Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (7) அத்தியாயம்: அஸ்ஸப்
وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ الْكَذِبَ وَهُوَ یُدْعٰۤی اِلَی الْاِسْلَامِ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۚ
61.7. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தும் தூய்மையான மார்க்கமான இஸ்லாத்தின் பால் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து அவனுக்கு இணைகள் உண்டு என்று கூறி அவன் அல்லாதவற்றை வணங்குபவனைவிட மிகப்பெரிய அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அவனுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியும் பாவங்கள் புரிந்தும் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்ட மாட்டான்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• تبشير الرسالات السابقة بنبينا صلى الله عليه وسلم دلالة على صدق نبوته.
1. முன்சென்ற தூதுகள் நமது நபியவர்களைப் பற்றித் நன்மாராயம் கூறியிருப்பது அவரது நபித்துவத்தின் நம்பகத்தன்மைக்கான ஆதாரமாகும்.

• التمكين للدين سُنَّة إلهية.
2. மார்க்கத்தை மேலோங்கச் செய்வது இறைவனின் நியதியாகும்.

• الإيمان والجهاد في سبيل الله من أسباب دخول الجنة.
3. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வது சுவனத்தில் பிரவேசிக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாகும்.

• قد يعجل الله جزاء المؤمن في الدنيا، وقد يدخره له في الآخرة لكنه لا يُضَيِّعه - سبحانه -.
4. நம்பிக்கையாளனுடைய கூலியை சில வேளை அல்லாஹ் உலகிலேயே விரைவாக வழங்குவான். சில வேளை மறுமையிலே வழங்குவதற்காக அதனை சேகரித்துவைத்திருப்பான். ஆனால் அதனை ஒரு போதும் வீணாக்கிவிடமாட்டான்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (7) அத்தியாயம்: அஸ்ஸப்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக