ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
46 : 8

وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِیْحُكُمْ وَاصْبِرُوْا ؕ— اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟ۚ

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; தர்க்கிக்காதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் துணிவிழப்பீர்கள்; உங்கள் ஆற்றல் சென்றுவிடும். பொறுத்திருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். info
التفاسير:

external-link copy
47 : 8

وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟

பெருமைக்காகவும் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் இல்லங்களிலிருந்து புறப்பட்டு, அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பவர்களைப் போன்று (நம்பிக்கையாளர்களே நீங்கள்) ஆகிவிடாதீர்கள். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை சூழ்ந்திருப்பவன் ஆவான். info
التفاسير:

external-link copy
48 : 8

وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ— فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ— وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠

ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; உங்களுக்கு நிச்சயமாக நானும் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இரு கூட்டங்களும் ஒன்றுக்கொன்று பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பினான்; “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான். info
التفاسير:

external-link copy
49 : 8

اِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰۤؤُلَآءِ دِیْنُهُمْ ؕ— وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

நயவஞ்சகர்களும், தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என்று கூறியபோது. எவர் அல்லாஹ் மீது நம்பிக்கை வைப்பாரோ (அவரே வெற்றியாளர்.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானவான். info
التفاسير:

external-link copy
50 : 8

وَلَوْ تَرٰۤی اِذْ یَتَوَفَّی الَّذِیْنَ كَفَرُوا الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۚ— وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟

வானவர்கள் நிராகரித்தவர்களை -அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக, “எரிக்கக்கூடிய (நரக) வேதனையை சுவையுங்கள்” (என்று கூறி)- உயிர் கைப்பற்றும் போது நீர் பார்த்தால்... (அது ஒரு பயங்கர காட்சியாக இருக்கும்.) info
التفاسير:

external-link copy
51 : 8

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۙ

அதற்குக் காரணம் “உங்கள் கரங்கள் முற்படுத்தியவையும் நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அறவே அநீதியிழைப்பவன் இல்லை என்பதாகும்.” info
التفاسير:

external-link copy
52 : 8

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ— وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟

ஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன். info
التفاسير: