قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
13 : 11

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

11.13. “முஹம்மது குர்ஆனை சுயமாகப் புனைந்து கொண்டார். அது அல்லாஹ்விடமிருந்து அறிவிக்கப்பட்ட வஹி அல்ல” என்று இணைவைப்பாளர்கள் கூறுகிறார்களா? -தூதரே!- நீர் அவர்களிடம் சவால் விடுத்தவராகக் கூறுவீராக: “நீங்கள் புனையப்பட்டதாக வாதிடும் குர்ஆனைப் போன்று உண்மையற்ற இந்த குர்ஆனில் உள்ளதைப் போன்ற பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வாருங்கள் பார்க்கலாம். குர்ஆன் புனைந்து கூறப்பட்டது என்ற உங்களின் வாதத்தில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்காக உங்களால் உதவிக்கு அழைக்க முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• تحدي الله تعالى للمشركين بالإتيان بعشر سور من مثل القرآن، وبيان عجزهم عن الإتيان بذلك.
1. அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு குர்ஆனைப் போன்று பத்து அத்தியாயங்களைப் புனைந்து கொண்டு வரும்படி சவால் விடுகிறான். அவர்களால் ஒரு போதும் கொண்டுவர முடியாது என்பதையும் தெளிவுபடுத்துகிறான். info

• إذا أُعْطِي الكافر مبتغاه من الدنيا فليس له في الآخرة إلّا النار.
2. நிராகரிப்பாளனுக்கு உலகில் அவனது எதிர்பார்ப்பு நிவைற்றப்பட்டாலும் மறுமையில் அவனுக்கு நரகத்தைத் தவிர வேறொன்றுமில்லை. info

• عظم ظلم من يفتري على الله الكذب وعظم عقابه يوم القيامة.
3.அல்லாஹ்வின் மீது பொய்யை புனைந்தரைப்பவனின் அநியாயம் மிகப் பெரியது. மறுமையில் அவனுக்குரிய தண்டனையும் மிகப் பெரியது. info