ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
196 : 2

وَاَتِمُّوا الْحَجَّ وَالْعُمْرَةَ لِلّٰهِ ؕ— فَاِنْ اُحْصِرْتُمْ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— وَلَا تَحْلِقُوْا رُءُوْسَكُمْ حَتّٰی یَبْلُغَ الْهَدْیُ مَحِلَّهٗ ؕ— فَمَنْ كَانَ مِنْكُمْ مَّرِیْضًا اَوْ بِهٖۤ اَذًی مِّنْ رَّاْسِهٖ فَفِدْیَةٌ مِّنْ صِیَامٍ اَوْ صَدَقَةٍ اَوْ نُسُكٍ ۚ— فَاِذَاۤ اَمِنْتُمْ ۥ— فَمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ اِلَی الْحَجِّ فَمَا اسْتَیْسَرَ مِنَ الْهَدْیِ ۚ— فَمَنْ لَّمْ یَجِدْ فَصِیَامُ ثَلٰثَةِ اَیَّامٍ فِی الْحَجِّ وَسَبْعَةٍ اِذَا رَجَعْتُمْ ؕ— تِلْكَ عَشَرَةٌ كَامِلَةٌ ؕ— ذٰلِكَ لِمَنْ لَّمْ یَكُنْ اَهْلُهٗ حَاضِرِی الْمَسْجِدِ الْحَرَامِ ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟۠

நீங்கள் ஹஜ்ஜையும் உம்றாவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் தடுக்கப்பட்டால் பலியில் சாத்தியமானது (பரிகாரமாகும்). பலி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலைகளை சிரைக்காதீர்கள். உங்களில் எவர், நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு இடையூறு இருக்குமோ ஆகவே, (அவர்) நோன்பு அல்லது தர்மம் அல்லது பலிகளிலிருந்து பரிகாரம் (செய்யவும்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்றாவைக் கொண்டு ஹஜ்ஜு வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர்) பலியில் சாத்தியமானது (கொடுக்கவும்). எவர் (பலியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்கள் நோன்பும் நீங்கள் திரும்பியபின் ஏழும் (வைக்க வேண்டும்). அவை முழுமையான பத்தாகும். இது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير: