Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - Mealler fihristi


Anlam tercümesi Sure: Sûretu't-Tîn   Ayet:

ஸூரா அத்தீன்

Surenin hedefleri:
امتنان الله على الإنسان باستقامة فطرته وخلقته، وكمال الرسالة الخاتمة.
மனிதனின் நேர்த்தியான இயல்பு மற்றும் படைப்பு, இறுதி தூதின் பரிபூரணம் ஆகியவற்றின் மூலம் அவனுக்கு அல்லாஹ் அருள் புரிதல்

وَالتِّیْنِ وَالزَّیْتُوْنِ ۟ۙ
95.1. அல்லாஹ் அத்தியின் மீதும் அது விளையும் இடத்தின் மீதும் சைத்தூனின் மீதும் ஈஸா அலை அவர்கள் அனுப்பப்பட்ட பலஸ்தீனில் அது விளையும் இடத்தின் மீதும் சத்தியம் செய்கின்றான்.
Arapça tefsirler:
وَطُوْرِ سِیْنِیْنَ ۟ۙ
95.2. அவன் தன் நபி மூஸாவுடன் இரகசியமாகப் பேசிய சீனாய் மலையைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான்.
Arapça tefsirler:
وَهٰذَا الْبَلَدِ الْاَمِیْنِ ۟ۙ
95.3. நபியவர்கள் அனுப்பப்பட்ட, அதன் உள்ளே நுழைபவர் பாதுகாப்பைப் பெறும் புனித பூமியான மக்காவைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான்.
Arapça tefsirler:
لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِیْۤ اَحْسَنِ تَقْوِیْمٍ ۟ؗ
95.4. நாம் மனிதனை நேர்த்தியான முறையிலும் அழகிய தோற்றத்திலும் படைத்தோம்.
Arapça tefsirler:
ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سٰفِلِیْنَ ۟ۙ
95.5. பின்னர் உலகில் அவனை வயோதிபம் மற்றும் அதனால் ஏற்படும் புத்திக்கோளாறின்பால் திருப்பிவிட்டோம். எனவே இயல்பை சீரழித்து நரகிற்கு சென்றுவிட்டவன் அதன் மூலம் எவ்விதப் பயனும் பெறாததைப் போல் அவனும் தனது உடல் மூலம் எந்தப் பலனையும் அடையமுடியாது.
Arapça tefsirler:
اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟ؕ
95.6. ஆயினும் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களைத் தவிர. நிச்சயமாக அவர்கள் வயோதிபத்தை அடைந்தாலும் நாம் அவர்களுக்கு சுவனம் என்னும் என்றும் முடிவுறாத நிலையான நன்மையை வழங்குவோம். ஏனெனில் அவர்கள் தமது இயல்புகளை பரிசுத்தப்படுத்தினர்.
Arapça tefsirler:
فَمَا یُكَذِّبُكَ بَعْدُ بِالدِّیْنِ ۟ؕ
95.7. -மனிதனே!- அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கும் ஏராளமான சான்றுகளை நீ கண்ட பின்னரும் எது உன்னை கூலி கொடுக்கப்படும் நாளை பொய்ப்பிக்கத் தூண்டுகிறது.
Arapça tefsirler:
اَلَیْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِیْنَ ۟۠
95.8. அல்லாஹ் -கூலி கொடுக்கப்படும் நாளை மறுமையில் ஏற்படுத்தியதன் மூலம்- தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் மிகச்சிறந்த தீர்ப்பளிப்பாளன், நீதியாளன் இல்லையா? நன்மை செய்தவர்களுக்கு நற்கூலியும் தீமை செய்தவர்களுக்குத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்காமல் அவனது அடியார்களை அல்லாஹ் அப்படியே விட்டுவிடுவது அறிவுப்பூர்வமானதா என்ன?
Arapça tefsirler:
Bu sayfadaki ayetlerin faydaları:
• رضا الله هو المقصد الأسمى.
அல்லாஹ் தனது நபியின் புகழை உயர்த்தியதன் மூலம் அவரை கண்ணிப்படுத்தல்

• أهمية القراءة والكتابة في الإسلام.
1. அல்லாஹ்வின் திருப்தியே உன்னத நோக்கமாகும்.

• خطر الغنى إذا جرّ إلى الكبر والبُعد عن الحق.
2. இஸ்லாத்தில் வாசிப்பு மற்றும் எழுத்து ஆகியவற்றுக்குள்ள முக்கியத்துவம்.

• النهي عن المعروف صفة من صفات الكفر.
3. கர்வம், சத்தியத்தை விட்டும் தூரமாதல் ஆகியவற்றுக்கு இட்டுச் செல்லும் செல்வத்தின் விபரீதம்

• إكرام الله تعالى نبيه صلى الله عليه وسلم بأن رفع له ذكره.
4. நன்மையான செயல்களைவிட்டுத் தடுப்பது நிராகரிப்பாளர்களின் பண்புகளில் ஒன்றாகும்.

 
Anlam tercümesi Sure: Sûretu't-Tîn
Surelerin fihristi Sayfa numarası
 
Kur'an-ı Kerim meal tercümesi - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - Mealler fihristi

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

Kapat