Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûretu'd-Duhân   Ayet:

அத்துகான்

Surenin hedefleri:
تهديد المشركين ببيان ما ينتظرهم من العقوبة العاجلة والآجلة.
இணைவைப்பாளர்களுக்குக் காத்திருக்கும் இவ்வுலக மறுவுலக தண்டனைகளைத் தெளிவுபடுத்தி அவர்களை எச்சரித்தல்

حٰمٓ ۟ۚۛ
43.1. இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
Arapça tefsirler:
وَالْكِتٰبِ الْمُبِیْنِ ۟ۙۛ
43.2. சத்தியத்திற்கு நேர்வழிகாட்டும் பாதையைத் தெளிவுபடுத்தும் அல்குர்ஆனின் மீது அல்லாஹ் சத்தியம் செய்துள்ளான்.
Arapça tefsirler:
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةٍ مُّبٰرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِیْنَ ۟
44.3. நிச்சயமாக நாம் கண்ணியமிக்க இரவிலே குர்ஆனை இறக்கியுள்ளோம். அது பெரும் நன்மைகளை உள்ளடக்கிய இரவாகும். திட்டமாக நாம் இந்த குர்ஆனைக் கொண்டு அச்சுறுத்துபவர்களாக இருக்கின்றோம்.
Arapça tefsirler:
فِیْهَا یُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِیْمٍ ۟ۙ
44.4. அந்த இரவில்தான் அந்த வருடத்தில் அல்லாஹ் ஏற்படுத்தும் வாழ்வாதாரம், தவணைகள் மற்றும் இன்னபிறவற்றோடு தொடர்புடைய உறுதியான ஒவ்வொரு விடயமும் முடிவுசெய்யப்படுகின்றன.
Arapça tefsirler:
اَمْرًا مِّنْ عِنْدِنَا ؕ— اِنَّا كُنَّا مُرْسِلِیْنَ ۟ۚ
44.5. நம்மிடமிருந்து ஒவ்வொரு உறுதியான விஷயத்தையும் நாம் தீர்மானிக்கின்றோம். நிச்சயமாக நாம் தூதர்களை அனுப்புவோராக இருந்தோம்.
Arapça tefsirler:
رَحْمَةً مِّنْ رَّبِّكَ ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ۙ
44.6. -தூதரே!- தூதர்கள் அனுப்பப்படுவோருடன் உம் இறைவன் கொண்ட கருணையினால்தான் நாம் தூதர்களை அனுப்புகின்றோம். நிச்சயமாக அவன் தன் அடியார்கள் பேசுவதை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் செயல்களையும் எண்ணங்களையும் நன்கறிந்தவன். அவற்றில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை.
Arapça tefsirler:
رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَیْنَهُمَا ۘ— اِنْ كُنْتُمْ مُّوْقِنِیْنَ ۟
44.7. அவன் வானங்கள், பூமி மற்றும் அவையிரண்டிற்கும் இடைப்பட்டுள்ளவற்றின் இறைவன். நீங்கள் இதனை உறுதியாக நம்புபவர்களாக இருந்தால் என் தூதரின் மீது நம்பிக்கைகொள்ளுங்கள்.
Arapça tefsirler:
لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ یُحْیٖ وَیُمِیْتُ ؕ— رَبُّكُمْ وَرَبُّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟
44.8. அவனைத் தவிர உண்மையான வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், மரணமடையச் செய்கிறான். அவனைத் தவிர வேறு யாராலும் உயிர்ப்பிக்கவோ, மரணமடையச் செய்யவோ முடியாது. அவன் உங்களின் இறைவன்; முன்சென்ற உங்கள் மூதாதையர்களின் இறைவன்.
Arapça tefsirler:
بَلْ هُمْ فِیْ شَكٍّ یَّلْعَبُوْنَ ۟
44.9. இந்த இணைவைப்பாளர்கள் இதனை உறுதியாக நம்ப மாட்டார்கள். மாறாக அவர்கள் அதில் சந்தேகம்கொண்டு தங்களிடமுள்ள அசத்தியத்தைக் கொண்டு அதனை விட்டும் அலட்சியமாக இருக்கின்றார்கள்.
Arapça tefsirler:
فَارْتَقِبْ یَوْمَ تَاْتِی السَّمَآءُ بِدُخَانٍ مُّبِیْنٍ ۟ۙ
44.10. -தூதரே!- வானம் தெளிவான புகையைக் கொண்டுவரும் அந்நாளில் உமது சமூகத்துக்கு அண்மையில் ஏற்படும் வேதனையை எதிர்பார்ப்பீராக. பசியின் கடுமை காரணமாக அதனைத் தமது கண்களால் அவர்கள் காண்பார்கள்.
Arapça tefsirler:
یَّغْشَی النَّاسَ ؕ— هٰذَا عَذَابٌ اَلِیْمٌ ۟
44.11. உமது சமூகம் அனைவரையும் அது சூழ்ந்துகொள்ளும். அவர்களிடம் கூறப்படும்: “உங்களைப் பீடித்த இந்த தண்டனை வேதனை மிக்க தண்டனையாகும்.”
Arapça tefsirler:
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ اِنَّا مُؤْمِنُوْنَ ۟
44.12. அவர்கள் தங்கள் இறைவனிடம் மன்றாடியவர்களாகப் பிரார்த்திப்பார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் மீது அனுப்பிய வேதனையை எங்களைவிட்டும் திருப்புவாயாக. நீ எங்களைவிட்டும் அதனை நீக்கினால் உன்மீதும் உன் தூதரின் மீதும் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கைகொள்வோம்.”
Arapça tefsirler:
اَنّٰی لَهُمُ الذِّكْرٰی وَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مُّبِیْنٌ ۟ۙ
44.13. தெளிவான தூதுடன் அவர்களது நம்பிக்கைக்குரிய, உண்மையான தூதர் அவர்களிடம் வந்தபோது ஏற்றுக்கொள்ளாமல் தற்போது இறைவனிடம் மன்றாடி நினைவு கூறுவது எவ்வாறு அவர்களுக்குப் பயனளிக்கும்?
Arapça tefsirler:
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوْا مُعَلَّمٌ مَّجْنُوْنٌ ۟ۘ
44.14. பின்பு அவர்கள் அவரை உண்மைப்படுத்தாமல் புறக்கணித்துவிட்டார்கள். அவரைக்குறித்து அவர்கள் கூறினார்கள்: “இவர் தூதரல்ல. மற்றவர்கள் கற்றுக் கொடுக்கும் மாணவர். இவர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”
Arapça tefsirler:
اِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِیْلًا اِنَّكُمْ عَآىِٕدُوْنَ ۟ۘ
44.15. நிச்சயமாக நாம் உங்களைவிட்டும் வேதனையை சிறிதளவு நீக்கும் போது நிச்சயமாக நீங்கள் உங்களின் நிராகரிப்பு, பொய்ப்பிப்பின் பக்கம்தான் திரும்பக் கூடியவர்களாகவே உள்ளீர்கள்.
Arapça tefsirler:
یَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرٰی ۚ— اِنَّا مُنْتَقِمُوْنَ ۟
44.16. -தூதரே!- நாம் உமது சமூகத்தின் நிராகரிப்பாளர்களை பத்ருடைய தினத்தில் கடுமையாகப் பிடிக்கும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக. அவர்கள் அல்லாஹ்வை நிராகரித்து அவனது தூதரை பொய்ப்பித்ததனால் நிச்சயமாக நாம் அவர்களை பலிதீர்த்தே தீருவோம்.
Arapça tefsirler:
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَآءَهُمْ رَسُوْلٌ كَرِیْمٌ ۟ۙ
44.17. நாம் அவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமூகத்தை சோதித்தோம். அல்லாஹ்விடமிருந்து சங்கையான ஒரு தூதர் அவர்களிடம் வந்து அவன் ஒருவனே வணக்கத்திற்குரியவன் அவனையே வணங்குமாறும் அவர்களை அழைத்தார். அவர்தான் மூஸா.
Arapça tefsirler:
اَنْ اَدُّوْۤا اِلَیَّ عِبَادَ اللّٰهِ ؕ— اِنِّیْ لَكُمْ رَسُوْلٌ اَمِیْنٌ ۟ۙ
44.18. மூஸா ஃபிர்அவ்னிடமும் அவனது சமூகத்திடமும் கூறினார்: “இஸ்ராயீலின் மக்களை என்னிடம் ஒப்படைத்துவிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களாவர். அவர்களை அடிமைப்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை. நிச்சயமாக நான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள தூதராவேன். அவன் எனக்கு எடுத்துரைக்குமாறு கூறிய விஷயங்களில் நான் நம்பிக்கைக்குரியவனாவேன். அதில் எதையும் அதிகரித்துவிடவோ, குறைத்துவிடவோ மாட்டேன்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• نزول القرآن في ليلة القدر التي هي كثيرة الخيرات دلالة على عظم قدره.
1. நலவுகள் நிறைந்த லைலத்துல் கத்ர் என்னும் கண்ணியமிக்க இரவில் திருக்குர்ஆன் இறங்கியது அதன் பெரும் மதிப்பின் சான்றாகும்.

• بعثة الرسل ونزول القرآن من مظاهر رحمة الله بعباده.
2.தூதர்களை அனுப்புவதும் அல்குர்ஆன் இறங்குவதும் அல்லாஹ் தன் அடியார்கள் மீதுள்ள கருணையின் வெளிப்பாடாகும்.

• رسالات الأنبياء تحرير للمستضعفين من قبضة المتكبرين.
3. நபிமார்களின் தூதுகள் பலவீனமானவர்களை கர்வம் கொண்டவர்களின் பிடியிலிருந்து விடுதலை செய்வதாகும்.

 
Anlam tercümesi Sure: Sûretu'd-Duhân
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat