Check out the new design

அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு * - மொழிபெயர்ப்பு அட்டவணை


மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அத்தவ்பா   வசனம்:
اِسْتَغْفِرْ لَهُمْ اَوْ لَا تَسْتَغْفِرْ لَهُمْ ؕ— اِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِیْنَ مَرَّةً فَلَنْ یَّغْفِرَ اللّٰهُ لَهُمْ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الْفٰسِقِیْنَ ۟۠
9.80. -தூதரே!- அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேளுங்கள். அல்லது கேட்காதீர்கள். நீர் எழுபது தடவைகள் கேட்டாலும் அல்லாஹ் அவர்களை மன்னிப்பதற்கு அது வழிவகுக்காது. ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தவர்கள். அறிந்து கொண்டே அவனுடைய சட்டத்திற்கு அடிபணிய மறுத்தவர்களுக்கு அல்லாஹ் உண்மையின் பக்கம் வழிகாட்டமாட்டான்.
அரபு விரிவுரைகள்:
فَرِحَ الْمُخَلَّفُوْنَ بِمَقْعَدِهِمْ خِلٰفَ رَسُوْلِ اللّٰهِ وَكَرِهُوْۤا اَنْ یُّجَاهِدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَقَالُوْا لَا تَنْفِرُوْا فِی الْحَرِّ ؕ— قُلْ نَارُ جَهَنَّمَ اَشَدُّ حَرًّا ؕ— لَوْ كَانُوْا یَفْقَهُوْنَ ۟
9.81. அல்லாஹ்வுடைய தூதரின் கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டு தபூக் போரை விட்டும் பின்வாங்கிய நயவஞ்சகர்கள் தாம் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியாததையிட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். நம்பிக்கையாளர்கள் போர் புரிவதைப் போல் தங்களின் செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை வெறுத்தார்கள். தங்களின் சகோதரர்களான நயவஞ்சகர்களை மனம்தளரச் செய்து அவர்களிடம், “வெப்ப காலத்தில் புறப்படாதீர்கள்” என்று கூறினார்கள். தபூக் போர் வெப்ப காலத்தில் நடைபெற்றது -தூதரே!- அவர்களிடம் நீர் கூறுவீராக: “அவர்கள் அறிவார்களானால் நயவஞ்சகர்களுக்காக காத்திருக்கும் நரக நெருப்பு இவர்கள் விரண்டோடும் இந்த வெப்பத்தைவிட அதிக வெப்பமானது.”
அரபு விரிவுரைகள்:
فَلْیَضْحَكُوْا قَلِیْلًا وَّلْیَبْكُوْا كَثِیْرًا ۚ— جَزَآءً بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
9.82. போரை விட்டு பின்தங்கிய இந்த நயவஞ்சகர்கள், தாம் இவ்வுலகில் சம்பாதித்த நிராகரிப்பு, பாவங்கள் ஆகியவற்றினால், அழியக்கூடிய இவ்வுலக வாழ்க்கையில் குறைவாக சிரிக்கட்டும், இவ்வுலகில் சம்பாதித்த நிராகரிப்பு, பாவங்கள் குற்றங்கள் ஆகியவற்றினால் நிலையான மறுமை வாழ்க்கையில் அதிகமாக அழட்டும்.
அரபு விரிவுரைகள்:
فَاِنْ رَّجَعَكَ اللّٰهُ اِلٰی طَآىِٕفَةٍ مِّنْهُمْ فَاسْتَاْذَنُوْكَ لِلْخُرُوْجِ فَقُلْ لَّنْ تَخْرُجُوْا مَعِیَ اَبَدًا وَّلَنْ تُقَاتِلُوْا مَعِیَ عَدُوًّا ؕ— اِنَّكُمْ رَضِیْتُمْ بِالْقُعُوْدِ اَوَّلَ مَرَّةٍ فَاقْعُدُوْا مَعَ الْخٰلِفِیْنَ ۟
9.83. -நபியே!- நயவஞ்சகத்தில் நிலைத்திருக்கும் இந்த நயவஞ்சகர்களிடம் அல்லாஹ் உம்மை திரும்ப வரச் செய்து, வேறு போரில் உம்முடன் புறப்படுவதற்காக அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் கூறுவீராக: -“நயவஞ்சகர்களே!- உங்களுக்குத் தண்டனையாக அமையும் பொருட்டும், நீங்கள் என்னுடன் இருந்தால் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்குமுகமாகவும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக நீங்கள் என்னுடன் ஒருபோதும் புறப்பட வேண்டாம். நீங்கள் தபூக் போரை விட்டும் பின்தங்குவதை விரும்பினீர்கள். எனவே பின்தங்கிய சிறுவர்கள், பெண்கள் மற்றும் நோயாளிகளுடன் நீங்களும் தங்கிவிடுங்கள்.
அரபு விரிவுரைகள்:
وَلَا تُصَلِّ عَلٰۤی اَحَدٍ مِّنْهُمْ مَّاتَ اَبَدًا وَّلَا تَقُمْ عَلٰی قَبْرِهٖ ؕ— اِنَّهُمْ كَفَرُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَمَاتُوْا وَهُمْ فٰسِقُوْنَ ۟
9.84. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களில் யார் இறந்தாலும் அவர்களுக்காக நீர் தொழுகை நடத்தாதீர். அவரது அடக்கத்தலத்தில் அவருக்காக பிரார்த்தித்தவாறு நிற்காதீர்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்து, அவனுக்கு அடிபணியாத நிலையில் மரணித்தும் விட்டார்கள். இவ்வாறானவர்களுக்கு தொழுகை நடத்தவோ பிரார்த்தனை செய்யவோ கூடாது.
அரபு விரிவுரைகள்:
وَلَا تُعْجِبْكَ اَمْوَالُهُمْ وَاَوْلَادُهُمْ ؕ— اِنَّمَا یُرِیْدُ اللّٰهُ اَنْ یُّعَذِّبَهُمْ بِهَا فِی الدُّنْیَا وَتَزْهَقَ اَنْفُسُهُمْ وَهُمْ كٰفِرُوْنَ ۟
9.85. -தூதரே!- இந்த நயவஞ்சகர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். அல்லாஹ் அவற்றைக் கொண்டு இவ்வுலக வாழ்வில் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறான். அது அவற்றை அடைவதில் அவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களும் அவற்றில் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்களுமாகும். மேலும் அவர்கள் நிராகரித்த நிலையிலேயே அவர்களின் உயிர்களும் பிரிய வேண்டும் எனவும் அல்லாஹ் விரும்புகிறான்.
அரபு விரிவுரைகள்:
وَاِذَاۤ اُنْزِلَتْ سُوْرَةٌ اَنْ اٰمِنُوْا بِاللّٰهِ وَجَاهِدُوْا مَعَ رَسُوْلِهِ اسْتَاْذَنَكَ اُولُوا الطَّوْلِ مِنْهُمْ وَقَالُوْا ذَرْنَا نَكُنْ مَّعَ الْقٰعِدِیْنَ ۟
9.86. அல்லாஹ் தன் தூதர் முஹம்மது மீது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டு, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்யும்படி கட்டளையிட்டு ஏதேனும் அத்தியாயத்தை இறக்கினால் அவர்களில் வசதியானவர்கள் உம்மை விட்டும் பின்தங்குவதற்கு அனுமதி கோருகிறார்கள். “எங்களை விட்டு விடுங்கள். நோய், பலவீனம் போன்ற காரணங்களால் பின்தங்குவோருடன் எம்மையும் தங்குவதற்க விட்டு விடுங்கள்” என அவர்கள் கூறுகிறார்கள்.
அரபு விரிவுரைகள்:
இப்பக்கத்தின் வசனங்களிலுள்ள பயன்கள்:
• الكافر لا ينفعه الاستغفار ولا العمل ما دام كافرًا.
1. நிராகரித்த நிலையில் செய்யப்படும் பாவமன்னிப்பும் நற்செயலும் நிராகரிப்பாளனுக்கு எப்பயனையும் அளிக்காது.

• الآيات تدل على قصر نظر الإنسان، فهو ينظر غالبًا إلى الحال والواقع الذي هو فيه، ولا ينظر إلى المستقبل وما يتَمَخَّض عنه من أحداث.
2. வசனங்கள் மனிதனின் குறுகிய பார்வையை சுட்டிக் காட்டுகிறது. ஏனெனில் அவன் பெரும்பாலும் தற்போதைய அவன் இருக்கும் நிலமையையே பார்க்கிறான். எதிர்காலம் அதில் நிகழப்போகும் எதைக் குறித்தும் சிந்திப்பதில்லை.

• التهاون بالطاعة إذا حضر وقتها سبب لعقوبة الله وتثبيطه للعبد عن فعلها وفضلها.
3. குறிப்பிட்ட நேரத்தில் வணக்கவழிபாடுகளைச் செய்வதில் ஏற்படும் கவனயீம் அல்லாஹ்வின் தண்டனைக்கும் அதனைச் செய்வது மற்றும் அதன் சிறப்பு என்பவற்றை விட்டும் தூரமாவதற்குக் காரணமாகும்.

• في الآيات دليل على مشروعية الصلاة على المؤمنين، وزيارة قبورهم والدعاء لهم بعد موتهم، كما كان النبي صلى الله عليه وسلم يفعل ذلك في المؤمنين.
4. இறைவிசுவாசிகளின் மீது தொழுகை நடாத்துதல், அவர்களது மண்ணறைகளைத் தரிசித்தல் அவர்களது மரணத்தின் பின் அவர்களுக்காக பிரார்த்தனை புரிதல் ஆகியவை அனுமதிக்கப்பட்டதாகும் என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாகும். அவ்வாறே நம்பிக்கையாளர்கள் விடயத்தில் நபியவர்கள் நடந்துகொண்டார்கள்.

 
மொழிபெயர்ப்பு அத்தியாயம்: அத்தவ்பா
அத்தியாயங்களின் அட்டவணை பக்க எண்
 
அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - அல்முக்தஸர் பீ தப்ஸீரில் குர்ஆனில் கரீமுக்கான தமிழ் மொழிபெயர்ப்பு - மொழிபெயர்ப்பு அட்டவணை

வெளியீடு அல்குர்ஆன் ஆய்வுகளுக்கான தப்ஸீர் மையம்

மூடுக