قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىم قىسقىچە تەپسىرىنىڭ تامىلچە تەرجىمىسى

external-link copy
120 : 9

مَا كَانَ لِاَهْلِ الْمَدِیْنَةِ وَمَنْ حَوْلَهُمْ مِّنَ الْاَعْرَابِ اَنْ یَّتَخَلَّفُوْا عَنْ رَّسُوْلِ اللّٰهِ وَلَا یَرْغَبُوْا بِاَنْفُسِهِمْ عَنْ نَّفْسِهٖ ؕ— ذٰلِكَ بِاَنَّهُمْ لَا یُصِیْبُهُمْ ظَمَاٌ وَّلَا نَصَبٌ وَّلَا مَخْمَصَةٌ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَلَا یَطَـُٔوْنَ مَوْطِئًا یَّغِیْظُ الْكُفَّارَ وَلَا یَنَالُوْنَ مِنْ عَدُوٍّ نَّیْلًا اِلَّا كُتِبَ لَهُمْ بِهٖ عَمَلٌ صَالِحٌ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُحْسِنِیْنَ ۟ۙ

9.120. மதீனாவாசிகளுக்கும் அவர்களைச் சுற்றியுள்ள நாட்டுப்புறவாசிகளுக்கும் அல்லாஹ்வின் தூதர் போருக்காகப் புறப்பட்டால் அவரை விட்டுப் பின்தங்குவதோ அவரின் உயிரைவிட தங்களின் உயிரை பெரிதாக எண்ணுவதோ உகந்ததல்ல. மாறாக அவர்கள் தூதருக்காக தம் உயிரை அர்ப்பணிக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி மற்றும் நிராகரிப்பாளர்களை ஆத்திரமூட்டுவதற்காக அவர்களின் ஊர்களில் அவர்கள் எடுத்துவைக்கும் காலடிகள், எதிரிகளைக் கொல்லுதல், கைதிகளாகப் பிடித்தல், போர்ச் செல்வங்களையோ தோல்வியையோ பெறுதல் என ஒவ்வொன்றுக்கும் பகரமாக அவர்களுக்கு நன்மை எழுதப்படுகிறது. நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரின் கூலியை வீணாக்கிவிடுவதில்லை. மாறாக அவன் அவர்களுக்கு அதனை முழுமையாகவும் இன்னும் அதிகமாகவும் வழங்கிவிடுகிறான். info
التفاسير:
بۇ بەتتىكى ئايەتلەردىن ئېلىنغان مەزمۇنلار:
• وجوب تقوى الله والصدق وأنهما سبب للنجاة من الهلاك.
1. அல்லாஹ்வை அஞ்சுவதும் உண்மை பேசுவதும் கட்டாயமாகும். அவை அழிவிலிருந்து தப்புவதற்கான காரணிகளாகும். info

• عظم فضل النفقة في سبيل الله.
2. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் சிறப்பின் மகத்துவம் தெளிவாகிறது. info

• وجوب التفقُّه في الدين مثله مثل الجهاد، وأنه لا قيام للدين إلا بهما معًا.
3. மார்க்கத்தில் தெளிவு பெறுவது கட்டாயமாகும். அது போர் புரிவதற்குச் சமனாகும். அவையிரண்டின் மூலமே மார்க்கம் நிலைக்கும். info