ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
39 : 41

وَمِنْ اٰیٰتِهٖۤ اَنَّكَ تَرَی الْاَرْضَ خَاشِعَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ ؕ— اِنَّ الَّذِیْۤ اَحْیَاهَا لَمُحْیِ الْمَوْتٰی ؕ— اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் ஒன்றாக நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கின்றீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைகிறது, வளர்கிறது. நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
40 : 41

اِنَّ الَّذِیْنَ یُلْحِدُوْنَ فِیْۤ اٰیٰتِنَا لَا یَخْفَوْنَ عَلَیْنَا ؕ— اَفَمَنْ یُّلْقٰی فِی النَّارِ خَیْرٌ اَمْ مَّنْ یَّاْتِیْۤ اٰمِنًا یَّوْمَ الْقِیٰمَةِ ؕ— اِعْمَلُوْا مَا شِئْتُمْ ۙ— اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟

நிச்சயமாக நமது வசனங்களில் (சத்தியத்தை விட்டு) தடம் புரளுபவர்கள் நம்மீது மறைந்துவிட மாட்டார்கள். நரகத்தில் போடப்படுபவர் சிறந்தவரா அல்லது மறுமை நாளில் நிம்மதி பெற்றவராக வருகின்றவரா? நீங்கள் (விரும்பி) நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
41 : 41

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِالذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۚ— وَاِنَّهٗ لَكِتٰبٌ عَزِیْزٌ ۟ۙ

நிச்சயமாக இந்த வேதத்தை அது அவர்களிடம் வந்த போது நிராகரித்தவர்கள் (அவர்களுக்குரிய தண்டனையை நாம் அவர்களுக்கு கொடுப்போம்). நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும். info
التفاسير:

external-link copy
42 : 41

لَّا یَاْتِیْهِ الْبَاطِلُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَلَا مِنْ خَلْفِهٖ ؕ— تَنْزِیْلٌ مِّنْ حَكِیْمٍ حَمِیْدٍ ۟

அதற்கு முன்னிருந்தும் அதற்குப் பின்னிருந்தும் பொய்யர்கள் அதனிடம் வரமாட்டார்கள். (பொய்யர்கள் யாராலும் அதில் இல்லாததை அதில் சேர்க்கவும் முடியாது, அதில் உள்ளதை அதில் இருந்து குறைக்கவும் முடியாது.) இது மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும். info
التفاسير:

external-link copy
43 : 41

مَا یُقَالُ لَكَ اِلَّا مَا قَدْ قِیْلَ لِلرُّسُلِ مِنْ قَبْلِكَ ؕ— اِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ وَّذُوْ عِقَابٍ اَلِیْمٍ ۟

உமக்கு முன்னர் (அனுப்பப்பட்ட) தூதர்களுக்கு திட்டமாக எது சொல்லப்பட்டதோ அதைத் தவிர (வேறு ஏதும்) உமக்கு சொல்லப்படாது. நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்புடையவன், வலி தரக்கூடிய தண்டனை உடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
44 : 41

وَلَوْ جَعَلْنٰهُ قُرْاٰنًا اَعْجَمِیًّا لَّقَالُوْا لَوْلَا فُصِّلَتْ اٰیٰتُهٗ ؕ— ءَاَؔعْجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ— قُلْ هُوَ لِلَّذِیْنَ اٰمَنُوْا هُدًی وَّشِفَآءٌ ؕ— وَالَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ فِیْۤ اٰذَانِهِمْ وَقْرٌ وَّهُوَ عَلَیْهِمْ عَمًی ؕ— اُولٰٓىِٕكَ یُنَادَوْنَ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟۠

அரபி அல்லாத மொழியில் உள்ள குர்ஆனாக இதை நாம் ஆக்கி இருந்தால் இதன் வசனங்கள் (அரபி மொழியில்) விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? (இந்த குர்ஆன்) அரபி அல்லாத ஒரு மொழியிலா! (இது இறக்கப்பட்டவரின் மொழியோ) அரபி ஆயிற்றே என்று கூறியிருப்பார்கள். (நபியே!) கூறுவீராக! இது (-இந்த குர்ஆன்) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியும் நிவாரணமும் ஆகும். எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் காதுகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. (அவர்கள் படிப்பினை பெறும் நோக்கத்துடன் இதை செவியுற மாட்டார்கள்.) அது அவர்கள் (உடைய உள்ளங்கள்) மீது மறைந்திருக்கிறது. (ஆகவே, அவர்களுடைய உள்ளங்களால் அதை புரிந்துகொள்ள முடியாது.) அவர்கள்(-இந்த வேதத்தை நிராகரிப்பவர்கள்) மிக தூரமான இடத்தில் இருந்து அழைக்கப்படுவார்கள். (தூரமான இடத்திலிருந்து அழைக்கப்படுபவரால் எவ்வாறு அழைப்பை சரியாக புரியமுடியாதோ அவ்வாறே இவர்களும் இந்த வேதத்தின் சத்தியத்தை புரிய மாட்டார்கள்.) info
التفاسير:

external-link copy
45 : 41

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَاخْتُلِفَ فِیْهِ ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ وَاِنَّهُمْ لَفِیْ شَكٍّ مِّنْهُ مُرِیْبٍ ۟

திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தை கொடுத்தோம். ஆனால், அதில் முரண்பாடு செய்யப்பட்டது. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே வேதனையைக் கொண்டு) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இன்னும் நிச்சயமாக அவர்கள் இதில் (-இந்த வேதத்தில்) மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கின்றனர். info
التفاسير:

external-link copy
46 : 41

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؕ— وَمَا رَبُّكَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟

யார் நல்லதை செய்வாரோ அது அவருக்குத்தான் நன்மையாகும். யார் தீயதை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். உமது இறைவன் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. info
التفاسير: