ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
27 : 67

فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِیْٓـَٔتْ وُجُوْهُ الَّذِیْنَ كَفَرُوْا وَقِیْلَ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ ۟

அவர்கள் அதை மிக நெருக்கமாக (-சமீபமாக) பார்க்கின்றபோது நிராகரித்தவர்களின் முகங்கள் கெட்டுவிடும் (-துக்கத்திற்கு ஆளாகிவிடும்). நீங்கள் எதை தேடுபவர்களாக இருந்தீர்களோ அது இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும். info
التفاسير: |

external-link copy
28 : 67

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَهْلَكَنِیَ اللّٰهُ وَمَنْ مَّعِیَ اَوْ رَحِمَنَا ۙ— فَمَنْ یُّجِیْرُ الْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ اَلِیْمٍ ۟

(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் அழித்துவிட்டால் அல்லது அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) வலி தரக்கூடிய தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை வேதனையில் இருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள். info
التفاسير: |

external-link copy
29 : 67

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَیْهِ تَوَكَّلْنَا ۚ— فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

(நபியே!) கூறுவீராக! அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவன் மீதே நாங்கள் “தவக்குல்” நம்பிக்கை வைத்தோம். தெளிவான வழிகேட்டில் உள்ளவர்களை விரைவில் அறிவீர்கள். info
التفاسير: |

external-link copy
30 : 67

قُلْ اَرَءَیْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ یَّاْتِیْكُمْ بِمَآءٍ مَّعِیْنٍ ۟۠

(நபியே!) கூறுவீராக! உங்கள் தண்ணீர் (அதை நீங்கள் இறைக்க முடியாத அளவிற்கு) ஆழத்தில் சென்றுவிட்டால் யார் உங்களுக்கு மதுரமான தண்ணீரைக் கொண்டு வருவார்? என்பதை அறிவியுங்கள். info
التفاسير: |