قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
7 : 39

اِنْ تَكْفُرُوْا فَاِنَّ اللّٰهَ غَنِیٌّ عَنْكُمْ ۫— وَلَا یَرْضٰی لِعِبَادِهِ الْكُفْرَ ۚ— وَاِنْ تَشْكُرُوْا یَرْضَهُ لَكُمْ ؕ— وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— ثُمَّ اِلٰی رَبِّكُمْ مَّرْجِعُكُمْ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

39.7. -மனிதர்களே!- நீங்கள் உங்கள் இறைவனை நிராகரித்தால் நிச்சயமாக அவன் உங்களின் நம்பிக்கையைவிட்டும் நிச்சயமாக அவன் தேவையற்றவன். உங்களின் நிராகரிப்பால் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்பட்டு விடப்போவதில்லை. திட்டமாக உங்கள் நிராகரிப்பின் தீங்கு உங்களுக்கே கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்கள் தன்னை நிராகரிப்பதை விரும்ப மாட்டான். நிராகரிக்கும்படி அவர்களை ஏவ மாட்டான். ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான, தீய காரியங்களை செய்யும்படி கட்டளையிட மாட்டான். நீங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அவன் மீது நம்பிக்கைகொண்டால் அவன் உங்கள் நன்றியுணர்வை ஏற்றுக் கொள்வான். அதற்காக அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். ஒருவர் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது. மாறாக ஒவ்வொருவரும் தான் சம்பாதித்தவற்றிற்குப் பிணையாக உள்ளார்கள். பின்னர் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் மட்டுமே திரும்ப வேண்டும். அவன் நீங்கள் உலகில் செய்துகொண்டிருந்த செயல்களைக்குறித்து உங்களுக்கு அறிவிப்பான். உங்களின் செயல்களுக்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான். நிச்சயமாக அவன் தன் அடியார்களின் உள்ளங்களில் உள்ளவற்றையும் நன்கறிந்தவன். அவற்றில் இருந்து எதுவும் அவனைவிட்டு மறைய முடியாது. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• رعاية الله للإنسان في بطن أمه.
1. தாயின் வயிற்றில் மனிதனை அல்லாஹ் பராமரித்தல். info

• ثبوت صفة الغنى وصفة الرضا لله.
2. தேவையற்று இருத்தல், திருப்தி என்ற இரு பண்புகளும் அல்லாஹ்வுக்கு இருக்கின்றன என்பது உறுதியாகிறது. info

• تعرّف الكافر إلى الله في الشدة وتنكّره له في الرخاء، دليل على تخبطه واضطرابه.
3. நிராகரிப்பாளன் துன்பத்தில்தான் இறைவனை அறிந்துகொள்கிறான். மகிழ்ச்சியில் இறைவனை மறுக்கிறான். இது அவனது தடுமாற்றத்தின் அடையாளமாகும். info

• الخوف والرجاء صفتان من صفات أهل الإيمان.
4. அச்சமும் ஆதரவும் நம்பிக்கையாளர்களின் பண்புகளில் காணப்படும் இரு பண்புகளாகும். info