Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu Yûsuf   Ayet:
وَمَاۤ اُبَرِّئُ نَفْسِیْ ۚ— اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّیْ ؕ— اِنَّ رَبِّیْ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
12.53. அரசரின் மனைவி தொடர்ந்து கூறினாள்: “நான் என் மனதில் தீய எண்ணம் கொள்ளவில்லை என்று கூறமாட்டேன். இதன் மூலம் என்னைப் பரிசுத்தப்படுத்தவும் நான் விரும்பவில்லை. ஏனெனில் மனித மனம் தான் விரும்புவற்றின் பால் சாய்வதனாலும் அதனைத் தடுத்துக் கொள்வது சிரமம் என்பதாலும் தீயவற்றை அதிகமாக ஏவுதல் அதன் இயல்பாகும். தீயவற்றை ஏவுவதை விட்டும் அதனைப் பாதுகாத்து அல்லாஹ் அருள்புரிந்தவர்களைத் தவிர. தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.
Arapça tefsirler:
وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِیْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِیْ ۚ— فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْیَوْمَ لَدَیْنَا مَكِیْنٌ اَمِیْنٌ ۟
12.54. யூஸுஃப் நிரபராதி, அறிவாளி என்பது தெளிவாகி அதனை அறிந்துகொண்ட பின்னர் அரசர் தம் உதவியாளர்களிடம் கூறினார்: “அவரை அழைத்து வாருங்கள். அவரை நான் எனக்காக வைத்துக் கொள்கிறேன்.” அவர் அழைத்து வரப்பட்டார். அரசர் அவரிடம் பேசிய போது அவருடைய அறிவையும் ஞானத்தையும் அறிந்து கொண்டார். அவரிடம் கூறினார்: -“யூஸுஃபே!- நிச்சயமாக இன்றைய தினம் நீர் எங்களிடம் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் பதவியுடையவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் ஆகிவிட்டீர்.”
Arapça tefsirler:
قَالَ اجْعَلْنِیْ عَلٰی خَزَآىِٕنِ الْاَرْضِ ۚ— اِنِّیْ حَفِیْظٌ عَلِیْمٌ ۟
12.55. யூஸுஃப் அரசரிடம் கூறினார்: “எகிப்து நாட்டிலுள்ள பொக்கிஷங்களுக்கும் உணவுகளுக்கும் என்னைப் பொறுப்பாளராக நியமியுங்கள். நிச்சயமாக நான் நம்பிக்கையான பாதுகாப்பாளன். பொறுப்பேற்றுள்ள விஷயத்தைப் பற்றி நன்கறிந்தவனாகவும் இருக்கின்றேன்.
Arapça tefsirler:
وَكَذٰلِكَ مَكَّنَّا لِیُوْسُفَ فِی الْاَرْضِ ۚ— یَتَبَوَّاُ مِنْهَا حَیْثُ یَشَآءُ ؕ— نُصِیْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ وَلَا نُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟
12.56. நாம் யூஸுஃபை குற்றமற்றவர் என நிரூபித்து அவரை சிறையிலிருந்து விடுவித்து அவர் மீது அருள்புரிந்ததைப் போன்று எகிப்தில் அவருக்கு இடமளித்தும் அவர் மீது அருள்புரிந்தோம். அவர் தாம் நாடிய இடத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்கலாம். இந்த உலகில் நாம் விரும்பும் அடியார்களுக்கு நம் அருளை வழங்குகின்றோம். நன்மை செய்வோரின் கூலியை நாம் ஒருபோதும் வீணாக்குவதில்லை. மாறாக அவர்களுக்குரிய கூலியை குறைவின்றி நிறைவாக நாம் அவர்களுக்கு வழங்கி விடுவோம்.
Arapça tefsirler:
وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَیْرٌ لِّلَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠
12.57. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு அவன் மறுமையில் தயார்படுத்தி வைத்துள்ள நன்மையானது இவ்வுலக நன்மைகளைவிடச் சிறந்ததாகும்.
Arapça tefsirler:
وَجَآءَ اِخْوَةُ یُوْسُفَ فَدَخَلُوْا عَلَیْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟
12.58. யூஸுஃபின் சகோதரர்கள் தங்களின் பொருள்களுடன் எகிப்து நாட்டிற்கு வந்து அவரிடம் வந்தார்கள். அவர்கள் தமது சகோதரர்கள் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஆனால் அவர்கள் நீண்ட காலம் கடந்து விட்டதனாலும் அவருடைய உருவத்தில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் அவர் தமது சகோதரர் என்பதை அறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவரைக் கிணற்றில் அவர்கள் போட்ட போது அவர் சிறுவராக இருந்தார்.
Arapça tefsirler:
وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِیْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِیْكُمْ ۚ— اَلَا تَرَوْنَ اَنِّیْۤ اُوْفِی الْكَیْلَ وَاَنَا خَیْرُ الْمُنْزِلِیْنَ ۟
12.59. யூஸுஃப், அவர்கள் வேண்டிய உணவுப் பொருளையும் கட்டுச்சாதனத்தையும் அவர்களுக்கு அளித்த போது, தங்களுக்கு தந்தை வழிச்சகோதரன் ஒருவர் உண்டு, அவரைத் தமது தந்தையிடம் விட்டு வந்தள்ளதாக அவர்கள் அவரிடம் தெரிவித்ததும் அவர் அவர்களிடம் கூறினார்: “உங்களின் தந்தைவழிச் சகோதரனையும் என்னிடம் அழைத்து வாருங்கள். ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பொருள்களை அதிகப்படுத்தி தருகின்றேன். நான் உங்களுக்கு அளவைக் குறைக்காமல் அதிகப்படுத்தி தருகின்றேன், நான் மிகச் சிறந்த முறையில் விருந்தளிப்பவன் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?.
Arapça tefsirler:
فَاِنْ لَّمْ تَاْتُوْنِیْ بِهٖ فَلَا كَیْلَ لَكُمْ عِنْدِیْ وَلَا تَقْرَبُوْنِ ۟
12.60. நீங்கள் அவரை அழைத்து வரவில்லையென்றால் உங்களுக்கு தந்தைவழிச் சகோதரன் இருப்பதாக நீங்கள் கூறியது பொய்யாகி விடும். எனவே உங்களுக்கு ஒருபோதும் உணவுதர மாட்டேன். நீங்கள் எனது ஊரை நெருங்கவும் வேண்டாம்.
Arapça tefsirler:
قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفٰعِلُوْنَ ۟
12.61. அவருடைய சகோதரர்கள் கூறினார்கள்: “நாங்கள் எங்கள் தந்தையிடம் வேண்டுவோம். அவரை அழைத்து வருவதற்கு முழு முயற்சி செய்வோம். நீங்கள் இட்ட கட்டளையை நிச்சயம் நாங்கள் எவ்வித குறையுமின்றி செய்பவர்களே.”
Arapça tefsirler:
وَقَالَ لِفِتْیٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِیْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ یَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمْ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
12.62. யூஸுஃப் தம் பணியாளர்களிடம் கூறினார்: “அவர்கள் வீடு திரும்பியவுடன் நாம் அவர்களிடம் எதையும் வாங்கவில்லை என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர்களின் பொருட்களை அவர்களிடமே திருப்பியளித்து விடுங்கள். இவ்வாறு செய்வது, அவர்கள் தமது நம்பகத் தன்மையை யூஸுஃபிடம் நிரூபிப்பதற்கும் அவர்களது பொருட்களை அவர் ஏற்றுக்கொள்வதற்காகவும் அவர்களது சகோதரரை அழைத்துக் கொண்டு மீண்டும் வருவதற்கு அவர்களை நிர்ப்பந்திக்கும்.
Arapça tefsirler:
فَلَمَّا رَجَعُوْۤا اِلٰۤی اَبِیْهِمْ قَالُوْا یٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَیْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ۟
12.63. அவர்கள் தம் தந்தையிடம் வந்து, யூஸுஃப் அவர்களைக் கண்ணியப்படுத்தியது முதற்கொண்டு நடந்த எல்லாவற்றையும் எடுத்துரைத்து விட்டு கூறினார்கள். “எங்களின் தந்தையே! நாங்கள் எங்கள் சகோதரனை அழைத்துச் செல்லவில்லையென்றால் எங்களுக்கு எந்த தானியமும் கிடைக்காது. எனவே அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். நீங்கள் அவரை எங்களுடன் அனுப்பி வைத்தால் நாங்கள் தானியத்தைப் பெறுவோம். அவர் உங்களிடம் பாதுகாப்பாக வந்து சேரும் வரை அவரைப் பாதுகாப்போம் என நாங்கள் உங்களுக்கு வாக்குறுதியளிக்கின்றோம்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• من أعداء المؤمن: نفسه التي بين جنبيه؛ لذا وجب عليه مراقبتها وتقويم اعوجاجها.
1. நம்பிக்கையாளனின் எதிரிகளில் ஒன்றுதான் அவனது இரு விலாப் புறங்களுக்கு மத்தியிலுள்ள மனமாகும். எனவே அதனை கண்காணித்துக் கொண்டேயிருப்பதும் அதன் கோணலைச் சரிசெய்வதும் நம்மீது கட்டாயக் கடமையாகும்.

• اشتراط العلم والأمانة فيمن يتولى منصبًا يصلح به أمر العامة.
2.பொது மக்களின் விவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு பதவியை வகிப்பவர்களிடம் அறிவும் அமானிதமும் இருப்பது நிபந்தனையாகும்.

• بيان أن ما في الآخرة من فضل الله، إنما هو خير وأبقى وأفضل لأهل الإيمان.
3.மறுமையில் கிடைக்கும் அல்லாஹ்வின் அருள்களே நிச்சயமாக நம்பிக்கையாளர்களுக்கு சிறந்ததும் நிரந்தரமானதுமாகும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

• جواز طلب الرجل المنصب ومدحه لنفسه إن دعت الحاجة، وكان مريدًا للخير والصلاح.
4.ஒரு மனிதன் நலவையும் சீர்திருத்தத்தையும் விரும்புவராக இருந்தால் தேவை ஏற்படும் போது பதவியைக் கேட்பதும் தன்னைப் புகழ்வதும் அனுமதிக்கப்பட்டதாகும்.

 
Anlam tercümesi Sure: Sûratu Yûsuf
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat