قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
24 : 45

وَقَالُوْا مَا هِیَ اِلَّا حَیَاتُنَا الدُّنْیَا نَمُوْتُ وَنَحْیَا وَمَا یُهْلِكُنَاۤ اِلَّا الدَّهْرُ ۚ— وَمَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ ۚ— اِنْ هُمْ اِلَّا یَظُنُّوْنَ ۟

45.24. மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுக்கும் நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. அதற்குப் பிறகு எந்த வாழ்க்கையும் இல்லை. ஒரு தலைமுறை மனிதர்கள் மரணிக்கிறார்கள். அவர்கள் திரும்பி வருவதில்லை. இன்னும் சில தலைமுறைகள் வாழ்கிறார்கள். இரவு, பகல் மாறிமாறி வருவதே நம்மை மரணிக்கச் செய்கின்றது.” மீண்டும் எழுப்பப்படுவதை நிராகரிப்பதற்கு அவர்களிடம் எந்த அறிவும் இல்லை. அவர்கள் யூகம்தான் கொள்கிறார்கள். யூகம் எந்த உறுதியையும் அளிப்பதில்லை. info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• اتباع الهوى يهلك صاحبه، ويحجب عنه أسباب التوفيق.
1. மனஇச்சையைப் பின்பற்றுவனை அது அழித்துவிடும். திருந்தும் வாய்ப்புக்கான காரணிகளை அவனை விட்டும் தடுத்துவிடும். info

• هول يوم القيامة.
2. மறுமை நாளின் பயங்கரம். info

• الظن لا يغني من الحق شيئًا، خاصةً في مجال الاعتقاد.
3. யூகம் எந்த உறுதியையும் தராது. அதுவும் குறிப்பாக கொள்கை விஷயங்களில். info