Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu'l-Mâide   Ayet:
یُرِیْدُوْنَ اَنْ یَّخْرُجُوْا مِنَ النَّارِ وَمَا هُمْ بِخٰرِجِیْنَ مِنْهَا ؗ— وَلَهُمْ عَذَابٌ مُّقِیْمٌ ۟
5.37. அவர்கள் நரகத்தில் நுழைந்துவிட்டபிறகு அதிலிருந்து வெளியேற நாடுகிறார்கள். அவர்களால் அது எவ்வாறு முடியும்? அதிலிருந்து அவர்களால் ஒருபோதும் வெளியேற முடியாது. அங்கு அவர்களுக்கு நிலையான வேதனையும் உண்டு.
Arapça tefsirler:
وَالسَّارِقُ وَالسَّارِقَةُ فَاقْطَعُوْۤا اَیْدِیَهُمَا جَزَآءً بِمَا كَسَبَا نَكَالًا مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
5.38. ஆட்சியாளர்களே! மக்களின் செல்வங்களை உரிமையின்றி பறித்ததற்குக் கூலியாகவும் அல்லாஹ்வின் தண்டனையாகவும் திருடன் மற்றும் திருடியின் வலது கையை வெட்டிவிடுங்கள். இது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அச்சமூட்டலாக அமையும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். யாராலும் அவனை மிகைக்க முடியாது. தனது நிர்ணயத்திலும் சட்டமியற்றுவதிலும் அவன் ஞானம்மிக்கவன்.
Arapça tefsirler:
فَمَنْ تَابَ مِنْ بَعْدِ ظُلْمِهٖ وَاَصْلَحَ فَاِنَّ اللّٰهَ یَتُوْبُ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
5.39. யார் திருட்டிலிருந்து திருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி தம் செயலை சீர்படுத்திக் கொண்டார்களோ அல்லாஹ் தனது அருளால் அவர்களை மன்னித்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவன். அவர்களின் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். ஆனாலும் விவகாரம் ஆட்சித் தலைவர் வரை சென்றுவிட்டால் அவன் பாவமன்னிப்புக் கோரினாலும் அதன் காரணமாக அவனுக்கு வழங்கப்படும் தண்டனை தளர்த்தப்படாது.
Arapça tefsirler:
اَلَمْ تَعْلَمْ اَنَّ اللّٰهَ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— یُعَذِّبُ مَنْ یَّشَآءُ وَیَغْفِرُ لِمَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
5.40. தூதரே! பின்வரும் விஷயத்தை நீர் அறிந்துள்ளீர், வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவற்றில் தான் நாடியவாறு செயல்படுகிறான். தான் நாடியவர்களை தன் நீதியால் தண்டிக்கிறான். தான் நாடியவர்களை தன் கருணையால் மன்னிக்கிறான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். அவனுக்கு எதுவும் இயலாததல்ல.
Arapça tefsirler:
یٰۤاَیُّهَا الرَّسُوْلُ لَا یَحْزُنْكَ الَّذِیْنَ یُسَارِعُوْنَ فِی الْكُفْرِ مِنَ الَّذِیْنَ قَالُوْۤا اٰمَنَّا بِاَفْوَاهِهِمْ وَلَمْ تُؤْمِنْ قُلُوْبُهُمْ ۛۚ— وَمِنَ الَّذِیْنَ هَادُوْا ۛۚ— سَمّٰعُوْنَ لِلْكَذِبِ سَمّٰعُوْنَ لِقَوْمٍ اٰخَرِیْنَ ۙ— لَمْ یَاْتُوْكَ ؕ— یُحَرِّفُوْنَ الْكَلِمَ مِنْ بَعْدِ مَوَاضِعِهٖ ۚ— یَقُوْلُوْنَ اِنْ اُوْتِیْتُمْ هٰذَا فَخُذُوْهُ وَاِنْ لَّمْ تُؤْتَوْهُ فَاحْذَرُوْا ؕ— وَمَنْ یُّرِدِ اللّٰهُ فِتْنَتَهٗ فَلَنْ تَمْلِكَ لَهٗ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَمْ یُرِدِ اللّٰهُ اَنْ یُّطَهِّرَ قُلُوْبَهُمْ ؕ— لَهُمْ فِی الدُّنْیَا خِزْیٌ ۙ— وَّلَهُمْ فِی الْاٰخِرَةِ عَذَابٌ عَظِیْمٌ ۟
5.41. தூதரே! உம்மைக் கோபமூட்டுவதற்காக நிராகரிப்பான செயல்களில் மும்முரமாக ஈடுபடும் ஈமானை வெளிப்படுத்திக் கொண்டு நிராகரிப்பை மறைத்துவைத்துள்ள நயவஞ்சகர்களும், தமது தலைவர்களின் பொய்யை அதிகமாக செவிமடுத்து அதனை ஏற்கக்கூடிய யூதர்களும் உம்மைக் கவலையில் ஆழ்த்திவிட வேண்டாம். அவர்கள் உம்மைப் புறக்கணித்து உம்மிடம் சமூகம் தராத தங்களின் தலைவர்களை குருட்டுத்தனமாக பின்பற்றுவோராக உள்ளனர். அந்த யூதத் தலைவர்கள் தவ்ராத்திலுள்ள அல்லாஹ்வின் வார்த்தையை தங்களின் மனோஇச்சைக்கேற்ப மாற்றிவிடுகிறார்கள். அவர்கள் தங்களைப் பின்பற்றுவோரிடம் கூறுகிறார்கள், “முஹம்மது கூறுவது உங்களின் மனவிருப்பங்களுக்கு ஒத்ததாக இருந்தால் அவரைப் பின்பற்றுங்கள். அது உங்களின் விருப்பங்களுக்கு எதிரானதாக இருந்தால் அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.” தூதரே! யாரை அல்லாஹ் வழிகெடுக்க நாடிவிட்டானோ யாராலும் அவருக்கு நேரான வழியைக் காட்டிவிட முடியாது. இந்த பண்புகளையுடைய நயவஞ்சகர்கள் மற்றும் யூதர்கள் ஆகியோரின் உள்ளங்களை அல்லாஹ் நிராகரிப்பிலிருந்து பரிசுத்தப்படுத்த விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும் கேவலமும் மறுமையில் நரக வேதனையான கடுமையான வேதனையும் உண்டு.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• حكمة مشروعية حد السرقة: ردع السارق عن التعدي على أموال الناس، وتخويف من عداه من الوقوع في مثل ما وقع فيه.
1. திருட்டுக் குற்றத்திற்கு அளிக்கப்படும் தண்டனையின் நோக்கம், திருடன் மக்களது சொத்துக்களில் அத்துமீறுவதைத் தடுப்பதும், மற்றவர்களை அது போன்ற செயல்களில் ஈடுபடுவதை விட்டும் அச்சுறுத்துவதும் ஆகும்.

• قَبول توبة السارق ما لم يبلغ السلطان وعليه إعادة ما سرق، فإذا بلغ السلطان وجب الحكم، ولا يسقط بالتوبة.
2. ஆட்சியாளரிடம் விவகாரம் செல்வதற்கு முன் திருடியவரது பாவமீட்சி ஏற்றுக்கொள்ளப்படும். திருடியதை ஒப்படைத்து விடவும் வேண்டும். அதிகாரியிடம் சென்றுவிட்டால் தீர்ப்பு அவசியமாகிவிடும். அதன் பின் பாவமன்னிப்புக் கோருவதனால் தண்டனை தளர்த்தப்படாது.

• يحسن بالداعية إلى الله ألَّا يحمل همًّا وغمًّا بسبب ما يحصل من بعض الناس مِن كُفر ومكر وتآمر؛ لأن الله تعالى يبطل كيد هؤلاء.
3. அல்லாஹ்வின்பால் மக்களை அழைப்பவர் சில மக்களது நிராகரிப்பு, சூழ்ச்சி, சதி ஆகியவற்றைக் கண்டு கவலையடைந்து துவண்டு விடக்கூடாது. ஏனெனில் அல்லாஹ் இவர்களின் சூழ்ச்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவான்.

• حِرص المنافقين على إغاظة المؤمنين بإظهار أعمال الكفر مع ادعائهم الإسلام.
4. தாம் முஸ்லிம்கள் என வாதிட்டுக்கொண்டே நிராகரிப்பான செயல்களில் ஈடுபட்டு விசுவாசிகளை கோபமூட்டுவதற்கு நயவஞ்கர்கள் கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர்.

 
Anlam tercümesi Sure: Sûratu'l-Mâide
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat