قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - الترجمة التاميلية - عمر شريف - نسخة مختصرة

external-link copy
33 : 13

اَفَمَنْ هُوَ قَآىِٕمٌ عَلٰی كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ ۚ— وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَآءَ ؕ— قُلْ سَمُّوْهُمْ ؕ— اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا یَعْلَمُ فِی الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ؕ— بَلْ زُیِّنَ لِلَّذِیْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِیْلِ ؕ— وَمَنْ یُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ۟

ஒவ்வொரு ஆன்மாவும் அவை செய்தவற்றுக்கு ஏற்ப அவற்றை நிர்வகிப்பவனா (எதையும் செய்ய சக்தியற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவான்)? அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று பெயரிடமுடியுமா?) அல்லது பூமியில் அவன் அறியாததை அல்லது பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.) மாறாக! நிராகரித்தவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சி அலங்கரிக்கப்பட்டது. (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை. info
التفاسير: