Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (219) سۈرە: بەقەرە
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْخَمْرِ وَالْمَیْسِرِ ؕ— قُلْ فِیْهِمَاۤ اِثْمٌ كَبِیْرٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ ؗ— وَاِثْمُهُمَاۤ اَكْبَرُ مِنْ نَّفْعِهِمَا ؕ— وَیَسْـَٔلُوْنَكَ مَاذَا یُنْفِقُوْنَ ؕ۬— قُلِ الْعَفْوَؕ— كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُوْنَ ۟ۙ
2.219. தூதரே! உம்முடைய தோழர்கள் போதயை உண்டுபன்னும் மதுபானம் அருந்துவது, விற்பது வாங்குவது குறித்தும், சூதாட்டத்தைக் குறித்தும் உம்மிடம் கேட்கிறார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக:அவையிரண்டும் மார்க்க மற்றும் உலகியல்ரீதியாக ஏராளமான தீங்குகளை உடையவை. அவை அறிவை மழுங்கடித்துவிடும்; செல்வத்தைப் போக்கிவிடும்; உங்களிடையே பகைமையையும் குரோதத்தையும் ஏற்படுத்திவிடும். அவையிரண்டிலும் பொருளாதார ரீதியான சில பயன்களும் இருக்கின்றன. அவற்றால் ஏற்படும் பயன்களைவிட தீங்குகளும் பாவங்களுமே அதிகமானது. எதனுடைய தீங்கு பயனைவிட அதிகமாக இருக்கின்றதோ அறிவாளி அதனைவிட்டும் தவிர்ந்திருப்பார். இது போதைப்பொருட்களை தடைசெய்வதற்கான ஆரம்பக்கட்ட அறிவுரையாகும். தூதரே! உம்முடைய தோழர்கள் தங்களின் செல்வங்களிலிருந்து உபரியாக எதைச் செலவுசெய்ய வேண்டும் என்றும் கேட்கிறார்கள். நீர் அவர்களிடம் கூறுவீராக: உங்களின் தேவைபோக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் (இது ஆரம்பத்தில் இறக்கப்பட்ட கட்டளையாகும். பின்னர் அல்லாஹ் குறித்த பொருட்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுகளையுடைய ஸகாத்தை கடமையாக்கினான்). நீங்கள் சிந்திக்கும் பொருட்டு, இதுபோன்ற சந்தேகமற்ற, தெளிவான போதனைகளைக் கொண்டு அல்லாஹ் மார்க்கத்தின் சட்டங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• الجهل بعواقب الأمور قد يجعل المرء يكره ما ينفعه ويحب ما يضره، وعلى المرء أن يسأل الله الهداية للرشاد.
1. விஷயங்களின் பின்விளைவுகளைப் பற்றிய அறியாமையினால் மனிதன் தனக்குப் பயனளிக்கக்கூடியதை வெறுக்கிறான், தனக்குத் தீங்கிழைக்கக்கூடியதை விரும்புகிறான். மனிதன் அல்லாஹ்விடம் நேர்வழியைக் கோரி பிரார்த்திக்க வேண்டும்.

• جاء الإسلام بتعظيم الحرمات والنهي عن الاعتداء عليها، ومن أعظمها صد الناس عن سبيل الله تعالى.
2. இஸ்லாம் சில விஷயங்களைக் கண்ணியப்படுத்தி அவற்றில் வரம்புமீறுவதைத் தடைசெய்துள்ளது. அவற்றில் மிகப் பெரிய பாவம், அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களைத் தடுப்பதாகும்.

• لا يزال الكفار أبدًا حربًا على الإسلام وأهله حتَّى يخرجوهم من دينهم إن استطاعوا، والله موهن كيد الكافرين.
3. நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர்களை மார்க்கத்தை விட்டு வெளியேற்றும் வரை ஓயாமல் போரிட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆயினும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சியைப் பலவீனப்படுத்திவிடுவான்.

• الإيمان بالله تعالى، والهجرة إليه، والجهاد في سبيله؛ أعظم الوسائل التي ينال بها المرء رحمة الله ومغفرته.
4. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொள்வது, அவன் பக்கம் புலம்பெயர்ந்து செல்வது, அவனுடைய பாதையில் ஜிஹாது செய்வது மனிதன் அல்லாஹ்வின் கருணையையும் மன்னிப்பையும் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளாகும்.

• حرّمت الشريعة كل ما فيه ضرر غالب وإن كان فيه بعض المنافع؛ مراعاة لمصلحة العباد.
5. அடியார்களின் நன்மையைக் கவனத்தில்கொண்டு குறைவான பயனையும் அதிகமான தீங்குளையும் பெற்ற அனைத்தையும் ஷரீஆ தடைசெய்துள்ளது.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (219) سۈرە: بەقەرە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش