Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: جۇمۇئە   ئايەت:
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰی ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَیْعَ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
62.9. அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! இமாம் மிம்பரில் ஏறிய பிறகு அதான் கூறுபவர் வெள்ளிக் கிழமை நாளில் (ஜுமுஆ) தொழுகைக்காக அழைத்தால் உரையிலும் தொழுகையிலும் கலந்துகொள்ள பள்ளியின்பால் விரையுங்கள். வழிபடுவதை விட்டும் உங்களை ஈடுபடுத்திவிடாமல் இருப்பதற்காக வியாபாரத்தை விட்டுவிடுங்கள். -நம்பிக்கையாளர்களே!- நீங்கள் இதனை அறிந்தவர்களாக இருந்தால் மேற்கூறப்பட்டவாறு ஜும்ஆ தொழுகைக்கு அதான் கூறப்பட்ட பிறகு வியாபாரத்தை விட்டுவிட்டு பள்ளிக்கு விரைவதே உங்களுக்குச் சிறந்ததாகும். எனவே அல்லாஹ் உங்களுக்கு இட்ட கட்டளையைச் செயல்படுத்துங்கள்.
ئەرەپچە تەپسىرلەر:
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
62.10. நீங்கள் ஜுமுஆ தொழுகையை நிறைவுசெய்துவிட்டால் ஹலாலாக சம்பாதிப்பை தேடி, உங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காக பூமியில் பரவிவிடுங்கள். அனுமதிக்கப்பட்ட சம்பாதிப்பு, இலாபத்தின் ஊடாக நீங்கள் அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள். நீங்கள் உங்களின் வாழ்வாரத் தேடலுக்கிடையிலும் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருங்கள். உங்கள் வாழ்வாதார தேடல் அல்லாஹ்வை நினைவுபடுத்துவதை விட்டும் உங்களை மறக்கடிக்கச் செய்துவிடக்கூடாது. அதனால் நீங்கள் விரும்புவதைப் பெற்று அஞ்சும் விஷயத்திலிருந்து விடுதலையடைந்து வெற்றியடையலாம்.
ئەرەپچە تەپسىرلەر:
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا ١نْفَضُّوْۤا اِلَیْهَا وَتَرَكُوْكَ قَآىِٕمًا ؕ— قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ؕ— وَاللّٰهُ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟۠
62.11. -தூதரே!- சில முஸ்லிம்கள் வியாபாரத்தையோ, வேடிக்கையையோ கண்டால் உம்மை மிம்பரில் நின்ற நிலையில் விட்டுவிட்டு அதன்பால் வெளியேறிச்சென்றுவிடுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களின் நற்செயலுக்காக அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் கூலி நீங்கள் தேடிச் சென்ற வியாபாரம் மற்றும் வேடிக்கையை விடச் சிறந்ததாகும். வாழ்வாதாரம் அளிப்பதில் அல்லாஹ்வே மிகச் சிறந்தவன்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• وجوب السعي إلى الجمعة بعد النداء وحرمة ما سواه من الدنيا إلا لعذر.
1. ஜுமுஆவுக்கான அழைப்பு விடுக்கப்பட்டவுடன் அதன்பால் விரைவது கட்டாயமாகும். தகுந்த காரணமின்றி உலக அலுவல் எதிலும் ஈடுபடுவது ஹராமாகும்.

• تخصيص سورة للمنافقين فيه تنبيه على خطورتهم وخفاء أمرهم.
2. நயவஞ்சகர்களைப்பற்றி மாத்திரம் குறிப்பிடுவதற்கு தனியொரு அத்தியாயத்தை அருளியிருப்பது அவர்களின் பாரதூரத்துக்கும் மறைவான தன்மைக்கும் சான்றாகும்.

• العبرة بصلاح الباطن لا بجمال الظاهر ولا حسن المنطق.
3. உள்ரங்கம் சீராகுவதே கவனத்தில் கொள்ளப்படுமே தவிர அழகான தோற்றமோ, நாவன்மையோ அல்ல.

 
مەنالار تەرجىمىسى سۈرە: جۇمۇئە
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش