Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (187) سۈرە: بەقەرە
اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ ؕ— هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَاَنْتُمْ لِبَاسٌ لَّهُنَّ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُوْنَ اَنْفُسَكُمْ فَتَابَ عَلَیْكُمْ وَعَفَا عَنْكُمْ ۚ— فَالْـٰٔنَ بَاشِرُوْهُنَّ وَابْتَغُوْا مَا كَتَبَ اللّٰهُ لَكُمْ ۪— وَكُلُوْا وَاشْرَبُوْا حَتّٰی یَتَبَیَّنَ لَكُمُ الْخَیْطُ الْاَبْیَضُ مِنَ الْخَیْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِ ۪— ثُمَّ اَتِمُّوا الصِّیَامَ اِلَی الَّیْلِ ۚ— وَلَا تُبَاشِرُوْهُنَّ وَاَنْتُمْ عٰكِفُوْنَ فِی الْمَسٰجِدِ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَقْرَبُوْهَا ؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ اٰیٰتِهٖ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟
2.187. ஆரம்பத்தில் ஒருவர் நோன்பு இரவில் தூங்கி, ஃபஜ்ருக்கு முன் விழித்துவிட்டால் அவர் உண்ணவோ உடலுறவு கொள்ளவோ தடைசெய்யப்பட்டிருந்தது. பின்னர் அல்லாஹ் இந்த கட்டளையை ரத்துசெய்தான். அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டவர்களே! நோன்பு இரவுகளில் உங்கள் மனைவியருடன் உறவுகொள்வதை உங்களுக்கு அல்லாஹ் அனுமதித்துவிட்டான். அவர்கள் உங்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றார்கள். நீங்கள் அவர்களுக்குத் திரையாகவும் கற்புக்கு பாதுகாப்பாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒருவர் மற்றவரை விட்டும் தேவையற்றிருக்க முடியாது. அவன் உங்களுக்குத் தடுத்த செயலைக்கொண்டு உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொண்டீர்கள் என்பதை அவன் அறிந்துகொண்டான். உங்கள்மீது கருணைகாட்டி, உங்கள் பாவங்களை மன்னித்து உங்களுக்கு இலகுவை ஏற்படுத்திவிட்டான். எனவே நீங்கள் உறவுகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு விதித்த குழந்தைகளைத் தேடிக்கொள்ளுங்கள். அதிகாலை தெளிவாக வெளிப்படும்வரை இரவில் நீங்கள் உண்ணலாம், பருகலாம். பஜ்ர் உதித்ததிலிருந்து சூரியன் மறையும்வரை நோன்பை முறிக்கக்கூடிய விஷயங்களை விட்டும் தவிர்ந்து நோன்பை நிறைவுபடுத்துங்கள். நீங்கள் பள்ளிவாயில்களில் (இஃதிகாஃபில்) தங்கியிருக்கும்போது மனைவியிருடன் உடலுறவு கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்வது அதனை முறித்துவிடும். மேற்குறிப்பிட்ட இந்த சட்டங்கள் அனைத்தும் ஹலால், ஹராம் தொடர்பாக அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். எனவே அவற்றை ஒருபோதும் நெருங்கிவிடாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை நெருங்குபவர் தடைசெய்யப்பட்டவற்றில் விழுந்துவிட நேரிடலாம். மக்கள், அல்லாஹ் கட்டளையிட்டதைச் செயல்படுத்தி, தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து அவனை அஞ்ச வேண்டும் என்பதற்காக இச்சட்டங்களை நன்கு தெளிவுபடுத்துவதன் மூலம் அவன் தன் வசனங்களை அவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• مشروعية الاعتكاف، وهو لزوم المسجد للعبادة؛ ولهذا يُنهى عن كل ما يعارض مقصود الاعتكاف، ومنه مباشرة المرأة.
1. இஃதிகாஃப் ஒரு வணக்கமாகும். வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாயிலில் தங்குவதற்கு இஃதிகாப் எனப்படும். எனவேதான் அதன் நோக்கத்திற்கு மாறான மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுவது போன்ற அனைத்துவிஷயங்களும் இஃதிகாஃபில் தடுக்கப்பட்டுள்ளன.

• النهي عن أكل أموال الناس بالباطل، وتحريم كل الوسائل والأساليب التي تقود لذلك، ومنها الرشوة.
2. மனிதர்களது சொத்துக்களை அநியாயமான முறையில் உண்ணுவது தடுக்கப்பட்டதாகும். எனவேதான் இலஞ்சம் போன்ற அதற்கு இட்டுச் செல்லும் அனைத்து வழிகளும் தடைசெய்யப்பட்டுள்ளது.

• تحريم الاعتداء والنهي عنه؛ لأن هذا الدين قائم على العدل والإحسان.
3. வரம்புமீறுவது வன்மையாகத் தடைசெய்யப்பட்டதாகும். ஏனெனில் இந்த மார்க்கம் நீதி, உபகாரம் புரிதல் ஆகியவற்றின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (187) سۈرە: بەقەرە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش