அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

பக்க எண்:close

external-link copy
46 : 18

اَلْمَالُ وَالْبَنُوْنَ زِیْنَةُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَالْبٰقِیٰتُ الصّٰلِحٰتُ خَیْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَیْرٌ اَمَلًا ۟

செல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். என்றும் நிலையாக இருக்கும் நற்செயல்கள் உம் இறைவனிடம் நன்மையிலும் சிறந்தவை, ஆசையிலும் சிறந்தவை. info
التفاسير:

external-link copy
47 : 18

وَیَوْمَ نُسَیِّرُ الْجِبَالَ وَتَرَی الْاَرْضَ بَارِزَةً ۙ— وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًا ۟ۚ

இன்னும் மலைகளை நாம் பெயர்த்துவிடும் நாளில் (நிகழ்பவற்றை நினைவு கூருவீராக! அப்போது,) பூமியை (அதில் உள்ள அனைத்தையும் விட்டு நீங்கி) வெளிப்பட்டதாக பார்ப்பீர். இன்னும் அவர்களை ஒன்று திரட்டுவோம். அவர்களில் ஒருவரையும் விடமாட்டோம். info
التفاسير:

external-link copy
48 : 18

وَعُرِضُوْا عَلٰی رَبِّكَ صَفًّا ؕ— لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍ ؗ— بَلْ زَعَمْتُمْ اَلَّنْ نَّجْعَلَ لَكُمْ مَّوْعِدًا ۟

உம் இறைவன் முன் வரிசையாக சமர்ப்பிக்கப்படுவார்கள். (அவன் கூறுவான்,) “நாம் உங்களை முதல்முறைப் படைத்தவாறே (இப்போது) எங்களிடம் வந்துவிட்டீர்கள். மாறாக, உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நேரத்தை ஆக்கவே மாட்டோம் என்று (உலகில் வாழும்போது) பிதற்றினீர்கள்.” info
التفاسير:

external-link copy
49 : 18

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَی الْمُجْرِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا فِیْهِ وَیَقُوْلُوْنَ یٰوَیْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا یُغَادِرُ صَغِیْرَةً وَّلَا كَبِیْرَةً اِلَّاۤ اَحْصٰىهَا ۚ— وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًا ؕ— وَلَا یَظْلِمُ رَبُّكَ اَحَدًا ۟۠

(செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். அதில் உள்ளவற்றினால் பயந்தவர்களாக (அந்த) குற்றவாளிகளைப் பார்ப்பீர். எங்கள் நாசமே! இந்த புத்தகத்திற்கு என்ன? (குற்றங்களில்) சிறியதையும் பெரியதையும் அவற்றை அது கணக்கிட்டே தவிர (-அவற்றைப் பதிவு செய்து வைக்காமல்) அது விடவில்லையே! எனக் கூறுவார்கள். அவர்கள் செய்ததை (அவர்களுக்கு) முன்னால் காண்பார்கள். உம் இறைவன் ஒருவருக்கும் தீங்கிழைக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
50 : 18

وَاِذْ قُلْنَا لِلْمَلٰٓىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَ ؕ— كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖ ؕ— اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّیَّتَهٗۤ اَوْلِیَآءَ مِنْ دُوْنِیْ وَهُمْ لَكُمْ عَدُوٌّ ؕ— بِئْسَ لِلظّٰلِمِیْنَ بَدَلًا ۟

ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆகவே (அவர்கள்) சிரம் பணிந்தனர் இப்லீசைத் தவிர. அவன் ஜின்களில் ஒருவனாக இருந்தான். தன் இறைவனின் கட்டளையை மீறினான். அவனையும் அவனது சந்ததியையும் என்னையன்றி (உங்கள்) நண்பர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்களுக்கு எதிரிகள். (அல்லாஹ்வின் நட்பை விட்டுவிட்டு ஷைத்தானை நண்பனாக மாற்றிய அந்த) தீயவர்களுக்கு அவன் மிக கெட்ட மாற்றமாவான். info
التفاسير:

external-link copy
51 : 18

مَاۤ اَشْهَدْتُّهُمْ خَلْقَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلَا خَلْقَ اَنْفُسِهِمْ ۪— وَمَا كُنْتُ مُتَّخِذَ الْمُضِلِّیْنَ عَضُدًا ۟

வானங்கள் இன்னும் பூமியை படைத்ததிலும் (ஏன்) அவர்களையே படைத்ததிலும் அவர்களை நான் (என் உதவிக்கு) ஆஜராக்கவில்லை. வழிகெடுப்பவர்களை உதவியாளர்களாக எடுத்துக் கொள்பவனாக நான் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
52 : 18

وَیَوْمَ یَقُوْلُ نَادُوْا شُرَكَآءِیَ الَّذِیْنَ زَعَمْتُمْ فَدَعَوْهُمْ فَلَمْ یَسْتَجِیْبُوْا لَهُمْ وَجَعَلْنَا بَیْنَهُمْ مَّوْبِقًا ۟

இன்னும் நீங்கள் பிதற்றிய என் இணைகளை (உங்கள் உதவிக்கு) அழையுங்கள் என அவன் கூறும் நாளை (நினைவு கூருங்கள்). அவர்கள் அவற்றை அழைப்பார்கள். (ஆனால்) அவை அவர்களுக்கு பதிலளிக்க மாட்டாது. அவர்களுக்கு மத்தியில் ஓர் அழிவிடத்தை ஆக்குவோம். info
التفاسير:

external-link copy
53 : 18

وَرَاَ الْمُجْرِمُوْنَ النَّارَ فَظَنُّوْۤا اَنَّهُمْ مُّوَاقِعُوْهَا وَلَمْ یَجِدُوْا عَنْهَا مَصْرِفًا ۟۠

குற்றவாளிகள் நரகத்தை பார்த்து நிச்சயம் தாங்கள் அதில் விழக்கூடியவர்கள் தான் என்று உறுதி கொள்வார்கள். அதை விட்டு விலகுமிடத்தை அவர்கள் (தங்களுக்கு) காண மாட்டார்கள். info
التفاسير: