Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu'l-Bakarah   Ayet:
وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ— قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟
2.135. யூதர்கள் இந்த சமூகத்தைப் பார்த்துக் கூறுகிறார்கள், யூதர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழியை அடைந்துவிடுவீர்கள் என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள், கிருஸ்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழியை அடைந்துவிடுவீர்கள் என்று. தூதரே, நீர் அவர்களிடம் கூறும், தவறான மார்க்கங்களை விட்டு நீங்கி சத்தியத்தின் பக்கம் முழுமையாகச் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். அவர் அல்லாஹ்வுக்கு இணைவைப்பவராக இருந்ததில்லை.
Arapça tefsirler:
قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ— وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟
2.136. நம்பிக்கையாளர்களே, தவறான வாதம்புரியும் யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொண்டோம். இப்ராஹீம், அவரது பிள்ளைகளான இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கு இறக்கப்பட்டதன் மீதும் யஅகூபின் சந்ததிகளில் தூதர்களாக வந்தவர்களுக்கு இறக்கப்பட்டதன்மீதும் அல்லாஹ் மூசாவுக்கு வழங்கிய தவ்ராத்தின்மீதும் ஈசாவுக்கு வழங்கிய இன்ஜீலின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அனைத்து இறைத்தூதர்கள் மீதும் இறக்கப்பட்ட வேதங்களின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவர்களில் சிலரை ஏற்று, சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வோம். அவன் ஒருவனுக்கு மாத்திரமே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.
Arapça tefsirler:
فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ— وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِیْ شِقَاقٍ ۚ— فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ؕ
2.137. நீங்கள் நம்பிக்கைகொண்டது போன்று யூதர்களும், கிருஸ்தவர்களும் நம்பிக்கைகொண்டால் அவர்கள் அல்லாஹ் தேர்ந்தெடுத்த நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அவர்கள் இறைத்தூதர்களை நிராகரித்தால் அல்லது அவர்களில் சிலரை நிராகரித்தால் அவர்கள் பகைமையிலும் முரண்பாட்டிலும் இருப்பவர்களாவர். தூதரே, நீர் கவலைகொள்ளாதீர். அல்லாஹ்வே உமக்குப் போதுமானவன். அவர்களின் தீங்குகளிலிருந்து அவனே உம்மைப் பாதுகாப்பான்; அவர்களுக்கு எதிராக உமக்கு உதவிசெய்வான். அவர்கள் பேசும் விஷயங்களை அவன் கேட்டுக்கொண்டிருக்கிறான்; அவர்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
Arapça tefsirler:
صِبْغَةَ اللّٰهِ ۚ— وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ؗ— وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ۟
2.138. அல்லாஹ் உங்களைப் படைத்த அவனுடைய இயற்கையான மார்க்கத்தில் வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் நிலைத்திருங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட சிறந்த மார்க்கம் வேறு இல்லை. அது நன்மைகளைக் கொண்டுவரக்கூடிய, தீமைகளைத் தடுக்கக்கூடிய இயற்கை மார்க்கமாகும். நீங்கள் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம் என்று.
Arapça tefsirler:
قُلْ اَتُحَآجُّوْنَنَا فِی اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ ۚ— وَلَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۚ— وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۟ۙ
2.139. தூதரே! நீர் கூறுவீராக, வேதக்காரர்களே, உங்களின் மார்க்கமும் வேதமும் எங்களைவிட முந்தியது என்பதால் நீங்கள்தாம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எங்களைவிட நெருங்கியவர்கள் என்று கூறுகிறீர்களா? நிச்சயமாக இவை உங்களுக்குப் பயன்தராது. அல்லாஹ்தான் நம் அனைவரின் இறைவன். நீங்கள் மட்டும் அவனை சொந்தம் கொண்டாட முடியாது. எங்களுக்கு எங்களின் செயல்கள். அதைக்குறித்து நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். உங்களுக்கு உங்களின் செயல்கள். அதைக்குறித்து நாங்கள் கேட்கப்பட மாட்டோம். ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். நாங்கள் வணக்க வழிபாட்டையும் கீழ்ப்படிதலையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தாக்குகின்றோம். அவனுக்கு இணையாக யாரையும் ஆக்க மாட்டோம்.
Arapça tefsirler:
اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ— وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟
2.140. அல்லது வேதக்காரர்களே! இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு மற்றும் யஃகூபின் சந்ததிகளில் வந்த தூதர்கள் அனைவரும் யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? தூதரே! அவர்களிடம் நீர் கேளும், நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று. அந்த தூதர்கள் இவர்கள் மார்க்கத்தில்தான் இருந்தார்கள் என்று இவர்கள் கூறினால் இவர்கள் பொய்கூறியவர்களாவர். ஏனெனில் தவ்ராத், இன்ஜீல் இறக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் வாழ்ந்து மரணித்துவிட்டார்களே!? எனவே இந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் பொய் கூறுகிறார்கள் என்பதும் அவர்கள் தங்களுக்கு இறக்கப்பட்ட சத்தியத்தை மறைத்தார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. வேதக்காரர்களைப்போன்று அல்லாஹ்விடமிருந்து அறிந்த சாட்சியத்தை மறைப்பவர்களைவிட அநியாயக்காரர்கள் வேறு யாருமில்லை. நீங்கள் செய்கின்ற செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.
Arapça tefsirler:
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠
2.141. அது உங்களுக்கு முன்னர் கடந்துபோன சமூகம். அவர்கள் சேர்த்துவைத்த செயல்களின் பக்கம் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த செயல்கள் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவர் செய்த பாவத்தினால் தண்டிக்கப்பட மாட்டார். அவர் செய்த செயல்களே அவருக்குப் பயனளிக்கும். ஒவ்வொருவரும் தம்முடைய செயல்களுக்கேற்பத்தான் கூலி வழங்கப்படுவார்கள்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• أن دعوى أهل الكتاب أنهم على الحق لا تنفعهم وهم يكفرون بما أنزل الله على نبيه محمد صلى الله عليه وسلم.
1. முஹம்மது நபியின் மீது அல்லாஹ் இறக்கியதை மறுத்த நிலையில் வேதக்காரர்கள் தாங்கள் சத்தியத்தில் இருப்பதாகக் கூறிக்கொள்வது எந்தப் பயனையும் அளிக்காது.

• سُمِّي الدين صبغة لظهور أعماله وسَمْته على المسلم كما يظهر أثر الصبغ في الثوب.
2. சாயத்தின் அடையாளம் ஆடையில் தென்படுவது போன்று மார்க்க காரியங்களும் அதன் தோற்றமும் முஸ்லிமில்جعلنا للأحاديث ترقيمان، الأول موافق لترقيم طبعة عالم الكتب ببيروت، ويشمل ترقيما خاصا لأحاديث المقدمة، وعددها (103) حديثا، وترقيما آخر لأحاديث الصحيح، وعددها (7666) حديثا، أما الترقيم الثاني فهو موافق لترقيم محمد فؤاد عبد الباقي، [الفرعي - والعام]، وعدد الأحاديث بالترقيم العام هو (3033) حديثا، ويدخل ضمنها الأحاديث المرفوعة المسندة في مقدمة مسلم، وعددها (8) أحاديث.வெளிப்படுவதனால்தான் மார்க்கத்தை சாயமிடுதல் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

• أن الله تعالى قد رَكَزَ في فطرةِ خلقه جميعًا الإقرارَ بربوبيته وألوهيته، وإنما يضلهم عنها الشيطان وأعوانه.
3. அல்லாஹ் படைப்புகளின் உள்ளத்தில் அவனே படைத்துப் பரிபாலித்து அவர்களின் விவகாரங்களை நிர்வகிக்கக்கூடியவன் என்பதையும் அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதையும் இயல்பிலேயே ஏற்படுத்தியுள்ளான். ஷைத்தானும் அவனுடைய சகாக்களுமே அவர்களை வழிகெடுக்கிறார்கள்.

 
Anlam tercümesi Sure: Sûratu'l-Bakarah
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat