Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்ஹாக்கா   வசனம்:
وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ
69.9. ஃபிர்அவ்னும் அவனுக்கு முன் வந்த சமூகங்களும் தலைகீழாகப் புரட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஊரான லூத்தின் சமூகமும் தவறான காரியங்களான இணைவைப்பு, பாவங்களில் ஈடுபட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟
69.10. அவர்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களின்பால் அனுப்பப்பட்ட தூதருக்கு மாறுசெய்து பொய்ப்பித்தார்கள்; ஆகவே அவர்களின் அழிவுக்கு மேலதிகமாகவும் அல்லாஹ் அவர்களை பிடித்தான்.
அரபு விரிவுரைகள்:
اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ
69.11. தண்ணீர் எல்லை மீறி உயர்ந்த போது நீங்கள் யாரின் முதுகந்தண்டில் இருந்தீர்களோ அவர்களை, நம் கட்டளையின் பேரில் நூஹ் செய்த ஓடக்கூடிய கப்பலில் ஏற்றினோம். அது உங்களை சுமந்து செல்லக்கூடியதாக இருந்தது.
அரபு விரிவுரைகள்:
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟
69.12. கப்பலையும் அதன் சம்பவத்தையும் நிராகரிப்பாளர்களை அழித்து, நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றியமைக்கான சான்றாக அமையும் அறிவுரையாக ஆக்குவதற்காகவும் கேட்பவற்றைப் பாதுகாக்கும் செவிகள் அதனை நினைவில் வைத்துக்கொள்வதற்காகவும்தான் இவ்வாறு செய்தோம்.
அரபு விரிவுரைகள்:
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
69.13. சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்ட வானவர் இரண்டாவது முறையாக சூர் ஊதும்போது,
அரபு விரிவுரைகள்:
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ
69.14. பூமியும் மலைகளும் உயர்த்தப்பட்டு ஒரே தடவையில் அவையிரண்டும் மோதி தூள்தூளாகிவிடும் போது வானம், பூமியின் பகுதிகள் சிதறி விடும்.
அரபு விரிவுரைகள்:
فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
69.15. இவையனைத்தும் நிகழும் நாளில் மறுமை நாள் நிகழ்ந்துவிடும்.
அரபு விரிவுரைகள்:
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ
69.16. அந்நாளில் வானவர்கள் வானத்திலிருந்து இறங்குவதனால் வானம் பிளந்துவிடும். உறுதியாக இருந்த அது அந்நாளில் பலவீனமடைந்து விடும்.
அரபு விரிவுரைகள்:
وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ— وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ
69.17. வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்த மாபெரும் அந்நாளில் உம் இறைவனின் அர்ஷை நெருங்கிய எட்டு வானவர்கள் சுமந்து கொண்டிருப்பார்கள்.
அரபு விரிவுரைகள்:
یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟
69.18. -மனிதர்களே!- அந்த நாளில் நீங்கள் அல்லாஹ்வுக்கு முன் நிறுத்தப்படுவீர்கள். உங்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இருக்காது. மாறாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருப்பான்.
அரபு விரிவுரைகள்:
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ
69.19. யாருடைய செயல்பதிவேடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ அவர் மகிழ்ச்சியுடன் கூறுவார்: “இதோ என் செயல்பதிவேட்டை எடுத்துக் கொண்டு படியுங்கள்.
அரபு விரிவுரைகள்:
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
69.20. நிச்சயமாக நான் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்பட்டு அவனை சந்தித்து கூலி வழங்கப்படுவேன் என்பதை உலகில் நான் உறுதியாக அறிந்திருந்தேன்.”
அரபு விரிவுரைகள்:
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
69.21. அவர் நிலையான அருட்கொடைகளைக் காண்பதால், திருப்தியான வாழ்க்கையில் இருப்பார்.
அரபு விரிவுரைகள்:
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
69.22. உயர்ந்த அந்தஸ்தையும் இடத்தையும் உடைய சுவனத்தில் இருப்பார்.
அரபு விரிவுரைகள்:
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
69.23. அதன் பழங்கள் பறிப்பதற்கு ஏதுவாக அருகிலிருக்கும்.
அரபு விரிவுரைகள்:
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟
69.24. அவர்களைக் கண்ணியப்படுத்தும் பொருட்டு கூறப்படும்: “நீங்கள் உலகில் கடந்த காலங்களில் செய்த நற்செயல்களின் காரணமாக உண்ணுங்கள், பருகுங்கள். அதில் எவ்வித பாதிப்பும் இருக்கமாட்டாது.
அரபு விரிவுரைகள்:
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬— فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ
69.25. யாருடைய செயல்பதிவேடு அவரது இடக்கையில் கொடுக்கப்படுமோ அவர் கடுமையாக வருந்தி கூறுவார்: “அந்தோ! என் வேதனைக்குக் காரணமான நான் செய்த தீய செயல்களின் செயல்பதிவேடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்கக்கூடாதா!
அரபு விரிவுரைகள்:
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
69.26. நான் என் விசாரணையைக் குறித்து எதுவும் அறியாமல் இருந்துவிட்டேனே!
அரபு விரிவுரைகள்:
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
69.27. நான் மரணித்த அந்த மரணமே முடிவான மரணமாக இருந்திருக்க வேண்டுமே! அதன் பின்பு நான் மீண்டும் எழுப்பப்படாமலே இருந்திருக்க வேண்டுமே!
அரபு விரிவுரைகள்:
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
69.28. அல்லாஹ்வின் தண்டனையின் எந்த ஒன்றை விட்டும் என் செல்வங்கள் என்னை பாதுகாக்கவில்லையே!
அரபு விரிவுரைகள்:
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
69.29. நான் நம்பிக்கொண்டிருந்த ஆதாரமான பலமும் பதவியும் என்னைவிட்டும் மறைந்துவிட்டனவே!
அரபு விரிவுரைகள்:
خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ
69.30. அப்போது கூறப்படும்: “-வானவர்களே!- அவனைப் பிடியுங்கள். அவனது கையைக் கழுத்தோடு கட்டுங்கள்.
அரபு விரிவுரைகள்:
ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ
69.31. பின்னர் அவனை நரகத்தில் நுழைத்துவிடுங்கள், அதன் வெப்பத்தை அவன் அனுபவிப்பதற்காக.
அரபு விரிவுரைகள்:
ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ
69.32. பின்னர் எழுபது முளம் நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்.”
அரபு விரிவுரைகள்:
اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ
69.33. நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்ளாதவனாக இருந்தான்.
அரபு விரிவுரைகள்:
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
69.34. மற்றவர்களை ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டாதவனாக இருந்தான்.
அரபு விரிவுரைகள்:
فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ
69.35. மறுமை நாளில் அவனை வேதனையிலிருந்து காப்பாற்றக்கூடிய எந்த நெருங்கிய உறவினரும் இருக்க மாட்டார்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• المِنَّة التي على الوالد مِنَّة على الولد تستوجب الشكر.
1. தந்தைக்குக் கிடைத்த அருள் பிள்ளைக்கும் கிடைத்ததாகவே கருதப்படும். அதற்கு நன்றி செலுத்துவது கடமையாகும்.

• إطعام الفقير والحض عليه من أسباب الوقاية من عذاب النار.
2. ஏழைகளுக்கு உணவளித்தல், அதற்கு ஆர்வமூட்டுதல் என்பன நரக வேதனையை விட்டும் பாதுகாக்கும் காரணிகளாகும்.

• شدة عذاب يوم القيامة تستوجب التوقي منه بالإيمان والعمل الصالح.
3. மறுமை நாளின் கடுமையான தண்டனையை விட்டும் நம்பிக்கை, நற்செயல்கள் என்பவற்றைக் கொண்டு பாதுகாப்புத்தேட வேண்டும்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அல்ஹாக்கா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக