Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யாஸீன்   வசனம்:

யாஸீன்

சூராவின் இலக்குகளில் சில:
إثبات الرسالة والبعث ودلائلهما.
தூதுத்துவம் மற்றும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதையும் அதற்கான ஆதாரங்களையும் நிறுவுதல்.

یٰسٓ ۟ۚ
36.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
அரபு விரிவுரைகள்:
وَالْقُرْاٰنِ الْحَكِیْمِ ۟ۙ
36.2. அல்லாஹ் குர்ஆனைக்கொண்டு சத்தியமிட்டுக் கூறுகிறான். அந்த குர்ஆன் எப்படிப்பட்டதென்றால் அதன் வசனங்கள் நுணுக்கமானவை. அதன் முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் அசத்தியம் அதனை அடைய முடியாது.
அரபு விரிவுரைகள்:
اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ۙ
36.3. -தூதரே!- நிச்சயமாக நீர் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதன்பால் மனிதர்களை அழைப்பதற்காக அனுப்பப்பட்ட தூதர்களில் உள்ளவராவீர்.
அரபு விரிவுரைகள்:
عَلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟ؕ
36.4,5. நீர் நேரான வழிமுறையில் இருக்கின்றீர். இந்த நேரான வழிமுறை யாவற்றையும் மிகைத்த, யாராலும் அவனை மிகைக்க முடியாத, நம்பிக்கையாளர்களான தன் அடியார்கள் மீது மிகுந்த கருணை காட்டுகின்ற உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்.
அரபு விரிவுரைகள்:
تَنْزِیْلَ الْعَزِیْزِ الرَّحِیْمِ ۟ۙ
36.4,5. நீர் நேரான வழிமுறையில் இருக்கின்றீர். இந்த நேரான வழிமுறை யாவற்றையும் மிகைத்த, நம்பிக்கைகொண்ட தன் அடியார்கள்மீது மிகுந்த கருணை காட்டுகின்ற உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்.
அரபு விரிவுரைகள்:
لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اُنْذِرَ اٰبَآؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ ۟
36.6. நாம் உம்மீது அதனை இறக்கியது, இதற்கு முன்னர் எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர்கள் எவரும் வந்திராத ஒரு சமூகமான அரேபிகளுக்கு நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் ஓரிறைக்கொள்கை மற்றும் ஈமானை விட்டும் அலட்சியமாக இருக்கிறார்கள். இவ்வாறே எச்சரிக்கை செய்யப்படாத ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களுக்கு அதனை நினைவுபடுத்த தேவையான தூதர்களை ஏற்படுத்துகின்றோம்.
அரபு விரிவுரைகள்:
لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰۤی اَكْثَرِهِمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
36.7. அல்லாஹ்விடமிருந்து தூதரின் நாவினால் சத்தியம் அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் நம்பிக்கைகொள்ளாமல் நிராகரிப்பில் நிலைத்திருக்கும் இவர்களில் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகிவிட்டது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளவில்லை. அவர் கொண்டுவந்த சத்தியத்தின்படி செயல்படுவதுமில்லை.
அரபு விரிவுரைகள்:
اِنَّا جَعَلْنَا فِیْۤ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِیَ اِلَی الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ ۟
36.8. இதில் அவர்களுக்கான உதாரணம், தங்களின் கழுத்துகளில் விலங்குகளை மாட்டிக் கொண்டவர்களைப் போலாவர். அவர்களின் கைகள் முகவாய்க்கட்டைகளுக்குக் கீழே கழுத்தோடு இணைக்கப்பட்டுள்ளன. அவர்கள் வானத்தின்பால் தங்களின் தலையை உயர்த்தி வைக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். அவர்களால் அதனைத் தாழ்த்த முடியாது. இவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொள்ளாதவாறு தடுக்கப்பட்டுள்ளார்கள். எனவே அவர்கள் அவனுக்கு அடிபணிய மாட்டார்கள். அவனுக்காக வேண்டி அவர்கள் தங்கள் தலைகளை தாழ்த்தவும் மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
وَجَعَلْنَا مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَیْنٰهُمْ فَهُمْ لَا یُبْصِرُوْنَ ۟
36.9. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாதவாறு அவர்களுக்கு முன்னால் ஒரு தடுப்பையும் பின்னால் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் சத்தியத்தை பார்க்க முடியாதவாறு அவர்களின் பார்வைகளை மூடியுள்ளோம். எனவே பயனடையும் விதத்தில் அவர்கள் பார்க்கமாட்டார்கள். நிராகரிப்பில் அவர்கள் பிடிவாதமாகவும் நிலையாகவும் இருப்பது நிரூபனமான பின்னால்தான் அது ஏற்பட்டது.
அரபு விரிவுரைகள்:
وَسَوَآءٌ عَلَیْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟
36.10. -முஹம்மதே!- பிடிவாதம் கொண்ட இந்த நிராகரிப்பாளர்களுக்கு நீர் சத்தியத்தை கொண்டு எச்சரிக்கை செய்தாலும் அல்லது எச்சரிக்கை செய்யாவிட்டாலும் சரியே. அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நீர் கொண்டுவந்ததை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
اِنَّمَا تُنْذِرُ مَنِ اتَّبَعَ الذِّكْرَ وَخَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ ۚ— فَبَشِّرْهُ بِمَغْفِرَةٍ وَّاَجْرٍ كَرِیْمٍ ۟
36.11. நிச்சயமாக இந்த குர்ஆனை ஏற்றுக்கொண்டு, அதிலுள்ளதைப் பின்பற்றி யாரும் பார்க்காதவாறு தனிமையில் தன் இறைவனை அஞ்சியவர்தான் உம்முடைய எச்சரிக்கையின் மூலம் உண்மையாகப் பயனடைவார்கள். இந்த பண்புகளைப் பெற்றவர்களுக்கு, அல்லாஹ் அவர்களின் பாவங்களை அழித்து அவர்களை மன்னிப்பதோடு மறுமையில் சுவனத்தில் நுழைதல் என்னும் அவர்கள் எதிர்பார்க்கும் மகத்தான வெகுமதி கிடைக்கும் என்ற நற்செய்தியைக் கூறுவீராக.
அரபு விரிவுரைகள்:
اِنَّا نَحْنُ نُحْیِ الْمَوْتٰی وَنَكْتُبُ مَا قَدَّمُوْا وَاٰثَارَهُمْ ؔؕ— وَكُلَّ شَیْءٍ اَحْصَیْنٰهُ فِیْۤ اِمَامٍ مُّبِیْنٍ ۟۠
36.12. நிச்சயமாக மறுமை நாளில் விசாரணை செய்வதற்காக அவர்களை எழுப்புவதன் மூலம் மரணித்தவர்களை நாம் உயிர்ப்பிப்போம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் செய்கின்ற நற்செயல்களையும் தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். அவர்கள் இவ்வுலக வாழ்வில் விட்டுச்செல்கின்ற நிரந்தர தர்மம் போன்ற நிலையான நற்செயல்களையும் அல்லது நிராகரிப்புப் போன்ற நிலையான தீய செயல்களையும் நாம் பதிவு செய்கின்றோம். நாம் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் தெளிவான புத்தகத்திலே அனைத்தையும் கணக்கிட்டு வைத்துள்ளோம்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• العناد مانع من الهداية إلى الحق.
1. பிடிவாதம் சத்தியத்தின்பால் நேர்வழி பெறுவதற்கு தடையாகும்.

• العمل بالقرآن وخشية الله من أسباب دخول الجنة.
2. குர்ஆனின்படி செயல்படுவது, அல்லாஹ்வை அஞ்சுவது சுவனத்தில் நுழைவதற்கான காரணிகளில் ஒன்றாகும்.

• فضل الولد الصالح والصدقة الجارية وما شابههما على العبد المؤمن.
3. நல்ல குழந்தை, நிலையான தர்மம் மற்றும் அதைப் போன்றவற்றினால் நம்பிக்கையாளனான அடியானுக்குக் கிடைக்கும் சிறப்பு.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: யாஸீன்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக