ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

external-link copy
286 : 2

لَا یُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ— لَهَا مَا كَسَبَتْ وَعَلَیْهَا مَا اكْتَسَبَتْ ؕ— رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِیْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ— رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَیْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَی الَّذِیْنَ مِنْ قَبْلِنَا ۚ— رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ— وَاعْفُ عَنَّا ۥ— وَاغْفِرْ لَنَا ۥ— وَارْحَمْنَا ۥ— اَنْتَ مَوْلٰىنَا فَانْصُرْنَا عَلَی الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟۠

அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! info
التفاسير: