Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அத்தகாபுன்   வசனம்:

அத்தகாபுன்

சூராவின் இலக்குகளில் சில:
التحذير مما تحصل به الندامة والغبن يوم القيامة.
மறுமையில் நஷ்டம் தருபவற்றை விட்டும் எச்சரித்தல்

یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ۚ— لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
64.1. வானங்கள் மற்றும் பூமியில் உள்ள படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குப் பொருத்தமற்ற குறைபாடுடைய பண்புகளைவிட்டும் அவனைத் தூய்மைப்படுத்துகின்றன. ஆட்சியதிகாரமும் அவனுக்கு மட்டுமே உரியது. அவனைத்தவிர வேறு அரசன் இல்லை. அழகிய புகழும் அவனுக்கே உரியது. அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது.
அரபு விரிவுரைகள்:
هُوَ الَّذِیْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌ ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
64.2. -மனிதர்களே!- அவனே உங்களைப் படைத்தான். உங்களில் அவனை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவன்மீது நம்பிக்கைகொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சேருமிடம் சுவனமாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கக்கூடியவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
அரபு விரிவுரைகள்:
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْ ۚ— وَاِلَیْهِ الْمَصِیْرُ ۟
64.3. அவன் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்துள்ளான். அவன் அவற்றை வீணாகப் படைக்கவில்லை. -மனிதர்களே!- அவன் உங்கள்மீது அருள்புரியும்பொருட்டு அழகிய வடிவில் உங்களைப் படைத்துள்ளான். அவன் நாடியிருந்தால் உங்களை அலங்கோலமாக ஆக்கியிருப்பான். மறுமை நாளில் நீங்கள் அவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். நலவுக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் கிடைக்கும்.
அரபு விரிவுரைகள்:
یَعْلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَیَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
64.4. அவன் வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அறிவான். உங்களின் அந்தரங்கமான செயல்களையும் வெளிப்படையான செயல்களையும் அவன் அறிவான். அவன் உள்ளங்களில் உள்ள நல்லவைகளையும் தீயவைகளையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
அரபு விரிவுரைகள்:
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ؗ— فَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
64.5. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் பொய்ப்பித்த நூஹின் சமூகம், ஆதின் சமூகம், ஸமூதின் சமூகம் மற்றும் ஏனைவர்களைக் குறித்த செய்தி உங்களிடம் வரவில்லையா? அவர்கள் உலகில் நிராகரித்துக் கொண்டிருந்ததன் தண்டனையை அனுபவித்தார்கள். மறுமையில் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை இருக்கின்றது. நிச்சயமாக அவர்களைக்குறித்த செய்தி உங்களிடம் வந்தே இருக்கின்றது. ஆகவே அவர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு படிப்பினை பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள்மீது இறங்கிய வேதனை உங்கள்மீது இறங்குவதற்கு முன்னால் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரிக் கொள்ளுங்கள்.
அரபு விரிவுரைகள்:
ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّاْتِیْهِمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَقَالُوْۤا اَبَشَرٌ یَّهْدُوْنَنَا ؗ— فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَی اللّٰهُ ؕ— وَاللّٰهُ غَنِیٌّ حَمِیْدٌ ۟
64.6. அவர்களைத் தாக்கிய அந்த வேதனைக்கான காரணம், அல்லாஹ்வின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களோடும் அற்புதங்களோடும் வந்தபோது தூதர் மனித இனத்தில் இருப்பதை வெறுத்தோராக “ஒரு மனிதன் எங்களுக்கு சத்தியத்தின்பால் வழிகாட்டுவதா” என்று கூறினார்கள். அவர்கள் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தார்கள். அதனால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. அவர்களின் நம்பிக்கை மற்றும் வழிபாட்டை விட்டும் அவன் தேவையற்றவன். ஏனெனில் நிச்சயமாக அவர்களின் வழிபாடு அவனுக்கு எதனையும் அதிகரிக்கப்போவதில்லை. அல்லாஹ் தனது அடியார்களின் பக்கம் தேவையற்றவனாவான். தன் சொல்லிலும் செயலிலும் அவன் புகழுக்குரியவனாக இருக்கின்றான்.
அரபு விரிவுரைகள்:
زَعَمَ الَّذِیْنَ كَفَرُوْۤا اَنْ لَّنْ یُّبْعَثُوْا ؕ— قُلْ بَلٰی وَرَبِّیْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْ ؕ— وَذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟
64.7. அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் அவன் இறந்தவர்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பமாட்டான் என்று எண்ணுகிறார்கள். -தூதரே!- மீண்டும் எழுப்புவதை நிராகரிக்கும் இவர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உயிர்கொடுத்து எழுப்பப்படுவீர்கள். பின்னர் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்கள் குறித்து அறிவிக்கப்படும். இவ்வாறு எழுப்புவது அல்லாஹ்வுக்கு மிகவும் இலகுவானது. அவன் உங்களை முதன்முறையாகப் படைத்தான். எனவே நீங்கள் இறந்தபிறகு உங்களை விசாரணை செய்வதற்காகவும் கூலி கொடுப்பதற்காகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவதற்கு அவன் ஆற்றலுடையவனே.
அரபு விரிவுரைகள்:
فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِیْۤ اَنْزَلْنَا ؕ— وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِیْرٌ ۟
64.8. -மனிதர்களே!- அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் எம் தூதர் மீது நாம் இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொள்ளுங்கள். அவன் நீங்கள் செய்யக்கூடியவற்றை நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான்.
அரபு விரிவுரைகள்:
یَوْمَ یَجْمَعُكُمْ لِیَوْمِ الْجَمْعِ ذٰلِكَ یَوْمُ التَّغَابُنِ ؕ— وَمَنْ یُّؤْمِنْ بِاللّٰهِ وَیَعْمَلْ صَالِحًا یُّكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— ذٰلِكَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟
64.9. -தூதரே!- அல்லாஹ் உங்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்குவதற்காக உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டும் மறுமை நாளை நினைவுகூர்வீராக. அந்த நாளே நிராகரிப்பாளர்களின் நஷ்டமும் குறையும் வெளிப்படும் நாளாகும். நம்பிக்கையாளர்கள் சுவனத்தில் நரகவாசிகளுக்குரிய தங்குமிடங்களைப் பெறுவார்கள். நரகவாசிகள் நரகத்தில் சுவனவாசிகளின் தங்குமிடங்களைப் பெறுவார்கள். யார் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிவாரோ அல்லாஹ் அவரது பாவங்களைப் போக்கி சுவனங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அதில் இருந்து அவர்கள் வெளியேறமாட்டார்கள். அவற்றின் இன்பங்கள் என்றும் முடிவடையாததாகும். அவ்வாறு அவர்கள் பெறுவதே ஈடிணையற்ற மகத்தான வெற்றியாகும்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• من قضاء الله انقسام الناس إلى أشقياء وسعداء.
1. மக்கள் நற்பாக்கியசாலிகள், துர்பாக்கியசாலிகள் என்னும் இரு பிரிவினராகக் காணப்படுவது அல்லாஹ்வின் ஏற்பாடாகும்.

• من الوسائل المعينة على العمل الصالح تذكر خسارة الناس يوم القيامة.
2. நல்லமல்கள் செய்வதற்கு வழிவகுக்கும் சாதனங்களில் உள்ளவையே மறுமையில் மனிதர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை நினைவு கூர்வதாகும்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அத்தகாபுன்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக