Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûratu'l-A'râf   Ayet:
اُبَلِّغُكُمْ رِسٰلٰتِ رَبِّیْ وَاَنَا لَكُمْ نَاصِحٌ اَمِیْنٌ ۟
7.68. அல்லாஹ் எனக்கு உங்களிடம் எடுத்துரைக்குமாறு கட்டளையிட்ட ஏகத்துவத்தையும் சட்டதிட்டங்களையுமே நான் எடுத்துரைக்கிறேன். நான் உங்கள் எடுத்துரைக்குமாறு ஏவப்பட்டவற்றில் உங்களுக்கு விசுவாசம்மிக்கவனாகவும் நம்பிக்கைக்குரியவனாகவும் இருக்கின்றேன். அதில் கூட்டவோ குறைக்கவோ மாட்டேன்.
Arapça tefsirler:
اَوَعَجِبْتُمْ اَنْ جَآءَكُمْ ذِكْرٌ مِّنْ رَّبِّكُمْ عَلٰی رَجُلٍ مِّنْكُمْ لِیُنْذِرَكُمْ ؕ— وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوْحٍ وَّزَادَكُمْ فِی الْخَلْقِ بَصْۜطَةً ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
7.69. வானவர் இனத்தையோ ஜின் இனத்தையோ சாராத உங்கள் இனத்தைச் சார்ந்த ஒரு மனிதர் வாயிலாக உங்களை எச்சரிப்பதற்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரை வந்துள்ளது உங்களை ஆச்சரியமூட்டுகிறதா? பூமியில் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தியதற்கும், தமது நிராகரிப்பினால் அழிந்துபோன நூஹ் நபியின் சமூகத்திற்குப் பிறகு உங்களை வழித்தோன்றல்களாக ஆக்கியதற்கும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்கு உடல் பலத்தையும் வலிமையையும் வழங்கியதற்காக அல்லாஹ்வுக்கு நன்றிசெலுத்துங்கள். நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து தப்பித்து விரும்பியதைப் பெற்று வெற்றி பெறும்பொருட்டு அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த விசாலமான அருட்கொடைகளை நினைவுகூருங்கள்.
Arapça tefsirler:
قَالُوْۤا اَجِئْتَنَا لِنَعْبُدَ اللّٰهَ وَحْدَهٗ وَنَذَرَ مَا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا ۚ— فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
7.70. அவருடைய சமூகத்தார் அவரிம் கூறினார்கள்: “ஹூதே! அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் எங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டுவிட வேண்டும் என்று கூறுவதற்காகவா எங்களிடம் வந்துள்ளீர்? உமது வாதத்தில் நீர் உண்மையாளராக இருந்தால் எங்களுக்கு நேரும் என நீர் எச்சரிக்கும் வேதனையைக் கொண்டுவாரும்.”
Arapça tefsirler:
قَالَ قَدْ وَقَعَ عَلَیْكُمْ مِّنْ رَّبِّكُمْ رِجْسٌ وَّغَضَبٌ ؕ— اَتُجَادِلُوْنَنِیْ فِیْۤ اَسْمَآءٍ سَمَّیْتُمُوْهَاۤ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ مَّا نَزَّلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ ؕ— فَانْتَظِرُوْۤا اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟
7.71. ஹூத் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வின் வேதனையையும் கோபத்தையும் நீங்கள் உங்கள் மீது கடமையாக்கிக் கொண்டீர்கள். அது சந்தேகமில்லாமல் நிச்சயம் உங்களை அடைந்தே தீரும். எவ்வித யதார்த்தமும் இன்றி நீங்களும் உங்கள் முன்னோர்களும் தெய்வங்களாக பெயர்சூட்டிக்கொண்ட சிலைகளுக்காகவா என்னிடம் தர்க்கம் செய்கிறீர்கள்? அவைகளுக்கு தெய்வீகத்தன்மை உள்ளது என்பதற்கு ஆதாரம் கூறும் வகையில் அல்லாஹ் எந்தவொரு ஆதாரத்தையும் இறக்கிவைக்கவில்லை. நீங்கள் அவசரப்படும் வேதனையை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது நிகழ்ந்தே தீரும்.
Arapça tefsirler:
فَاَنْجَیْنٰهُ وَالَّذِیْنَ مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَمَا كَانُوْا مُؤْمِنِیْنَ ۟۠
7.72. ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளால் நாம் காப்பாற்றினோம். நம்முடைய சான்றுகளை நிராகரித்தவர்களை அடியோடு அழித்துவிட்டோம். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவில்லை. மாறாக நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள். வேதனைக்குத் தகுதியாகிவிட்டார்கள்.
Arapça tefsirler:
وَاِلٰی ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا ۘ— قَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— قَدْ جَآءَتْكُمْ بَیِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ ؕ— هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَكُمْ اٰیَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِیْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَیَاْخُذَكُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
7.73. நாம் ஸமூத் சமூகத்திற்கு அவர்களது சகோதரர் ஸாலிஹை அனுப்பினோம். அவர் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதன்பால் அவர்களை அழைத்தார். ஸாலிஹ் அவர்களிடம் கூறினார்: “அல்லாஹ்வை மட்டுமே வணங்குங்கள். உங்களுக்கு வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அவனைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் கொண்டு வந்தது உண்மையே என்பதற்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஆதாரமும் உங்களிடம் வந்துள்ளது. அது பாறையிலிருந்து வெளியான பெண் ஒட்டகமாகும். அது நீர் அருந்துவதற்கு குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. உங்களுக்கும் குடிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நாள் உண்டு. அதனை அல்லாஹ்வின் பூமியில் மேய விடுங்கள். அதனைப் பராமரிப்பதில் உங்கள் மீது எந்தப் பொறுப்பும் இல்லை. அதற்குத் தீங்கிழைத்து விடாதீர்கள். தீங்கிழைத்தால் அதன் காரணமாக வேதனை மிக்க தண்டனை உங்களை அடையும்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• ينبغي التّحلّي بالصبر في الدعوة إلى الله تأسيًا بالأنبياء عليهم السلام.
1. இறைத் தூதர்களைப் பின்பற்றி அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணியில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்.

• من أولويات الدعوة إلى الله الدعوة إلى عبادة الله وحده لا شريك له، ورفض الإشراك به ونبذه.
2. இணையோ துணையோ அற்ற அல்லாஹ்வை மாத்திரமே வணங்குவதற்கும், அவனுக்கு இணைவைப்பதை மறுத்துரைப்பதன் பக்கமும் அழைப்பதற்கே அழைப்புப் பணியில் முதலில் முன்னுரிமை தரப்பட வேண்டும்.

• الاغترار بالقوة المادية والجسدية يصرف صاحبها عن الاستجابة لأوامر الله ونواهيه.
3. உடல் பலம் பொருளாதார பலம் ஆகியவற்றைக் கொண்டு மயங்குவது அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்குப் பதிலளிப்பதிலிருந்து மனிதனைத் திசை திருப்பிவிடுகின்றன.

• النبي يكون من جنس قومه، لكنه من أشرفهم نسبًا، وأفضلهم حسبًا، وأكرمهم مَعْشرًا، وأرفعهم خُلُقًا.
4. தூதர் அந்த சமூக மக்களின் இனத்திலிருந்தே வருவார். ஆனால் அவர் சிறந்த குடும்பத்தைச் சார்ந்தவராகவும் நற்பெயர் மிக்கவர்களில் உள்ளவராகவும் கண்ணியமானவராகவும் உயர்ந்த ஒழுக்கங்களைப் பெற்றவராகவும் இருப்பார்.

• الأنبياء وورثتهم يقابلون السّفهاء بالحِلم، ويغضُّون عن قول السّوء بالصّفح والعفو والمغفرة.
5. இறைத் தூதர்களும் அவர்களின் வாரிசுகளும் மூடர்களை பொறுமையால் எதிர்கொள்கிறார்கள். தீய வார்த்தையை கண்டும் காணாமல் மன்னித்தும் மறைத்தும் புறக்கணித்துவிடுகிறார்கள்.

 
Anlam tercümesi Sure: Sûratu'l-A'râf
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat