قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى ئايەت: (220) سۈرە: سۈرە بەقەرە
فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ— وَیَسْـَٔلُوْنَكَ عَنِ الْیَتٰمٰی ؕ— قُلْ اِصْلَاحٌ لَّهُمْ خَیْرٌ ؕ— وَاِنْ تُخَالِطُوْهُمْ فَاِخْوَانُكُمْ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَعْنَتَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
2.220. இவ்வுலகிலும் மறுவுலகிலும் உங்களுக்குப் பயன்தரக்கூடிய விஷயங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே அவன் இவற்றை விதித்துள்ளான். தூதரே! உம்முடைய தோழர்கள் அநாதைகளை பொறுப்பேற்பது குறித்து, அவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? உணவு, வசிப்பிடம் ஆகிய செவினங்களில் அவர்களின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிக்கலாமா? என்றெல்லாம் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் அவர்களுக்குக் கூறுவீராக: அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு கலக்காமலும், அவற்றிலிருந்து இலாபத்தைப் பெறாமலும் நீங்கள் அவர்களின் செல்வங்களைப் பராமரிப்பது அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்ததும் அதிகக் கூலியை பெற்றுத்தரக்கூடியதுமாகும். அதுவே அவர்களது செல்வத்துக்கும் சிறந்ததும் பாதுகாப்புமாகும். நீங்கள் அவர்களின் செல்வங்களை உங்களின் செல்வங்களோடு சேர்த்து செலவளிப்பதும் எவ்விதக் குற்றமுமில்லை. அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களாவர். சகோதரர்கள் ஒருவருக்கொருவர் உதவிசெய்வார்கள். ஒருவர் மற்றவரின் விவகாரங்களில் பங்கெடுப்பார்கள். பொறுப்பாளிகளில் யார் அநாதைகளின் செல்வங்களை தங்களின் செல்வங்களோடு சேர்த்து அபகரிக்க நாடுபவர்கள், யார் அவற்றை முறையாக பராமரிக்க நாடுபவர்கள் என்பதையும் அல்லாஹ் நன்கறிவான். அல்லாஹ் நாடினால் அநாதைகளின் விவகாரத்தில் உங்களைச் சிரமத்தில் ஆழ்த்தியிருப்பான். ஆயினும் அவன் அவர்களுடன் நடந்துகொள்ளும் முறையை இலகுவாக்கித்தந்துள்ளான். ஏனெனில் மார்க்கம் இலகுவானது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. தனது படைப்பு, திட்டமிடல், சட்டமியற்றல் ஆகியவற்றில் அவன் ஞானம்மிக்கவன்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• تحريم النكاح بين المسلمين والمشركين، وذلك لبُعد ما بين الشرك والإيمان.
1. இணைவைப்பாளர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே திருமண உறவு தடைசெய்யப்பட்டுள்ளது. இது ஈமானுக்கும் ஷிர்க்கிற்கும் இடையேயுள்ள தூரத்தினாலாகும்.

• دلت الآية على اشتراط الولي عند عقد النكاح؛ لأن الله تعالى خاطب الأولياء لمّا نهى عن تزويج المشركين.
2. திருமண ஒப்பந்தத்திற்கு பெண்ணின் பொறுப்பாளர் (வலீ) அவசியமாகும். ஏனெனில் அல்லாஹ் "இணைவைப்பாளர்களுக்கு மணமுடித்துக் கொடுக்காதீர்கள்" என்று பெண்ணின் பொறுப்பாளர்களை நோக்கியே உரையாடுகின்றான்.

• حث الشريعة على الطهارة الحسية من النجاسات والأقذار، والطهارة المعنوية من الشرك والمعاصي.
3. அசுத்தம் போன்ற வெளிரங்கமான அழுக்குகளிலிருந்தும் ஷிர்க், பாவங்கள் போன்ற ஆன்மரீதியான அழுக்குகளிலிருந்தும் தூய்மையாக இருக்கும்படி மார்க்கம் வலியுறுத்துகிறது.

• ترغيب المؤمن في أن يكون نظره في أعماله - حتى ما يتعلق بالملذات - إلى الدار الآخرة، فيقدم لنفسه ما ينفعه فيها.
4. இறைவிசுவாசியின் உடல்ரீதியான இன்பம் உட்பட அவனது அனைத்து காரியங்களிலும் அவனது பார்வை மறுமையை நோக்கியதாக இருக்கவேண்டும். அங்கு பயன்தருபவற்றையை முற்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும்.

 
مەنالار تەرجىمىسى ئايەت: (220) سۈرە: سۈرە بەقەرە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم - تەرجىمىلەر مۇندەرىجىسى

الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم، صادر عن مركز تفسير للدراسات القرآنية.

تاقاش