ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

external-link copy
95 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّیْدَ وَاَنْتُمْ حُرُمٌ ؕ— وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ یَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْیًا بٰلِغَ الْكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِیْنَ اَوْ عَدْلُ ذٰلِكَ صِیَامًا لِّیَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ ؕ— عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ ؕ— وَمَنْ عَادَ فَیَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟

நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமு[1] டையவர்களாக இருக்கும்போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ அவர் தான் கொன்ற வேட்டைப் பிராணிக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலிருந்து எது ஒப்பானதாக இருக்கிறதோ அ(தை பரிகாரமாக அறுத்து குர்பானி கொடுப்பது அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு (-வேட்டையாடப்பட்ட பிராணிக்கு எது சரியாக ஒப்பானதாக இருக்கிறது என்பதற்கு) தீர்ப்பளிப்பார்கள். கஅபாவை அடைகிற பலியாக (-புனித ஹரம் எல்லையை அடைந்து அங்கு அறுக்கப்பட வேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) அதற்குச் சமமான எண்ணிக்கை நோன்பு (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக (உள்ள பரிகாரம்) ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான். info

[1] இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ராவை நாடி கஅபா செல்லும்போது குறிப்பிட்ட எல்லை வந்தவுடன் லப்பைக் ஓதி தான் ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தை செய்யப்போகிறேன் என்று நிய்யத் செய்வதாகும். இதற்கு பின்னர் அந்த ஹஜ் அல்லது உம்ராவை முடிக்கும் வரை சில கட்டுப்பாடுகள் உள்ளன, அவற்றை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிலையை இஹ்ராம் உடைய நிலை என்று கூறப்படும்.

التفاسير: |