Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu Yûnus   Ayet:
اَلَاۤ اِنَّ اَوْلِیَآءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
10.62. அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் நேசர்களுக்கு, அவர்கள் மறுமை நாளில் எதிர்கொள்ளும் பயங்கரங்களால் எந்த அச்சமும் இல்லை. அவர்களுக்குத் தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள்.
Arapça tefsirler:
الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟ؕ
10.63. இந்த இறைநேசர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்களும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சுபவர்களாக இருந்தவர்களுமேயாவர்.
Arapça tefsirler:
لَهُمُ الْبُشْرٰی فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ؕ— لَا تَبْدِیْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ؕ
10.64. அவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் நல்ல கனவின் மூலம், மக்கள் அவர்களைப் புகழ்வதன் மூலம் நற்செய்தி உண்டு; அவர்களின் உயிர்களைக் கைப்பற்றப்படும் போதும், மரணித்த பின்னரும், ஒன்று திரட்டப்படும் போதும் வானவர்களிடமிருந்து அவர்களுக்கு நற்செய்தி உண்டு. அல்லாஹ் அவர்களுக்கு அளித்த வாக்குறுதியில் எவ்வித மாற்றமும் இல்லை. அந்த வெகுமதியே மாபெரும் வெற்றியாகும். ஏனெனில் அதில்தான் எதிர்பார்த்தது கிடைத்து அச்சப்பட்டதில் இருந்து பாதுகாப்பு உண்டு.
Arapça tefsirler:
وَلَا یَحْزُنْكَ قَوْلُهُمْ ۘ— اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِیْعًا ؕ— هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
10.65. -தூதரே!- உம் மார்க்கத்தைக் குறைகூறி இவர்கள் கூறும் கருத்துகளால் நீர் கவலையடைய வேண்டாம். நிச்சயமாக ஆதிக்கமும் வெற்றியும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. யாரும் அவனை மிகைத்துவிட முடியாது. அவர்கள் பேசுவதை அவன் செவியேற்கக்கூடியவன். அவர்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَنْ فِی السَّمٰوٰتِ وَمَنْ فِی الْاَرْضِ ؕ— وَمَا یَتَّبِعُ الَّذِیْنَ یَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَآءَ ؕ— اِنْ یَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا یَخْرُصُوْنَ ۟
10.66. அறிந்துகொள்ளுங்கள், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். அல்லாஹ்வைத் தவிர இணைத் தெய்வங்களை வணங்கும் இணைவைப்பாளர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? உண்மையில் அவர்கள் யூகங்களையே பின்பற்றுகிறார்கள். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஆக்கியதில் அவர்கள் பொய்யே கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்துவிட்டான்.
Arapça tefsirler:
هُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِتَسْكُنُوْا فِیْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
10.67. -மனிதர்களே!- நீங்கள் களைப்பிலிருந்து ஓய்வெடுப்பதற்காக இரவை அவனே உண்டாக்கினான். நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதை உழைத்துக் கொள்வதற்காக பகலை அவனே பிரகாசமானதாக ஆக்கியுள்ளான். நிச்சயமாக இதில் படிப்பினை பெற்று கீழ்ப்படியும் எண்ணத்துடன் செவியேற்கக் கூடியவர்களுக்கு தெளிவான சான்றுகள் இருக்கின்றன.
Arapça tefsirler:
قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ؕ— هُوَ الْغَنِیُّ ؕ— لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍ بِهٰذَا ؕ— اَتَقُوْلُوْنَ عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟
10.68. இணைவைப்பாளர்களில் ஒரு பிரிவினர், “அல்லாஹ் வானவர்களை மகள்களாக எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். அவன் படைப்புகள் அனைத்தையும் விட்டு தேவையற்றவன். வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. -இணைவைப்பாளர்களே!- உங்களது இக்கூற்றுக்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அல்லாஹ்வுக்கு பிள்ளை உண்டு என்ற மிகப் பெரும் கருத்தை அதன் யதார்த்தத்தைப் புரியாமல் ஆதாரமின்றி அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுகிறீர்களா?
Arapça tefsirler:
قُلْ اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ
10.69. -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கு பிள்ளை உள்ளதாக அவன் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுபவர்கள் தாங்கள் விரும்பும் விஷயத்தைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து தப்பித்து ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள்.
Arapça tefsirler:
مَتَاعٌ فِی الدُّنْیَا ثُمَّ اِلَیْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِیْقُهُمُ الْعَذَابَ الشَّدِیْدَ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠
10.70. அவர்கள் அனுபவிக்கும் இவ்வுலக இன்பங்களைக் கொண்டு அவர்கள் ஏமாந்துவிட வேண்டாம். அவை அழியக்கூடிய அற்ப இன்பமே. பின்னர் மறுமை நாளில் நம்மிடமே அவர்கள் திரும்பிவர வேண்டும். பின்னர், அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்ததனாலும் தூதரை பொய்யர் என்று கூறியதனாலும் நாம் அவர்களை கடுமையான வேதனையை அனுபவிக்கச் செய்வோம்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• ولاية الله تكون لمن آمن به، وامتثل أوامره، واجتنب نواهيه، واتبع رسوله صلى الله عليه وسلم، وأولياء الله هم الآمنون يوم القيامة، ولهم البشرى في الدنيا إما بالرؤيا الصالحة أو عند الموت.
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களுக்கே அல்லாஹ்வின் நேசம் உண்டு. அல்லாஹ்வின் நேசர்களே மறுமையில் அச்சமற்றிருப்போர். அவர்களுக்கு உலகில் நல்ல கனவுகளைக் கொண்டோ மரணத்தின்போதோ நற்செய்தி உண்டு.

• العزة لله جميعًا وحده ؛ فهو مالك الملك، وما عُبِد من دون الله لا حقيقة له.
2. கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது. அவனே ஆட்சியதிகாரங்களின் அதிபதி. அவனைத் தவிர வணங்கப்படும் அனைத்தும் போலியானவையே.

• الحث على التفكر في خلق الله؛ لأن ذلك يقود إلى الإيمان به وتوحيده.
3. அல்லாஹ்வின் படைப்பைப் பற்றிச் சிந்திப்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அது அவனை நம்புவதற்கும் ஏகத்துவப்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

• حرمة الكذب على الله عز وجل، وأن صاحبه لن يفلح، ومن أعظم الكذب نسبة الولد له سبحانه.
4. அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பது ஹராமாகும். அவ்வாறு செய்பவன் வெற்றியடைய மாட்டான். பொய்களில் பெரியது அல்லாஹ்வுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறுவதாகும்.

 
Anlam tercümesi Sure: Sûratu Yûnus
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat