடு என்னும் இருள்களிலிருந்து வெளியேற்றி நேர்வழி என்னும் ஒளியின்பால் கொண்டுவருவதற்காக சந்தேகமற்ற அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை உங்களிடம் எடுத்துரைக்கின்றார். யார் அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிகிறாரோ அல்லாஹ் அவரை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அல்லாஹ் அவரை நிரந்தர இன்பத்தையடைய சுவனத்தில் பிரவேசிக்கச் செய்து அவருக்கு சிறந்த வாழ்வாதாரத்தையும் வழங்குவான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّ ؕ— یَتَنَزَّلُ الْاَمْرُ بَیْنَهُنَّ لِتَعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۙ— وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَیْءٍ عِلْمًا ۟۠
65.12. அல்லாஹ்வே ஏழு வானங்களையும் அவற்றைப்போன்று ஏழு பூமியையும் படைத்தான். அவற்றிற்கிடையே அல்லாஹ்வின் பிரபஞ்ச மற்றும் மார்க்கரீதியான கட்டளை இறங்கிக் கொண்டிருக்கிறது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன், அவனால் இயலாதது எதுவும் இல்லை என்பதையும் நிச்சயமாக அவன் அறிவால் எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளான், வானங்களிலோ, பூமியிலோ எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளும்பொருட்டே இவ்வாறு செய்துள்ளான்.
ߊߙߊߓߎߞߊ߲ߡߊ ߞߘߐߦߌߘߊ ߟߎ߬:
ߟߝߊߙߌ ߟߎ߫ ߢߊ߬ߕߣߐ ߘߏ߫ ߞߐߜߍ ߣߌ߲߬ ߞߊ߲߬:
• عدم وجوب الإرضاع على الحامل إذا طلقت.
1. விவாகரத்து செய்யப்பட்ட கர்ப்பமான பெண்கள்மீது குழந்தைக்குப் பாலூட்டும் கடமை இல்லை.

• التكليف لا يكون إلا بالمستطاع.
2. (ஒருவனுக்கு) இயன்ற அளவே பொறுப்பு சாட்டப்படுகிறது.

• الإيمان بقدرة الله وإحاطة علمه بكل شيء سبب للرضا وسكينة القلب.
3. அல்லாஹ்வின் ஆற்றல், அறிவால் அனைத்தையும் சூழ்ந்தறியும் தன்மை என்பவற்றை நம்புவது மனதிருப்தி மற்றும் அமைதிக்கான ஒரு காரணமாகும்.

 
ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌ߬ߘߊ߬ߟߌ ߝߐߘߊ ߘߏ߫: ߓߌ߬ߟߊ߬ߟߌ
ߝߐߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ ߞߐߜߍ ߝߙߍߕߍ
 
ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊߡߟߌߞߊ߲ ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐߦߌߘߊ ߘߐ߫ - ߘߟߊߡߌߘߊ ߟߎ߫ ߦߌ߬ߘߊ߬ߥߟߊ

ߡߍ߲ ߝߘߊߣߍ߲߫ ߞߎ߬ߙߊ߬ߣߊ ߞߘߐߦߌߘߊ ߕߌߙߌ߲ߠߌ߲ ߝߊ߲ߓߊ ߟߊ߫

ߘߊߕߎ߲߯ߠߌ߲