Check out the new design

Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi * - Mealler fihristi


Anlam tercümesi Ayet: (122) Sure: Sûratu't-Tevbe
وَمَا كَانَ الْمُؤْمِنُوْنَ لِیَنْفِرُوْا كَآفَّةً ؕ— فَلَوْلَا نَفَرَ مِنْ كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَآىِٕفَةٌ لِّیَتَفَقَّهُوْا فِی الدِّیْنِ وَلِیُنْذِرُوْا قَوْمَهُمْ اِذَا رَجَعُوْۤا اِلَیْهِمْ لَعَلَّهُمْ یَحْذَرُوْنَ ۟۠
9.122. நம்பிக்கையாளர்கள் அனைவரும் போருக்குப் புறப்படுவது உகந்ததல்ல. ஏனெனில் எதிரிகளின் ஆதிக்கத்தால் அவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டு விடக்கூடாது. அவர்களில் ஒரு பிரிவினர் போருக்குப் புறப்பட்டு, ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து செவிமடுக்கும் குர்ஆன் மார்க்க சட்ட திட்டங்கள் மூலம் மார்க்கத்தில் தெளிவு பெற்று தங்களின் சமூகத்தார் திரும்பி வரும்போது தாம் கற்றவற்றைக் கொண்டு அவர்களை எச்சரிப்பதற்கு நபியவர்களுடன் தங்கிவிடக்கூடாதா? அல்லாஹ்வின் வேதனையை விட்டு எச்சரிக்கையாக இருப்பதற்கும் அவனுடைய கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும் அது வழிவகுக்கலாம். இது நபியவர்கள் அனுப்பிய சிறுசிறு படைகள் தொடர்பாக இறக்கப்பட்ட கட்டளையாகும். அவர்கள் தனது தோழர்களில் ஒரு பிரிவினரை தேர்ந்தெடுத்து அனுப்பிவைப்பார்கள்.
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• وجوب تقوى الله والصدق وأنهما سبب للنجاة من الهلاك.
1. அல்லாஹ்வை அஞ்சுவதும் உண்மை பேசுவதும் கட்டாயமாகும். அவை அழிவிலிருந்து தப்புவதற்கான காரணிகளாகும்.

• عظم فضل النفقة في سبيل الله.
2. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் சிறப்பின் மகத்துவம் தெளிவாகிறது.

• وجوب التفقُّه في الدين مثله مثل الجهاد، وأنه لا قيام للدين إلا بهما معًا.
3. மார்க்கத்தில் தெளிவு பெறுவது கட்டாயமாகும். அது போர் புரிவதற்குச் சமனாகும். அவையிரண்டின் மூலமே மார்க்கம் நிலைக்கும்.

 
Anlam tercümesi Ayet: (122) Sure: Sûratu't-Tevbe
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi - Mealler fihristi

Kur'an Araştırmaları Tefsir Merkezi Tarafından Yayınlanmıştır.

Kapat