அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (246) அத்தியாயம்: ஸூரா அல்பகரா
اَلَمْ تَرَ اِلَی الْمَلَاِ مِنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ مِنْ بَعْدِ مُوْسٰی ۘ— اِذْ قَالُوْا لِنَبِیٍّ لَّهُمُ ابْعَثْ لَنَا مَلِكًا نُّقَاتِلْ فِیْ سَبِیْلِ اللّٰهِ ؕ— قَالَ هَلْ عَسَیْتُمْ اِنْ كُتِبَ عَلَیْكُمُ الْقِتَالُ اَلَّا تُقَاتِلُوْا ؕ— قَالُوْا وَمَا لَنَاۤ اَلَّا نُقَاتِلَ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَدْ اُخْرِجْنَا مِنْ دِیَارِنَا وَاَبْنَآىِٕنَا ؕ— فَلَمَّا كُتِبَ عَلَیْهِمُ الْقِتَالُ تَوَلَّوْا اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
2.246. தூதரே! இஸ்ராயீலின் மக்களில் மூசாவின் காலத்திற்குப்பின் வாழ்ந்த கண்ணியமானவர்களின் செய்தி உமது அறிவுக்கு எட்டவில்லையா? அவர்கள் தங்களின் தூதரிடம் கூறினார்கள்: எங்களுக்காக ஒரு அரசனை ஏற்படுத்துங்கள். நாங்கள் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம். அதற்கு அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்கள்மீது போரை கடமையாக்கி, நீங்கள் அவனுடைய பாதையில் போரிடாமல் இருக்கலாம் அல்லவா? அவருடைய எண்ணத்தை மறுத்தவர்களாகக் கூறினார்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான காரணிகள் அனைத்தையும் நாங்கள் பெற்றிருந்தும் எது அவனுடைய பாதையில் போரிடுவதை விட்டும் எங்களைத் தடுக்கும்? எங்களின் எதிரிகள் எங்களின் நாட்டை விட்டு எங்களை வெளியேற்றியுள்ளார்கள்; எங்களின் பிள்ளைகளைக் கைதிகளாகப் பிடித்துள்ளார்கள். எங்களின் நாட்டையும் பிள்ளைகளையும் மீட்டுவதற்காக நாங்கள் போரிடுவோம். அல்லாஹ் அவர்கள்மீது போரைக் கடமையாக்கியபோது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது புறக்கணித்துவிட்டார்கள். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை முறித்து அவனுடைய கட்டளைகளைப் புறக்கணித்த அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கான தண்டனையை அவன் அவர்களுக்கு வழங்கிடுவான்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• التنبيه إلى أهم صفات القائد التي تؤهله لقيادة الناس؛ وهي العلم بما يكون قائدًا فيه، والقوة عليه.
1. தலைமை வகிக்கும் விடயத்தைப் பற்றிய அறிவும் அதற்குரிய பலமும் மக்களை வழிநடத்தும் தகுதியுடைய தலைவருக்கான மிக முக்கியமான பண்புகளாகும்.

• إرشاد من يتولى قيادة الناس إلى ألا يغتر بأقوالهم حتى يبلوهم، ويختبر أفعالهم بعد أقوالهم.
2. தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் மக்களை செயல்பாடுகளைக் கொண்டு பரீட்சிக்க முன் அவர்களின் பேச்சை நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

• أن الاعتبارات التي قد تشتهر بين الناس في وزن الآخرين والحكم عليهم قد لا تكون هي الموازين الصحيحة عند الله تعالى، بل هو سبحانه يصطفي من يشاء من خلقه بحكمته وعلمه.
3. பிறரை மதிப்பீடு செய்வதற்கு மக்களுக்கு மத்தியில் பிரபல்யமாகக் கருதப்படும் அளவீடுகள் சில வேளை அல்லாஹ்விடத்தில் சரியான அளவீடாகக் கருதப்படமாட்டாது. அல்லாஹ் தனது ஞானம் மற்றும் அறிவு ஆகிவற்றுக்கு ஏற்ப தான் நாடுவோரை தெரிவுசெய்கிறான்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (246) அத்தியாயம்: ஸூரா அல்பகரா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக