Check out the new design

قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى * - تەرجىمىلەر مۇندەرىجىسى


مەنالار تەرجىمىسى سۈرە: تەلاق   ئايەت:

அத்தலாக்

سۈرىنىڭ مەقسەتلىرىدىن:
بيان أحكام الطلاق وتعظيم حدوده وثمرات التقوى.
விவாகரத்தின் சட்டதிட்டங்களைத் தெளிவுபடுத்தி அதன் வரம்புகளை மகத்துவப்படுத்தலும், இறையச்சத்தின் பிரதிபலன்களைத் தெளிவுபடுத்தலும்.

یٰۤاَیُّهَا النَّبِیُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ۚ— وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ ۚ— لَا تُخْرِجُوْهُنَّ مِنْ بُیُوْتِهِنَّ وَلَا یَخْرُجْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیْنَ بِفَاحِشَةٍ مُّبَیِّنَةٍ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ؕ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ؕ— لَا تَدْرِیْ لَعَلَّ اللّٰهَ یُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا ۟
65.1. நபியே! நீரோ உம் சமூகத்தில் யாரேனுமோ தம் மனைவியரை விவாகரத்து செய்ய விரும்பினால் அந்த மனைவியர் உடலுறவு இடம்பெறாத தூய்மையாக இருக்கும் ஆரம்ப காலங்களில் விவாகரத்து செய்யுங்கள். நீங்கள் விரும்பினால் அவர்களை திரும்ப மனைவியாக மீட்டிக்கொள்ளும் பொருட்டு இத்தாவின் கால அளவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். விவாகரத்து செய்யப்பட்ட பெண்களை அவர்கள் வசிக்கும் உங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றி விடாதீர்கள். அவர்களும் தங்களின் காலஅளவு முடியும் வரை வெளியேறக்கூடாது. ஆனால் அவர்கள் வெளிப்படையான பாவமான விபச்சாரம் போன்றவற்றில் ஈடுப்பட்டாலே தவிர. இந்த சட்டங்கள் அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஏற்படுத்திய வரம்புகளாகும். யார் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறாரோ அவர் இறைவனுக்கு மாறுசெய்வதன் மூலம் அழிவிற்கான காரணங்களில் ஈடுபட்டு தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார். -விவாகரத்து செய்பவரே!-உமக்குத் தெரியாது, விவாகரத்தின் பின்னரும் அல்லாஹ் நீ எதிர்பார்க்காத ஒன்றை ஏற்படுத்தி நீ அவளை மீட்டிக்கொள்ளும் வாய்ப்புண்டு.
ئەرەپچە تەپسىرلەر:
فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَیْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِیْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ ؕ— ذٰلِكُمْ یُوْعَظُ بِهٖ مَنْ كَانَ یُؤْمِنُ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ۬— وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۟ۙ
65.2. அவர்கள் தங்களின் கால அளவை நெருங்கிவிட்டால் அவர்களுடன் நல்லமுறையில் விரும்பி வாழ்க்கை நடத்துவதற்காக அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள் அல்லது தங்களின் கால அளவை நிறைவு செய்து தமது உரிமையை அவர்கள் பெறும் பொருட்டு அவர்களை மீட்டாமல் அவர்களுக்குரிய உரிமையைக் கொடுத்து விட்டுவிடுங்கள். நீங்கள் அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளவோ அல்லது பிரிந்துவிடவோ நாடினால் சச்சரவைத் தீர்க்கும் பொருட்டு உங்களிலிருந்து இரு உறுதியான சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். -சாட்சியாளர்களே!- அல்லாஹ்வின் திருப்தியை நாடி சாட்சி கூறுங்கள். மேற்கூறப்பட்ட இந்த சட்டங்களின் மூலம் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்கள்தாம் அறிவுரையைக் கொண்டு பயனடைவார்கள். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவருக்கு அல்லாஹ் நெருக்கடி மற்றும் சங்கடத்திலிருந்து வெளியேறக்கூடிய ஒரு வழியை ஏற்படுத்துவான்.
ئەرەپچە تەپسىرلەر:
وَّیَرْزُقْهُ مِنْ حَیْثُ لَا یَحْتَسِبُ ؕ— وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ— اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ ؕ— قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَیْءٍ قَدْرًا ۟
65.3. அவர் நினைத்துப் பார்க்காத புறத்திலிருந்து அவருக்கு கணக்கில்லாமல் அவன் வாழ்வாதாரம் வழங்குவான். யார் தன்னுடைய எல்லா விவகாரங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்திருக்கிறாரோ அவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் விஷயத்தை நிறைவேற்றியே தீருவான். எதுவும் அவனுக்கு இயலாதது அல்ல. எதுவும் அவனிடமிருந்து தப்பிவிட முடியாது. அவன் ஒவ்வொரு விஷயமும் முடிவதற்கான ஒரு அளவை நிர்ணயித்துள்ளான். இன்பத்திற்கும் துன்பத்திற்கும் ஓர் எல்லை உண்டு. இரண்டில் எதுவும் மனிதனுக்கு நிரந்தரமானது அல்ல.
ئەرەپچە تەپسىرلەر:
وَا یَىِٕسْنَ مِنَ الْمَحِیْضِ مِنْ نِّسَآىِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍ وَّا لَمْ یَحِضْنَ ؕ— وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ یَّضَعْنَ حَمْلَهُنَّ ؕ— وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ یُسْرًا ۟
65.4. வயது அதிகரிப்பின் காரணமாக மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்குரிய கால அளவில் உங்களுக்கு ஐயம் ஏற்பட்டால் அது மூன்று மாதங்களாகும். சிறுவயது காரணமாக மாதவிடாய் இன்னும் தொடங்காத பெண்களுக்குமான கால அளவும் மூன்று மாதங்களே. விவாகரத்து செய்யப்பட்ட அல்லது கணவன் இறந்துவிட்ட கர்ப்பமான பெண்களுக்கான கால அளவு குழந்தை பெறும் வரையிலாகும். யார் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவரது எல்லா விவகாரங்களையும் கஷ்டங்களையும் அல்லாஹ் இலகுபடுத்தித் தருவான்.
ئەرەپچە تەپسىرلەر:
ذٰلِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗۤ اِلَیْكُمْ ؕ— وَمَنْ یَّتَّقِ اللّٰهَ یُكَفِّرْ عَنْهُ سَیِّاٰتِهٖ وَیُعْظِمْ لَهٗۤ اَجْرًا ۟
65.5. -நம்பிக்கையாளர்களே!- மேற்கூறப்பட்ட விவாகரத்து, திரும்ப அழைத்துக்கொள்ளுதல் மற்றும் கால அளவுக்கான சட்டங்கள் நீங்கள் அவற்றின்படி செயல்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு அளித்த கட்டளைகளாகும். யாரெல்லாம் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சுகிறாரோ அவர்கள் செய்த பாவங்களை அவன் போக்கி விடுவான். மறுமையில் அவர்களுக்குப் பெரும் கூலியை வழங்குவான். அது, அவர்களை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வதும் என்றும் முடிவுறாத நிலையான அருட்கொடைகளை பெறுவதுமாகும்.
ئەرەپچە تەپسىرلەر:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• خطاب النبي صلى الله عليه وسلم خطاب لأمته ما لم تثبت له الخصوصية.
1. தூதரை விளித்து உரையாடுவது, அவருக்கு மட்டுமே உரித்தானது என்பது உறுதியாகாதவரை அவரது சமூகத்தை விளித்து உரையாடப்பட்டதாகவே கருதப்படும்.

• وجوب السكنى والنفقة للمطلقة الرجعية.
2. திரும்ப அழைத்துக்கொள்ளத்தக்க விவாகரத்து வழங்கப்பட்ட பெண்களுக்கு தங்குமிடமும் செலவீனமும் வழங்குவது கணவன்மீது கட்டாயக் கடமையாகும்.

• النَّدْب إلى الإشهاد حسمًا لمادة الخلاف.
3. முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காக சாட்சிகளை ஏற்படுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

• كثرة فوائد التقوى وعظمها.
4. இறையச்சத்தின் அதிக பயன்களும் மகிமைகளும்.

 
مەنالار تەرجىمىسى سۈرە: تەلاق
سۈرە مۇندەرىجىسى بەت نومۇرى
 
قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى - تەرجىمىلەر مۇندەرىجىسى

قۇرئان تەتقىقاتى تەپسىر مەركىزى چىقارغان.

تاقاش