Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mealler fihristi


Anlam tercümesi Ayet: (266) Sure: Sûratu'l-Bakarah
اَیَوَدُّ اَحَدُكُمْ اَنْ تَكُوْنَ لَهٗ جَنَّةٌ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— لَهٗ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ ۙ— وَاَصَابَهُ الْكِبَرُ وَلَهٗ ذُرِّیَّةٌ ضُعَفَآءُ ۖۚ— فَاَصَابَهَاۤ اِعْصَارٌ فِیْهِ نَارٌ فَاحْتَرَقَتْ ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟۠
2.266. நீங்கள் பின்வரும் விஷயத்தை விரும்புவீர்களா?: உங்களுக்குப் பேரீச்சைகளும் திராட்சைகளும் அடங்கிய ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் நடுவில் சுவையான நீர் ஓடுகிறது. அதில் எல்லா வகையான நல்ல கனிகளும் உங்களுக்குக் கிடைக்கின்றன. உங்களுக்கு வயதாகிவிடுகிறது. நீங்கள் வேலைசெய்ய முடியாத கிழவராகி விடுகிறீர்கள். இந்நிலையில் உங்களுக்கு வேலைசெய்ய முடியாத பலவீனமான சிறுகுழந்தைகளும் இருக்கின்றனர். உங்களின் முதுமை, குழந்தைகளின் பலவீனம் ஆகிய காரணங்களினால் அதன்பால் அதிக தேவையுடையவர்களாக நீங்கள் இருக்கும் சூழ்நிலையில் நெருப்பை உள்ளடக்கிய கடுமையான காற்று அந்தத் தோட்டத்தைத் தாக்கி அனைத்தையும் அழித்துவிடுகிறது. மக்களிடம் காட்ட வேண்டும் என்பதற்காக தன் செல்வத்தை செலவுசெய்பவனின் நிலையும் இவ்வாறுதான் அமையும். நன்மையின் பக்கம் மிகவும் தேவையுள்ள மறுமைநாளில் அவன் அல்லாஹ்வை சந்திக்கும்போது எந்த நன்மையையும் பெறமாட்டான். இவ்வாறு இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடியவற்றை நீங்கள் சிந்திக்கும்பொருட்டு தெளிவுபடுத்துகிறான்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• المؤمنون بالله تعالى حقًّا واثقون من وعد الله وثوابه، فهم ينفقون أموالهم ويبذلون بلا خوف ولا حزن ولا التفات إلى وساوس الشيطان كالتخويف بالفقر والحاجة.
1. அல்லாஹ்வின்மீது உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ் அளித்த வாக்குறுதியையும் நன்மையையும் உறுதியாக நம்புபவார்கள். அவர்கள் அச்சமோ கவலையோ இன்றி தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்கள். ஏழ்மை மற்றும் தேவை போன்றவற்றைக் கொண்டு அச்சமூட்டும் சைதானின் ஊசலாட்டங்களுக்கு அவர்கள் இடமளிக்கவும்மாட்டார்கள்.

• الإخلاص من أعظم ما يبارك الأعمال ويُنمِّيها.
2. நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வுக்காக மட்டும் செலவுசெய்தால் அவர்கள் செலவுசெய்தவற்றில் அவன் பரக்கத் செய்கிறான். இது அவனுடைய அருளில் உள்ளவையாகும்.

• أعظم الناس خسارة من يرائي بعمله الناس؛ لأنه ليس له من ثواب على عمله إلا مدحهم وثناؤهم.
3. தனது செயல்களை மக்களுக்குக் காட்டுவதற்காகச் செய்பவனே மிகப்பெரும் இழப்புக்குரியவர்கள். ஏனெனில் மனிதர்களது புகழைத் தவிர வேறு எந்த விதமான கூலியும் அவர்களது செயல்களுக்குக் கிடையாது.

 
Anlam tercümesi Ayet: (266) Sure: Sûratu'l-Bakarah
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mealler fihristi

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Kapat