அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு வசனம்: (34) அத்தியாயம்: ஸூரா அல்அஃராப்
وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚ— فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟
7.34. ஒவ்வொரு தலைமுறையின் காலக்கெடுவும் காலம் குறிப்பிடப்பட்டதாகும். நிர்ணயிக்கப்பட்ட அவர்களின் தவணை வந்துவிட்டால் அதளை விட்டும் சிறிதளவேனும் பிந்தவோ முந்தவோ மாட்டார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• المؤمن مأمور بتعظيم شعائر الله من خلال ستر العورة والتجمل في أثناء صلاته وخاصة عند التوجه للمسجد.
1. நம்பிக்கையாளன் தொழுகையில் குறிப்பாக பள்ளிவாயிலுக்கு வருகை தரும் போது மறைவிடங்களை மறைத்து தன்னை அழகுபடுத்துவதனூடாக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களை மதிக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளான்.

• من فسر القرآن بغير علم أو أفتى بغير علم أو حكم بغير علم فقد قال على الله بغير علم وهذا من أعظم المحرمات.
2. அறிவின்றி அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறுபவர் அல்லது மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் அல்லது தீர்வு வழங்குபவர், அறிவின்றி அல்லாஹ்வின் மீது அவதூறு கூறியவராவார். இது பெரும் பாவங்களில் ஒன்றாகும்.

• في الآيات دليل على أن المؤمنين يوم القيامة لا يخافون ولا يحزنون، ولا يلحقهم رعب ولا فزع، وإذا لحقهم فمآلهم الأمن.
3. மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் அச்சம் கொள்ளவோ கவலைப்படவோ மாட்டார்கள்; பயமோ பதற்றமோ அவர்களைப் பீடிக்காது. அவ்வாறு ஏற்பட்டாலும் இறுதி முடிவு அமைதியே. என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாகும்.

• أظلم الناس من عطَّل مراد الله تعالى من جهتين: جهة إبطال ما يدل على مراده، وجهة إيهام الناس بأن الله أراد منهم ما لا يريده الله.
4. அல்லாஹ்வின் நோக்கத்தை வீணாக்குபவர்கள்தாம் மிகப் பெரும் அநியாயக்காரர்களாவர். இது இரு விதங்களில் நிகழ்கிறது: ஒன்று, அவனது விருப்பத்தை அறிவிப்பவற்றை மறுத்தல். இரண்டு, அல்லாஹ் விரும்பாத விஷயத்தை அவன் விரும்பியதாக மக்களிடையே சித்தரித்தல்.

 
மொழிபெயர்ப்பு வசனம்: (34) அத்தியாயம்: ஸூரா அல்அஃராப்
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - மொழிபெயர்ப்பு அட்டவணை

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

மூடுக