Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûretu Ğâfir   Ayet:
رَبَّنَا وَاَدْخِلْهُمْ جَنّٰتِ عَدْنِ ١لَّتِیْ وَعَدْتَّهُمْ وَمَنْ صَلَحَ مِنْ اٰبَآىِٕهِمْ وَاَزْوَاجِهِمْ وَذُرِّیّٰتِهِمْ ؕ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟ۙ
40.8. வானவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ நம்பிக்கையாளர்களை நுழைவிப்பதாக வாக்களித்த நிலையான சுவனங்களில் அவர்களையும் அவர்களின் தந்தையர், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நற்செயல் புரிந்தவர்களையும் பிரவேசிக்கச் செய்வாயாக. நிச்சயமாக நீ யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் உன்னை மிகைக்க முடியாது. நீ அமைத்த விதிகளில், திட்டங்களில் ஞானம் மிக்கவன்.
Arapça tefsirler:
وَقِهِمُ السَّیِّاٰتِ ؕ— وَمَنْ تَقِ السَّیِّاٰتِ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمْتَهٗ ؕ— وَذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟۠
40.9. அவர்களின் தீய செயல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாயாக. அவற்றின் காரணமாக அவர்களைத் தண்டித்துவிடாதே. மறுமை நாளில் நீ யாரை அவரின் தவறுகளுக்கான தண்டனையை விட்டும் பாதுகாத்தாயோ அவர் மீது நீ கருணைபுரிந்து விட்டாய். அவ்வாறு தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டு சுவனத்தில் பிரவேசிப்பதே மகத்தான வெற்றியாகும். அதற்கு நிகரான வேறு வெற்றி இல்லை.
Arapça tefsirler:
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنَادَوْنَ لَمَقْتُ اللّٰهِ اَكْبَرُ مِنْ مَّقْتِكُمْ اَنْفُسَكُمْ اِذْ تُدْعَوْنَ اِلَی الْاِیْمَانِ فَتَكْفُرُوْنَ ۟
40.10. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நிராகரித்தவர்கள் நரகத்தில் நுழையும் போது அவர்கள் அழைக்கப்பட்டு தம்மைத் தாமே வெறுத்து சபித்துக்கொள்ளும் போது, “நீங்கள் உங்களை வெறுப்பதைவிட அல்லாஹ் உங்களைக் கடுமையாக வெறுக்கிறான். உலகில் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ளுமாறு நீங்கள் அழைக்கப்பட்டபோது அவனை நிராகரித்துக்கொண்டிருந்தீர்கள். அவனுடன் வேறு தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தீர்கள்.
Arapça tefsirler:
قَالُوْا رَبَّنَاۤ اَمَتَّنَا اثْنَتَیْنِ وَاَحْیَیْتَنَا اثْنَتَیْنِ فَاعْتَرَفْنَا بِذُنُوْبِنَا فَهَلْ اِلٰی خُرُوْجٍ مِّنْ سَبِیْلٍ ۟
40.11. நிராகரிப்பாளர்கள் தங்களின் பாவங்களை ஒத்துக்கொண்டவர்களாக கூறுவார்கள்: அப்போது அவர்கள் ஒத்துக் கொள்வதும் திருந்துவதும் எந்தப் பயனும் இல்லை : “எங்கள் இறைவா! நீ எங்களை இருமுறை மரணிக்கச் செய்தாய். ஒன்றுமே இல்லாமல் இருந்த எங்களை உருவாக்கினாய். பின்னர் உருவாக்கிய பிறகு எங்களை மரணிக்கச் செய்தாய். ஒன்றுமே இல்லாமல் இருந்த எங்களை படைத்தும் மரணத்திற்குப் பிறகு மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பியும் இருமுறை எங்களை உயிர்ப்பித்தாய். நாங்கள் செய்த பாவங்களை ஒத்துக் கொள்கிறோம். நரகத்திலிருந்து வெளியேறி மீண்டும் உலகிற்குச் சென்று உன்னை திருப்திப்படுத்தி எங்களின் காரியங்களை சீர்படுத்துவதற்கு ஏதேனும் வழி இருக்கின்றதா?
Arapça tefsirler:
ذٰلِكُمْ بِاَنَّهٗۤ اِذَا دُعِیَ اللّٰهُ وَحْدَهٗ كَفَرْتُمْ ۚ— وَاِنْ یُّشْرَكْ بِهٖ تُؤْمِنُوْا ؕ— فَالْحُكْمُ لِلّٰهِ الْعَلِیِّ الْكَبِیْرِ ۟
40.12. நீங்கள் அனுபவிக்கும் இந்த வேதனை, இணைகளை ஏற்படுத்தாமல் அல்லாஹ் ஒருவனின் பக்கம் நீங்கள் அழைக்கப்பட்டபோது அதனை நிராகரித்து அவனுக்கு இணைகளை ஏற்படுத்தினீர்கள், அவனுக்கு இணையாக மற்றவர்கள் வணங்கப்பட்டபோது அதனை நீங்கள் நம்பினீர்கள் என்பதனாலாகும். அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. உள்ளமையிலும் தகுதியிலும் ஆதிக்கத்திலும் அவன் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன். அனைத்தும் அவனை விட சிறியவையே.
Arapça tefsirler:
هُوَ الَّذِیْ یُرِیْكُمْ اٰیٰتِهٖ وَیُنَزِّلُ لَكُمْ مِّنَ السَّمَآءِ رِزْقًا ؕ— وَمَا یَتَذَكَّرُ اِلَّا مَنْ یُّنِیْبُ ۟
40.13. அல்லாஹ்வே உங்களுக்கு பிரபஞ்சத்திலும் உங்களிலும் தன் வல்லமையையும் தான் ஒருவனே என்பதையும் அறிவிக்கக்கூடிய தன் சான்றுகளைக் காட்டுகிறான். உங்களுக்கு வாழ்வாதாரமாக அமையும் தாவரங்கள், பயிர்கள் மற்றும் இன்னபிறவற்றுக்குக் காரணமான மழை நீரை அவனே வானத்திலிருந்து இறக்குகின்றான். அல்லாஹ்வின் சான்றுகளைக்கொண்டு தூய மனதுடன் அவன் பக்கம் திரும்புபவர்தான் அறிவுரை பெறுவார்.
Arapça tefsirler:
فَادْعُوا اللّٰهَ مُخْلِصِیْنَ لَهُ الدِّیْنَ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟
40.14. -நம்பிக்கையாளர்களே!- வழிப்படுதல், பிரார்த்தனை ஆகியவற்றை அவனுக்கு மட்டுமே உரித்தாக்கி அவனுக்கு யாரையும் இணையாக்காமல் அவனை அழையுங்கள். அதனை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அவர்களை அது கோபப்படுத்தினாலும் சரியே.
Arapça tefsirler:
رَفِیْعُ الدَّرَجٰتِ ذُو الْعَرْشِ ۚ— یُلْقِی الرُّوْحَ مِنْ اَمْرِهٖ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ لِیُنْذِرَ یَوْمَ التَّلَاقِ ۟ۙ
40.15. கீழ்ப்படிதலும் பிரார்த்தனையும் உரித்தாக்கப்படுவதற்கு அவன் மட்டுமே தகுதியானவன். அவன் உயர்ந்த அந்தஸ்துகளை உடையவன்; தனது அனைத்துப் படைப்பினங்களை விட்டும் வேறுபட்டவன். மகத்தான அர்ஷின் அதிபதி. தன் அடியார்களில் தான் நாடியவர்கள் மீது வஹியை இறக்குகிறான். அது அவர்கள் தாமும் உயிர்பெற்று மற்றவர்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னோர்களும் பின்னோர்களும் சந்திக்கும் மறுமை நாளைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காகவும்தான்.
Arapça tefsirler:
یَوْمَ هُمْ بَارِزُوْنَ ۚ۬— لَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْهُمْ شَیْءٌ ؕ— لِمَنِ الْمُلْكُ الْیَوْمَ ؕ— لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
40.16. அவர்கள் வெளிப்படும் நாளில் ஓரணியாக ஒன்றுதிரட்டப்படுவார்கள். அவர்களின் உள்ளமைகள், செயல்கள், கூலிகள் ஆகியவற்றில் எந்த விஷயமும் அல்லாஹ்வை விட்டு மறைவாக இருக்காது. “இன்றைய தினம் ஆட்சியதிகாரம் யாருக்குரியது”? என்று கேட்பான். “அனைத்தையும் அடக்கியாள்பவனும் அனைத்தும் அவனுக்கே கீழ்படியக்கூடிய தனது உள்ளமையிலும் பண்புகளிலும் செயல்களிலும் ஏகனாகிய அல்லாஹ்வுக்கே உரியது” என்ற ஒரு பதிலைத்தவிர வேறு எந்த பதிலும் அந்நேரத்தில் கூறப்படாது.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• مَحَلُّ قبول التوبة الحياة الدنيا.
1. உலக வாழ்வுதான் பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் இடமாகும்.

• نفع الموعظة خاص بالمنيبين إلى ربهم.
2. தங்கள் இறைவனின் பக்கம் திரும்புபவர்களுக்கே அறிவுரை பயனளிக்கும்.

• استقامة المؤمن لا تؤثر فيها مواقف الكفار الرافضة لدينه.
3. நிராகரிப்பாளர்களின் இஸ்லாத்தை மறுக்கும் நிலைப்பாடுகள் நம்பிக்கையாளனின் உறுதியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

• خضوع الجبابرة والظلمة من الملوك لله يوم القيامة.
4. அநியாயக்கார, அடக்கியாளும் அரசர்கள் அனைவரும் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு அடிபணிந்துவிடுவார்கள்.

 
Anlam tercümesi Sure: Sûretu Ğâfir
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat